அத்தியாயம் 3



கடற்கரையை நோக்கி இருந்த வாயிலில் கிடந்த சாய்வான மர இருக்கையில் படுத்திருந்து தனது கையிலிருந்த அச்சிடப்பட்ட காகிதத்தில் இருந்த 'மித்ரவிந்தா' என்ற பெயரை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் முகுந்த்.

திடீரென செல்போன் இசைக்க அதை எடுத்தவனிடம் பேசியது அவனது அன்பான கேப்டன் சரத் சர்மா.

"சொல்லுங்க கேப்"

"வாட் ஆர் யூ டூயிங் யங் மேன்? மானிங்ல இருந்து உன்ட இருந்து கால் வரலனு உன்னோட பாபி தவுசண்ட் டைம்ஸ் சொல்லிட்டா. சார் ரொம்ப பிசியா இருக்கிங்களா?"

"நாட் அட் ஆல் கேப். பைக் எடுத்துட்டு ஜஸ்ட் ஒரு டிரைவ் போய்ட்டு வந்தேன். ஃபீலிங் டயர்ட். அதனால கடல்காத்தை ரசிச்சிட்டிருக்கேன்"

"டேக் கேர் மேன். மீடியா பீபிள் எப்ப நீ சிக்குவனு காத்திருக்காங்க. அதனால கொஞ்சநாள் சில் பண்ணுறேனு சொல்லுறத நிறுத்து"

"நீங்க சொன்னா நான் கண்டிப்பா கேட்டுக்குவேன் கேப். இன்னிக்கு தான் நீயும் பாபியும் அடிக்கடி என்னை பேம்பர் பண்ணுறதோட அர்த்தம் புரிஞ்சிச்சி. ஐயாம் வெரி லக்கி டூ ஹேவ் அ காட்ஃபாதர் லைக் யூ"

முகுந்தின் பேச்சில் நன்றியுணர்ச்சியுடன் பேரன்பும் கலந்திருந்தது. அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்!

சரத் சர்மாவிடம் அனைத்தையும் சொன்னவன் வயோதிகப்பெண்மணிக்கு நேர்ந்ததையும் தான் சந்தித்த பேரழகியை பற்றியும் சொல்லவில்லை. மறைக்கவேண்டுமென எண்ணவில்லை. ஆனால் ஏனோ அவனது தேவதைப்பெண்ணைப் பற்றி யாரிடமும் பகிர்ந்து கொள்ள அவனுக்கு தோணவில்லை.

சரத் சர்மா கிரிக்கெட் போர்டின் முக்கிய அதிகாரியான விஷ்ணுவர்தனின் திருமணத்துக்குத் தாங்கள் அனைவரும் செல்லலாம் என யோசித்து வைத்திருந்தவன் அச்சமயம் பார்த்து அவனது தந்தைக்குச் சற்று உடல்நலமில்லை என்ற தகவல் வரவும் தானும் சோனாக்ஷியும் அன்றைய தினம் மாலையில் மும்பைக்கு விமானம் ஏறவிருப்பதாகக் கூறினான்.

எனவே முகுந்துடன் சேர்ந்து இன்னும் சிலரும் அந்த திருமணத்துக்குச் செல்ல வேண்டும் என சொல்ல அதற்கு சரியென உடனே ஒப்புக்கொண்டான் முகுந்த். கூடவே அடுத்த டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடப்பதற்கான காலம் இன்னும் சிறிது இருப்பதால் தான் பயிற்சி ஆட்டத்தின் போது மும்பை வருவதாக கூறிவிட்டுப் போனை வைத்தான்.

இன்னும் ஏழு நாட்கள் மட்டும் சென்னையில் தங்கலாம் என்ற எண்ணத்துடன் இருந்தவனை மாதக்கணக்கில் அங்கே தங்கச் செய்த பெருமை மித்ரவிந்தாவையே சாரும். அவளது பெயர், முகவரி தொலைபேசி எண் கிடைத்துவிட்டாலும் இன்னும் அவளிடம் முறைப்படி தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை என்ற குறை முகுந்தின் மனதில்.

எனவே இங்கே தங்க போகிற காலகட்டத்தில் அவளிடம் அறிமுகமாகி பேசிப் பழகி அவளைத் தன்னவளாக்கிக் கொள்ளும் எண்ணம் மட்டும் அவன் மனதில் உறுதி பெற்றுவிட தன் முன்னே ஆர்ப்பரித்து அலைக்கரங்களை நீட்டி விளையாடும் கடல் மாதாவை உற்சாகத்துடன் கண்ணுற்றபடி சாய்வு இருக்கையில் இன்னும் வசதியாகச் சாய்ந்து கொண்டான்.

காதுக்குள் "தும் ஹி ஹோ" என ரீங்காரம் செய்ய ஆரம்பித்த அர்ஜித்சிங்கின் குரலைக் கேட்டபடி விழிகளை மூடிக் கொண்டான் முகுந்த். விழிகளுக்குள் நீண்ட கருங்கூந்தலுடன் கூடிய பேரழகியாக மித்ரவிந்தாவின் பிம்பம் வந்து செல்ல அதை ரசித்தபடி புன்னகைத்தான் அந்த பேரழகிக்கேற்ற ஆணழகன்.

💝💝💝💝💝💝

நூலகத்தில் புத்தகத்தேடலில் மூழ்கியிருந்தாள் மித்ரவிந்தா. அவள் தேடிய டேவிட் அன்ட் ரிச்சர்ட் எழுதிய அப்ஸ்ட்ராக்ட் அல்ஜிப்ரா புத்தகம் கிடைப்பேனா என ஆட்டம் காட்டியது. வேறு ஆத்தருடையது எடுக்கவா என சம்யுக்தாவிடம் கேட்டுவிட்டுப் போனை வைத்தவள் வேறு புத்தகத்தை எடுத்து என்ட்ரி போட்டுவிட்டு தனது கைப்பைக்குள் வைத்துக் கொண்டாள்.



நூலகத்தை விட்டு வெளியேறியவள் மீண்டும் பேருந்து நிலையத்தை நோக்கி முன்னேறினாள். அப்போது அவளை ஒரு ராயல் என்பீல்ட் கடந்து சென்றது. அந்த நிமிடம் அவளுக்கு தன்னை ஸ்கேன் செய்த தலைக்கவசக்காரன் நினைவுக்கு வந்தான்.

இப்போது ஏன் அவனை நினைக்கிறாய் மனமே? அவன் யாரோ? எந்த ஊர்க்காரனோ? தான் எண்ணும் அளவுக்கு இல்லாது அவன் தன்னை சாதாரணமாக கூட பார்த்திருக்கலாம் அல்லவா! இருந்தாலும் அந்தக் கூர்விழிகளின் எக்ஸ்ரே பார்வை அவளின் மனதில் ஆழமாய் பதிந்து போனது.

யோசிக்கும் போதே பேருந்து வந்துவிடவே அதில் ஏறி ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து கொண்டவளுக்கு போனில் யாரோ அழைக்க யாரென எடுத்துப் பார்க்கும் போது அவளது தோழி நிஹாரிகா அழைத்திருந்தாள்.

என்னவென கேட்ட மித்ரவிந்தாவிடம் "இன்னும் டூ டேய்ஸ்ல எனக்கு சங்கீத் இருக்கு. உனக்கும் சம்யூக்கும் அது நியாபகம் இருக்கா?" என்று ஆதங்கத்துடன் வினவினாள்.

"அத மறக்க முடியுமா மகாராணி? கண்டிப்பா நாங்க வருவோம். எங்க ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி லெஹங்கா கூட வாங்கிட்டோம். அத போட்டுட்டு கேட்வாக் பண்றதுக்காகவாது வருவோம் நிஹா"

நிஹாரிகாவின் திருமணம் காதல் திருமணம் வேறு. அவளது கணவன் இந்திய கிரிக்கெட் போர்டில் முக்கியப்பதவி வகிப்பவன். நிஹாரிகாவின் கிரிக்கெட் பைத்தியத்தின் காரணமாகத் தான் இருவருக்கும் அறிமுகம் ஆனது. இத்தனைக்கும் முதலில் இருவருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட அது அடுத்தடுத்த சந்திப்புகளில் காதலாக மாறி இன்று கல்யாணத்தில் கனிந்துவிட்டது.

கல்யாண பிசியில் இருப்பவள் தங்களை நியாபகம் வைத்திருப்பதே பெரிது என எண்ணிக் கொண்டவளின் உள்ளத்தில் காதல் என்ற உணர்வு அத்துணை வலிமை மிக்கதா என்ற கேள்வி எழுந்தது.

கூடவே "யாருக்குத் தெரியும்? ஒருவேளை நம்மளும் ஒரு நாள் காதலிச்சா நிஹா மாதிரி மாறிருவோமோ?" என தன்னைத் தானே குறுக்குக்கேள்வி கேட்டபடி அமர்ந்திருக்க அவளது வீடு இருக்குமிடமும் வந்துவிட்டது.

இறங்கியவள் வீட்டை நோக்கி விறுவிறுவென நடை போட்டாள். வழக்கம் போல அமைதியான சூழலுடன் இருந்த அந்த தெருவில் பகலில் ஒரு ஈ காக்கா கூட இல்லை.

வேகநடையில் வீட்டை அடைந்தவளுக்கு கடலைமாவு வெள்ளரிக்காய் அலங்காரத்துடன் கூடிய சம்யுக்தாவின் தரிசனம் கிடைத்ததும் பக்கென்று நகைத்துவிட்டாள்.

மித்ரவிந்தாவின் சிரிப்பொலியைக் கேட்டு விலுக்கென்று எழுந்து அமர்ந்த சம்யுக்தா "ஏன் லேட்டா வந்திருக்க மித்து? டிராபிக் அதிகமா?" என்று கேட்டவாறு தனது கண்களை இவ்வளவு நேரம் காவல் காத்திருந்த வெள்ளரிக்காய் துண்டுகளை எடுத்து மோடா மீது வைத்தாள்.

"ம்ஹூம். டிராபிக் எப்பயும் போல தான். இன்னிக்கு நம்ம பஸ் ஸ்டாப் பக்கம் ஒரு சின்ன ஆக்சிடெண்ட் சம்யூ. ஆக்சுவலா இதுல யார் மேலயும் தப்பு சொல்ல முடியாது. கீழ விழுந்த பாட்டிய ஹாஸ்பிடலுக்கு அழைச்சிட்டு போனேன். டாக்டர் ஈவினிங்க் வரைக்கும் பாத்துட்டு டிஸ்சார்ஜ் பண்றேனு சொல்லிட்டார். பில் கட்டிட்டு லைப்ரரிக்கும் போய்ட்டு வரதுக்கு இவ்வளவு நேரமாயிடுச்சி"

"ஆக்சிடெண்ட்னு சொல்லுற. போலீஸ் கேஸ் ஆகலயா மித்து?"

"மைனர் இஞ்சுரி தான் சம்யூ. அதுவும் பைக் இடிச்சதால உண்டான இஞ்சுரி இல்ல. அந்த வண்டிய பாத்த அதிர்ச்சில கீழ விழுந்ததால உண்டானது தான். வயசானவங்க இல்லயா? அதனால தான் ஈவினிங் வரைக்கும் அப்சர்வேசன்ல இருக்கட்டும்னு டாக்டர் சொல்லிட்டார்"

"பாவம் அந்தப் பாட்டிமா. சரி விடு. நீ போய் ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு கேசுவல் வியருக்கு மாறு. நான் லஞ்ச் செஞ்சு முடிச்சிட்டேன். இன்னும் பத்து நிமிசம் கழிச்சு என் ஃபேஸ் பேக்கை கலைச்சதுக்கு அப்புறமா நம்ம சாப்டுவோம்"

தோழி கூறிய அனைத்துக்கும் தலையாட்டியவள் தனது அறைக்குள் புகுந்து உடைமாற்றிவிட்டு முகம் கழுவினாள். அப்போது செல்போன் சிணுங்கி அவளை அழைக்க இப்போது யார் என சலித்துக் கொண்டே ஸ்கிரீனை பார்த்தவளால் அந்த முன் பின் அறியாத எண் யாருடையது என கண்டுபிடிக்க இயலவில்லை.

யாராக இருக்கக் கூடுமென்ற யோசனையுடன் காதில் வைத்து "ஹலோ " என்றவளுக்கு மறுமுனையின் கேட்ட ஹோவென்ற அலையோசை புதிராக இருந்தது.

அந்த அலையோசைக்கிடையே ஒரு குரல் அவள் பெயரை உச்சரித்தது.

"மித்ரவிந்தா?"

சாதாரணமாக கேட்பவர்களுக்கு அது வெறும் கேள்வியாக மட்டும் தோன்றும். ஆனால் அந்தப் பெயருக்குச் சொந்தக்காரியான மித்ரவிந்தாவுக்கு தனது பெயரை இவ்வளவு ஆழ்ந்து ரசனையும் உரிமையுமாக அழைத்த அந்தக் குரலுக்குச் சொந்தக்காரன் மீது இன்னதென புரியாத ஒரு ஆவலும் குறுகுறுப்புமான உணர்வு எழுந்தது.

கேட்ட போதிலே கேட்டவரை மயங்க செய்யும் வல்லமை படைத்த குரல் அது. திடமனநிலையற்ற பெண்ணாக இருந்தால் தலை கிறுகிறுத்து போயிருப்பாள். நம் மித்ரவிந்தா அப்படி இல்லையே!

எனவே வருவித்துக்கொண்ட தெளிவான குரலில் "எஸ். நீங்க யார்?" என்று நிதானமாக கேட்டவளின் குரலில் இப்போது மறுமுனையில் இருந்தவனது செவியில் தேன் வந்து பாய்ந்திருக்க வேண்டும்.

"ஐயாம் முன்னா. இன்னிக்கு மானிங்க் நான் ஆக்சிடெண்ட் பண்ண அந்த பாட்டிய நீங்க தான் ஹாஸ்பிடலுக்கு அழைச்சிட்டு போனிங்க" என்றதும் மித்ரவிந்தாவுக்கு அவன் யாரென புரிந்துவிட்டது.

அந்த புரிதலோடு சங்கிலித்தொடராக இன்னொரு கேள்வியும் உதயமானது.

"என் நம்பர் உங்களுக்கு எப்டி கெடச்சிது?"

"ஹாஸ்பிடல் ரிசப்ஷன்ல வாங்குனேன்"

"நான் போன ஹாஸ்பிடல் உங்களுக்கு எப்டி தெரிஞ்சிது?"

"நான் உங்க ஆட்டோவ ஃபாலோ பண்ணேன். எனக்கு எமர்ஜென்சி வேலை இருந்ததால உள்ள வந்து பாட்டிய பாக்க முடியல. அதனால ரிசப்ஷன்ல உங்க நம்பர் மட்டும் வாங்கிக்கிட்டேன்"

மித்ரவிந்தாவிற்கு ஆச்சரியம். முன் பின் தெரியாத பெண்ணின் எண்ணை இவன் இப்படி வாங்கியது தவறு. ஆனால் அவனது குரலில் இருந்த அமர்த்தல் தொனி அந்த தவறை அவன் உணர்ந்ததாக காட்டவில்லை. இது ஒன்றும் இமாயலயத் தவறல்ல என்ற அசட்டைத்தனம் மட்டுமே அதில் நிறைந்திருந்தது.

"என்னோட அனுமதி இல்லாம என் நம்பர நீங்க எப்டி வாங்கலாம்?"

குரலில் உஷ்ணத்தை ஏற்றிக் கேட்டவள் அவன் அளித்த பதிலில் வாயடைத்துப் போனாள்.

"உங்க கிட்ட டேரக்டா வாங்கிருப்பேன். ஆனா அதுக்கு முன்னாடி ஆட்டோல நீங்க ஏறிட்டிங்க"

இல்லையென்றால் வாங்கி விட்டுத் தான் விட்டிருப்பேன் என்பது போல பேசியவனின் தொனியில் அவளுக்கு எரிச்சல் மண்டியது.

"சரி. இப்ப எதுக்கு கால் பண்ணிங்க?"

"பாட்டியோட ஹெல்த்ல ஒரு பிரச்சனையும் இல்லையே?"

"இவ்வளவு அக்கறை உள்ள மனுசன் ஏன் அப்பவே எங்களோட வரல?"

"குட் கொஸ்டீன். பட் என்னால வர முடியாத சிச்சுவேசன்"

"ஹூம். சரி. இப்ப எதுக்கு எனக்கு கால் பண்ணிங்க?"

ஒரு நிமிடம் யோசித்தான் முகுந்த். உன் ஐஸ்க்ரீம் குரலைக் கேட்க தான் அழைத்தேன் என சொன்னால் இவள் என்ன மாதிரி பதிலளிப்பாள் என கற்பனை செய்து பார்த்தவனுக்குச் சிரிப்பு வரவே அதை அடக்கிக் கொண்டு அவளிடம் பேச ஆரம்பித்தான் அவன்.

"இன்னிக்கு ஈவினிங்க் அந்த பாட்டிய பாக்க ஹாஸ்பிடல் வரலாமானு தெரிஞ்சிக்க தான் கால் பண்ணேன்"

"தாராளமா போங்க சார். அவங்க இருக்குற ரூம் கிரவுண்ட் ப்ளோர்ல இருக்கு"

"அப்ப நீங்க வர மாட்டீங்களா?"

சட்டென வாய்த்துடுக்கில் கேட்டுவிட்டான். மறுமுனை அமைதி காக்கவும் "கொஞ்சம் பொறுமையா இரேன்டா" என்று அவனது மனசாட்சி அவன் தலையில் குட்டி அமைதிப்படுத்தவும் பேச்சை மாற்றினான் முகுந்த்.

"ஐ மீன் நீங்க வந்தா அவங்க ஃபேமிலில யாரும் இருந்தா கூட என் நெலமைய சொல்லி புரியவைச்சிடுவிங்க. அதனால தான் கேட்டேன். டோண்ட் டேக் மீ ராங்க்"

"இல்ல சார். நான் அவங்க ஃபேமிலிக்குக் கால் பண்ணி சொல்லிட்டேன். அவங்க யாரும் உங்கள ப்ளேம் பண்ண மாட்டாங்க" என்றாள் அவனது தந்திரத்தை அறியாதவளாக.

"இட்ஸ் ஓகே மேடம். எனக்கு தனியா போக கொஞ்சம் தயக்கமா இருந்துச்சு. மத்தபடி ஒன்னுமில்ல"

தனது இயல்புக்கு மாறான பவ்வியத்தைக் குரலில் கொட்டிப் பேசிக் கொண்டிருந்தவன் விரித்த வலையில் தானாக வந்து மாட்டிக் கொண்டாள் மித்ரவிந்தா.

"வரக் கூடாதுனு நெனைக்கல சார். ஆக்சுவலி நான் இன்னிக்கு ஈவினிங்க் சில திங்க்ஸ் வாங்க பீனிக்ஸ் மாலுக்குப் போகனும்.அந்த ஹாஸ்பிடலுக்கும் ஸ்பென்சருக்கும் தூரம் அதிகம்"

அவள் மாலையில் செல்லப் போகிற இடத்தைச் சொல்லிவிடவும் அவனது உள்ளம் குதியாட்டம் போட்டது.

"ஐ கென் அண்டர்ஸ்டாண்ட் மேடம். உங்களுக்கு எதுக்கு சிரமம்? நான் விசாரிச்சி போய்கிறேன்" என்றவன் போன் காலை கட் செய்துவிட்டு தனது படுக்கையில் பொத்தென விழுந்து கண் மூடினான்.

"மை ஹனி. ஸ்பென்சர் போறியா? நானும் அங்க வரேன் ஹனி. உன்ன நேர்ல பாக்குற அந்த தருணம் எனக்கு ரொம்ப ஸ்பெஷலா இருக்கனும்னு ஆசைப்படுறேன்" என்று சொல்லிக் கொண்டான் மென்மையாக. அவனது விரல்களோ இன்னும் மித்ரவிந்தாவின் பெயர் அச்சடிக்கப்பட்ட காகிதத்தைத் தடவிக்கொண்டிருந்தது.

"மித்ரவிந்தா... பேரை சொல்லுறப்பயே இதயத்துல ஏதோ பண்ணுதே" என்று சொல்லிக் கொண்டபடி யாருக்கோ அழைத்தான்.

"ஹலோ நான் முகுந்த் பேசுறேன்" என்றவன் இட்ட கட்டளைகள் இன்னும் சில மணிநேரங்களில் அட்சரம் பிசகாமல் நிறைவேற்றப்படும் என மறுமுனையில் உறுதியளிக்கப்படவும் மற்றொரு கோரிக்கையை வைத்தான்.

"இன்னிக்கு ஈவினிங்க் மால்ல வேற யாரும் இருக்க கூடாது. உங்க ஸ்டாப்ஸ், அப்புறம் என்னோட சேப்டிக்கு நான் அழைச்சிட்டு வர்ற காட்ஸ் மட்டும் தான் இருக்கனும்" என அழுத்தமாக கட்டளையிட்டான். அதற்கு காரணமாக தனது பாதுகாப்பை முன்னிறுத்தவும் வேறு வழியின்றி மறுமுனையில் அதற்கும் சம்மதம் தெரிவித்தனர்.

காலையில் பார்த்த காரிகையை சீக்கிரம் சந்திக்க போகும் ஆர்வத்தில் முகுந்த் எப்போதடா மாலை வரும் என பொழுதை கழிக்க ஆரம்பித்தான். அவனது மனதை ஆக்கிரமித்த மித்ரவிந்தாவோ இன்றைய தினத்தின் மாலை அவள் வாழ்வில் நிகழ்த்தப் போகும் மாற்றத்தை உணராதவளாக சம்யுக்தாவுடன் சேர்ந்து மதியவுணவை ஒரு பிடி பிடித்துக் கொண்டிருந்தாள்.







Comments

Popular posts from this blog

அத்தியாயம் 7

அத்தியாயம் 4

அத்தியாயம் 8