Posts

Showing posts from October, 2023

அத்தியாயம் 9

Image
  அத்தியாயம் 9 புகழ்வேந்தனின் திருமண வாழ்க்கையின் முதல் நாள் என்பதால் தடபுடலாக காலையுணவைச் சமைக்க சொல்லியிருந்தார் பர்வதம். இட்லி தோசை பொங்கல் என்று ஒரு பக்கம் கமகமக்க, மறுபக்கம் பூரிக்கிழங்கு, சப்பாத்தி சென்னா மசாலா என மணம் கமழ்ந்தது. டைனிங் டேபிளுக்கு வந்தவனிடம் ஆசையாக மருமகளை பற்றி கேட்டார் பர்வதம். “அவள் லேட்டா வருவாம்மா” என்று அவன் சொல்லும்போதே காலர் வைத்த அனார்கலி சுடிதாரோடு வந்தாள் ஆழினி. நாகரிக உடை அணிந்தாலும் மறக்காமல் நெற்றியில் குங்கும திலகத்துடன் வந்த மருமகளை பார்த்ததும் பர்வதம் ஓடிச்சென்று அழைத்து வந்து மகனின் அருகில் அமர வைத்தார். ஆழினி குனிந்த தலை நிமிராது அமர்ந்திருந்தாள். மாமியார் பரிமாறிய சாப்பாட்டை அமைதியாகச் சாப்பிட்டாள். “இன்னும் கொஞ்சம் சட்டினி வைத்துக்கம்மா. வெறும் பொங்கல் சாப்பிட்டால் தொண்டையில் விக்கிக்கும்” என்று அன்பாக பரிமாறிய மாமியாரின் பாசத்தில் கண்ணிமைகள் நனைந்தது. புகழ்வேந்தனோ அவளுக்கு நடந்த உபசரிப்பை விரும்பவில்லை. அதை குழைக்கும்விதமாக நக்கல் பேச்சை ஆரம்பித்தான். “ஓசி கல்யாணம், ஓசி சாப்பாடு. கலக்கிற ஆழினி” விளையாட்டாக மனைவியிடம் பேசுவது போல அவனது பேச்சு

அத்தியாயம் 8

Image
  அத்தியாயம் 8 புகழ்வேந்தன் தனது மினி பங்களாவின் ஆபிஸ் ரூமில் இருந்தான். தனது பெயருக்கு மாறியிருந்த ஆழினியின் அன்னைக்கு உரிமைப்பட்ட சொத்து சம்பந்தப்பட்ட பத்திரங்களை பார்த்துக் கொண்டிருந்தான் அவன். செங்குட்டுவனின் போனுக்குக் கால் செய்தவன் “வைதீஸ்வரன் வீட்டில என்ன நடக்குது செங்குட்டுவா?” என்று கேட்க, அவனோ “நம்ம ஆட்கள் அவங்க வீட்டை கண்காணிச்சிட்டு இருக்காங்க பாஸ். சந்தேகப்படுற விதத்தில எதுவும் நடக்கலை. அப்படி நடந்திச்சினா உடனே உங்களுக்குக் கால் பண்றேன் பாஸ்” என்றான். “சரி செங்குட்டுவா. எனக்குச் சில விவரங்கள் தெரியனும்” “யாரை பற்றி பாஸ்?” “ஆழினியோட அம்மா மீனாட்சியைப் பற்றி. அவங்களுக்கு விசுவாசமான வேலையாட்கள் யாரும் இப்போ அவங்க வீட்டில வேலை செய்யலை. அவங்க மரணத்தில மர்மம் இருக்கிறதா குடும்ப வக்கீல் வேணுகோபால் சொல்றார். எதுவோ இடிக்குது. அதை பற்றி விசாரிச்சு வை” “விசாரிக்கிறேன் பாஸ்” அவனோடு பேசிவிட்டு காலை கட் செய்தவன் அன்னையின் வற்புறுத்தலுக்காக வீட்டில் தயாரான கல்யாணவிருந்தை ஆழினியோடு சாப்பிட ஒப்புக்கொண்டான். சாப்பிடும் போது குமுதினி செய்த குறும்பு விளையாட்டுகளை ஒரு அண்ணனாக பொறுத்துக்கொண்டான

அத்தியாயம் 7

Image
  அத்தியாயம் 7 புகழ்வேந்தனோடு நின்ற ஆழினியை ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் வரவேற்றார் பர்வதம். எங்கே மகன் தனியொருவனாக நின்றுவிடுவானோ என்று இத்தனை ஆண்டுகள் இருந்த மனவுளைச்சல் அகன்று சூரியனைப் போல பிரகாசித்தது அவரது முகம். குமுதினிக்கோ அண்ணி வந்த சந்தோசம். ஆழினியை பூஜாரூமுக்கு அழைத்து சென்று பர்வதம் விளக்கேற்ற சொல்ல துணையாய் அவளும் சென்றாள். குத்துவிளக்கின் பிரகாசம் போல புகழ்வேந்தனின் வாழ்க்கையும் பிரகாசிக்கவேண்டும் என்று பூஜாரூமின் உள்ளே இருந்த முருகனின் திருவுருவப்படத்திடம் வேண்டிக்கொண்டார் பர்வதம். கரம் கூப்பி கண் மூடி நின்ற ஆழினியோ எப்படியாவது இந்த ராட்சசனிடமிருந்து என்னை காப்பாற்று இறைவா என்று மனமுருகி வேண்டினாள். அவளுக்கு இனி ரட்சகனாய் வரப்போவதே இந்த ராட்சசன் தான் என்பதை பேதை எப்போது அறிவாளோ?  விளக்கேற்றியபிறகு பால் பழம் கொடுத்துவிட்டு இன்னும் சடங்கு சம்பிரதாயம் என்று பரபரத்த அன்னையை பார்வையால் அடக்கினான் புகழ்வேந்தன். “எல்லாம் சம்பிரதாயத்தையும் செய்திடனும்னு நான் ஆசைப்படக்கூடாதா புகழ்? அப்பா போட்டோவை ஆழினியோட சேர்ந்து கும்பிட்டுக்கப்பா” என்று அவர் ஆதங்கப்பட, குமுதினியோ “இன்னும் பால்ல

அத்தியாயம் 6

Image
  அத்தியாயம் 6 மருத்துவமனையில் இமயவரம்பனை அனுமதித்த புகழ்வேந்தனின் ஆட்கள் அவனை அங்கிருந்து கண்காணித்துக்கொண்டனர். அவனுக்கு நினைவு திரும்பியதும் தனக்கு தெரிவிக்குமாறு கட்டளை போட்டிருந்தான் புகழ்வேந்தன். சரியாக ஐந்து மணி நேரங்கள் கழித்து அவனுக்குச் சுயநினைவு வரவும் உடனடியாக புகழ்வேந்தனுக்குத் தகவல் பகிரப்பட புயல்வேகத்தில் மருத்துவமனைக்கு வந்தவன் இமயவரம்பனிடம் ஏன் ஆழினியைத் தனிமையில் சந்திக்க வேண்டும் என்றாய் என வினவினான். இமயவரம்பன் வாயைத் திறப்பேனா என சாதிக்கவும் அருகில் கிடந்த ட்ரேயில் இருந்து சர்ஜிக்கல் நைஃபை எடுத்து அவன் கழுத்தில் வைத்தான் புகழ்வேந்தன். கழுத்து நரம்புகள் புடைக்க “ஏன் ஆழினிய ஹோட்டலுக்கு வர சொன்ன? உண்மைய சொல்றியா? உன் கழுத்தை ஒரே சீவா சீவிட்டுப் போகவா?” என்று கர்ஜிக்க, அவனோ “வேண்டாம். நான் சொல்றேன் நான் சொல்றேன்” என அலறினான். அதற்குள் உள்ளே வந்த நர்ஸ் “யார் சார்  நீங்க? பேசண்டை ஏன் டிஸ்டர்ப் பண்றிங்க?” என்க, புகழ்வேந்தனோ சர்ஜிக்கல் நைஃபை அவரை நோக்கி காட்டி “அரைமணிநேரம் எங்களை டிஸ்டர்ப் செய்யாம வெளிய போங்க சிஸ்டர். இல்லனா இவன் நிலமை உங்களுக்கு வரலாம்” என்க, அவரோ “ஹாஸ்பி