Posts

Showing posts from December, 2020

அத்தியாயம் 4

Image
டர்காயிஸ் நீல நிற ஆப் ஷோல்டர் கோல்ட் டாப்பும் வெண்ணிற ஜெகின்சும் அணிந்து தலையை பன்னாக போட்டபடி தயாரானாள் மித்ரவிந்தா. சம்யுக்தாவும் கருப்பு நிறத்தில் டாப் மற்றும் பளாசோ அணிந்து தயாராகியிருந்தவள் தனது புருவத்தைத் திருத்திக் கொண்டிருந்தாள். "இன்னுமா முடியல சம்யூ?" என்றபடி அவளது அறைக்குள் அடியெடுத்து வைத்த மித்ரவிந்தாவை முறைத்தாள் அவள். "உனக்கு நேச்சுரலாவே திக்கான ஐப்ரோ. எனக்கு அப்படியா?" "சரி சரி. இதை சாக்கா வச்சு இன்னும் லேட் பண்ணாதே சம்யூ" என சலித்துக் கொண்டவளுடன் கிளம்பினாள் சம்யுக்தா. மித்ரவிந்தா கேப் புக் செய்திருந்ததால் இருவரும் ஆட்டோ சவாரியின் அசவுகரியங்கள் எதுவுமின்றி வேளச்சேரியை அடைந்தனர். இருவரும் பீனிக்சை சென்றடைந்த போது கூட்டமே இல்லை. தோழியர் இருவரும் ஆச்சரியம் சூழ உள்ளே அடியெடுத்து வைத்தனர். அப்போது மாலின் அனைத்துப் பகுதிகளும் ஒன்றிரண்டு ஆட்கள் மட்டும் நடமாடினர். சம்யுக்தாவும் மித்ரவிந்தாவும் ஜனக்கடலில் திளைக்கும் அந்த மால் இன்று ஏன் காற்று வாங்குகிறது என புரியாது திருதிருவென விழித்தபடி தங்களுக்கு வேண்டிய சரும பராமரிப்பு பொருட்கள் விற்கும் பகு

அத்தியாயம் 3

Image
கடற்கரையை நோக்கி இருந்த வாயிலில் கிடந்த சாய்வான மர இருக்கையில் படுத்திருந்து தனது கையிலிருந்த அச்சிடப்பட்ட காகிதத்தில் இருந்த 'மித்ரவிந்தா' என்ற பெயரை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் முகுந்த். திடீரென செல்போன் இசைக்க அதை எடுத்தவனிடம் பேசியது அவனது அன்பான கேப்டன் சரத் சர்மா. "சொல்லுங்க கேப்" "வாட் ஆர் யூ டூயிங் யங் மேன்? மானிங்ல இருந்து உன்ட இருந்து கால் வரலனு உன்னோட பாபி தவுசண்ட் டைம்ஸ் சொல்லிட்டா. சார் ரொம்ப பிசியா இருக்கிங்களா?" "நாட் அட் ஆல் கேப். பைக் எடுத்துட்டு ஜஸ்ட் ஒரு டிரைவ் போய்ட்டு வந்தேன். ஃபீலிங் டயர்ட். அதனால கடல்காத்தை ரசிச்சிட்டிருக்கேன்" "டேக் கேர் மேன். மீடியா பீபிள் எப்ப நீ சிக்குவனு காத்திருக்காங்க. அதனால கொஞ்சநாள் சில் பண்ணுறேனு சொல்லுறத நிறுத்து" "நீங்க சொன்னா நான் கண்டிப்பா கேட்டுக்குவேன் கேப். இன்னிக்கு தான் நீயும் பாபியும் அடிக்கடி என்னை பேம்பர் பண்ணுறதோட அர்த்தம் புரிஞ்சிச்சி. ஐயாம் வெரி லக்கி டூ ஹேவ் அ காட்ஃபாதர் லைக் யூ" முகுந்தின் பேச்சில் நன்றியுணர்ச்சியுடன் பேரன்பும் கலந்திருந்தது. அன்புக்கும

அத்தியாயம் 2

Image
ஜெய் முரளீ ஸ்ரீதரா ராதே கிருஷ்ணா ராதே ஷ்யாம் கோவிந்த மாதவா கோபாலா கேசவ ராதே கிருஷ்ணா ராதே ஷ்யாம் வேணு விலோலா ராதே ஷ்யாம் விஜய கோபாலா ராதே ஷ்யாம் யாதவா மாதவா கோபாலா கேசவ ராதே கிருஷ்ணா ராதே ஷ்யாம் பாண்டுரங்கா ராதே ஷ்யாம் பண்டரிநாத ராதே ஷ்யாம் ராதே கிருஷ்ணா ராதே ஷ்யாம் வேங்குழல் ஊதும் கிருஷ்ணனின் முன்னே கண் மூடி அமர்ந்து மனமுருகிப் பாடிக் கொண்டிருந்தாள் அந்தப் பேரழகு காரிகை. ஆம்! அவள் பேரழகியே தான். கருநிற அருவியைப் போன்ற அவளது சுருண்ட கூந்தல் இடையைத் தாண்டி தரையைத் தீண்டிக் கொண்டிருந்தது. கூர்நாசி இல்லையென்றாலும் அவளது மொழுமொழு நாசியின் நுனியும் கன்னங்களும் இயல்பிலேயே சிரித்தால் சிவக்கும். இதழ்களோ எவ்வித செயற்கையான உதட்டுச்சாயங்களின் உபயமுமின்றியே சிவந்து ஜொலிக்கும். நடுத்தரமான உயரம் கொண்ட மெல்லிய மேனியாளின் பொய்யோ எனும் இடை அவளது நடனப்பயிற்சியால் அவளுக்குக் கிடைத்த பரிசு. குயிலைப் பழிக்கும் இந்த இனியக் குரலோ அவளது அன்னையிடம் இருந்து வாரிசுரிமை மூலம் கிடைத்த சொத்து. அந்த இருபத்திமூன்று வயது பேரழகு பெட்டகத்தின் நாமம் மித்ரவிந்தா. தமிழகத்தின் மலையோர மாவட்டத்தில் பிறந்தவள் படிப்புக்காக சென

அத்தியாயம் 1

Image
சென்னை சேப்பாக்கம் மைதானம் ஸ்டேடியம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களால் நிரம்பி வழிந்தது. இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி. இது வரை நடந்து முடிந்த தொடர்களில் இரு அணிகளும் சம வாய்ப்புக்களுடன் முன்னிலை வகிக்க இன்றைய போட்டி தான் கோப்பை யாருக்கு என்பதை தீர்மானிக்கப் போகிறது. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் சரத் சர்மா பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தான். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சொதப்பினாலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் உயிரைக் கொடுத்து விளையாடி முன்னூறு ரன்களை எடுத்திருந்தனர். எட்டு விக்கெட் இழப்புக்கு முன்னூறு ரன்கள் என்ற நிலையில் இந்திய அணி இருக்க இங்கிலாந்தின் பேட்ஸ்மேன்கள் களமிறங்கினர். ஆட்டம் சுவாரசியமாகச் சென்று கொண்டிருக்க இந்திய அணியின் பந்துவீச்சைச் சமாளித்து இங்கிலாந்து அணி கடைசி ஓவரில் கடைசிப்பந்து மட்டும் மிச்சமிருக்கும் போது எடுத்த ரன்கள் இருநூற்று தொண்ணூற்று ஒன்பது. அந்த ஒரு பந்தில் தான் இரு அணிகளின் வெற்றி தோல்வியும் இருந்தது. இங்கிலாந்து பேட்ஸ்மேன் அதை வெறுமெனே அடித்து ஓடி ஒரு ரன் எடுத்தாலும் அவர்கள்

16 (இனி எல்லாம் வசந்தமே)

Image
  சில நாட்களுக்குப் பிறகு கொடப்பகொண்டா கிராமம் வழக்கமான கலகலப்புடன் சர்வலோகேஸ்வரய்யாவின் இல்லத்தில் அந்த காலைப்பொழுது ரம்மியமான பறவைகளின் சத்தங்களோடும் , கோசாலையில் இருக்கும் பசுக்களின் ' ம்மா ' என்ற குரல்களோடும் இனிதே புலர்ந்தது .  வீட்டின் பணியாளர்கள் பெரிய முற்றத்தைக் கோலத்தால் அலங்கரித்திருந்தனர் . மறுநாள் ராமநவமி என்பதால் சர்வலோகேஸ்வரய்யா தனது குடும்பத்துடன் பத்ராச்சலம் செல்வது வழக்கம் . அவர்களின் குடும்பத்துக்கு அந்தக் கோயிலில் சிறப்பான உரிமையும் உண்டு . ராமநவமியின் கோலாகலம் அந்த மாளிகையிலும் ஆரம்பித்திருந்தது . பூஜையறையில் இருந்து கேட்ட உமாதேவி பாடிய இராமகானம் அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தது . ஓ ராமா நீ நாமம் ஏமி ருசிரா ? ஓ ராமா நீ நாமம் எந்த ருசிரா ? மதுரசமுல கண்டெ ததி க்ருதமுல கண்டெ அதிகமொ நீ நாமம் ஏமி ருசிரா ? த்ராக்ஷாரசமுல கன்ன இக்ஷு ரசமுல கன்ன பக்ஷி வாஹன ! நீ நாமம் ஏமி ருசிரா ? அஞ்சனதனய ஹ்ருத் கஞ்ச தளமுலண்டு ரஞ்சிலு நீ நாமம் ஏமி ருசிரா ? சதா சிவுடு மடி சதா பஜி