1 (அவளின் சீற்றம்)
இப்படி ஒரு நிலை அவள் வாழ்வில் வரும் என்று கனவில் கூட எண்ணியதில்லை அவள். யாரை காணக்கூடாதென்று நினைத்திருந்தாலோ அவனருகிலே மணமகளாய் அவள். அங்கே ஹோமகுண்டத்தில் எரியும் தீ அவள் உள்ளத்திலும் கொழுந்துவிட்டு எரிய கண்கள் நீரைச் சொரிந்தன. புரோகிதர் கரத்தை நீட்டுமாறு கூற சிலையாய் சமைந்திருந்தவளின் செவிகள் நன்கு வேலை செய்தாலும் அதை கேட்கும் எண்ணம் அவளுக்கு இல்லை என்பதாலோ என்னவோ அவளது மூளையின் சாம்பல் வண்ண செல்கள் கரங்களை உயர்த்து எனும் கட்டளையை அவளுக்கு இடவில்லை. ஆனால் அவளருகில் இருப்பவன் இதற்கெல்லாம் அசருபவன் இல்லை. இறுக்கமாக கரங்களை மூடியபடி இருந்தவளை ஒரு ஏளனப்புன்னகையுடன் அளவிட்டவன் தானே அவள் கரங்களைப் பற்றவும் அவள் தீச்சுட்டாற் போல கரங்களை வெடுக்கென இழுத்துக் கொண்டாள். அக்கணத்தில் அவன் முகத்தில் தோன்றிய சீற்றம் அவளை அச்சுறுத்த விருப்பமின்றி கடனே என தன் கரத்தை அவன் வசம் ஒப்படைத்தாள் அந்த ஆரணங்கு. கரத்தை அவன் வசம் ஒப்படைத்த சில நிமிடங்களில் அவள் வாழ்வும் தலையெழுத்தும் கூட அவன் வசம் ஒப்படைக்கப்பட்டன அவளது விருப்பமின்றி. மாங்கல்யம் கழுத்தில் ஏறியபோதும், நெற்றி வகிட்டில் குங்குமம் இடப்பட...
14 episodes podunga
ReplyDelete