அத்தியாயம் 1

 


“இன்னிக்கு என் ட்ரீட். என்ன வேணுமோ சாப்பிடுங்க. இன்னிக்குச் சாப்பிட்டாச்சே கல்யாணத்துக்கு வரவேணாமுனு முடிவு செஞ்சிங்கனா வீடு தேடி வந்து ஒதைப்பேன்”


நண்பிகளுக்கு கட்டைளை போட்டு கொண்டிருந்தாள் அவள். ஒல்லியான மேனி, நல்ல உயரம், தேனையும் சந்தனத்தையும் கலந்த நிறம். பார்ப்பவர்களை சுண்டியிழுக்கும் எழில் அவளுடையது. இத்தனை அழகும் பணமும் ஒரே இடத்தில் சேர்ந்திருந்தால் அங்கே ஆணவம் இல்லாமல் இருக்குமா? நம் நாயகிக்கு அதுவும் கொஞ்சமுண்டு.


அவள் ஆழினி, இருபத்து மூன்று வயது இளங்கிளி. இன்னும் ஒரு வாரத்தில் அவரது தந்தையின் தோழர் ஆராவமுதனின் மகன் இமயவரம்பனை மணமுடிக்க போகிறாள்.


ஆழினியின் அப்பா வைத்தீஸ்வரன் நகரத்தின் தலைசிறந்த பிசினஸ்மேன்களில் ஒருவர். கட்டிடங்களைக் கட்டி விற்கும் கன்ஸ்ட்ரக்சன் பிசினஸ் அவர்களுடையது.


ஆழினி குழந்தையாக இருந்தபோது அன்னை மீனாட்சி இறந்துவிட அவரது தங்கை தமயந்தி அக்கா மகளின் நலனுக்காக வைதீஸ்வரனை மணந்தார்.


 ஆழினியை இன்று வரை சொந்த மகளாகவே வளர்த்து வருபவர் தனக்கென ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ளவில்லை. அப்படி பெற்றுக்கொண்டால் ஆழினியை வெறுத்துவிடுவோமோ என்ற பயம் அவருக்கு.


அதனாலே ஆழினிக்கு சித்தி என்றால் உயிர். தமயந்தி சொன்னார் என்று ஆராவமுதனின் மகன் இமயவரம்பனை திருமணம் செய்ய சம்மதித்தாள்.


வெகு விமரிச்சையாக நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. இமயவரம்பன் பிசினஸ் ட்ரிப்பாக தாய்லாந்துக்குப் போய்விட்டான். அவன் திரும்பி வந்ததும் திருமணம்.


எனவே உடன் படித்த தோழிகளுக்கு ட்ரீட் வைக்க முடிவு செய்து ஐ.டி.சி கிராண்ட் சோழாவுக்கு அழைத்து வந்திருந்தாள் ஆழினி.


விலையுயர்ந்த சுவைமிகுந்த உணவுகளை ஆர்டர் செய்து அனைவரும் சாப்பிட்டனர்.


கடைசியாக இனிப்பு சாப்பிட்டு முடித்து இளசுகள் கிளம்பியபோது தோழிகளில் ஒருவள் மெதுவான குரலில் ஆழினியிடம் கூறிய செய்தி அவளை கொஞ்சம் யோசிக்க செய்தது.


“ரெண்டு டேபிள் தள்ளி ஒருத்தன் உட்கார்ந்திருந்தான். அவன் பார்க்கிறதுக்கு புகழ் போல தெரிஞ்சான்”


“அவனா?”


அந்த கேள்வியோடு இளக்காரமான புன்னகையும் வெளிவந்தது ஆழினியிடத்தில்.


“அவனாவும் இருக்கலாம். இந்த மாதிரி பணக்காரங்க வந்து போகிற ஹோட்டலில கதவு திறந்துவிடுற வாலே வேலை பார்க்கிறானா இருக்கும்”


அவள் ஏளனமாகச் சொல்லி சிரிக்கவும் கொல்லென்று தோழியர் பட்டாளமும் சேர்ந்து நகைத்தது.


“ஒரு காலத்தில உன்னை உருகி உருகி காதலிச்சவனை இப்படி பேசலாமா ஆழி?”


குறும்புக்காரி ஒருவள் கேட்டாள்.


“என் முன்னாடி நிற்க கூட தகுதி இல்லாதவன் என்னை காதலிக்க கூடாதுனு அவனுக்கு பாடம் எடுத்து அனுப்புனவள்ட்ட நீ இந்த கேள்வியை கேட்கலாமா பிங்கி?”


மீண்டும் கொல்லென்ற சிரிப்பு.


தோழிகள் அனைவரும் விடைபெற்று சென்றதும் பார்க்கிங்கில் நின்ற ஆழினியின் ஆடி கார் அவள் முன்னே வந்து நின்றது.


ஆழினி சாவகாசமாக பின்பக்கத்துக் கதவைத் திறந்து அமர கார் ஹோட்டலில் இருந்து வெளியே போய் சாலையில் ஏறியது.


அப்படியே போயிருந்தால் பரவாயில்லை. அது மெதுவாக வழக்கமான பாதை அதாவது ஆழினியின் வீடு இருக்கும் பகுதியை நோக்கி செல்லும் பாதையிலிருந்து நழுவி கிழக்கு கடற்கரை சாலையை நோக்கி சென்றதும் ஆழினியின் உள்ளுணர்வு எச்சரிக்கை மணியை அடித்தது.


“கார் வேற எங்க போகுது வரதன் அண்ணா?”


அப்போது காரோட்டி இருக்கையிலிருந்த நபர் மெதுவாக திரும்பியதும் ஆழினிக்கு வேர்த்துப் போனது. ஏனெனில் அது அவர்களின் வீட்டு காரோட்டிகளுள் ஒருவரான வரதன் இல்லை. வேறு யாரோ மொட்டைத்தலையன் அங்கே அமர்ந்து காரை ஓட்டிக்கொண்டிருந்தான்.


ஆழினிக்குப் பயமோ பயம்.


“டேய் யாருடா நீ? எவ்வளவு தைரியம் இருந்தா என் காருல ஏறிருப்ப? காரை எங்கடா கொண்டு போற?”


பின்னிருக்கையிலிருந்து அவனது கழுத்தை நெறிக்க எழுந்தவள் திடீரென தலை சுற்றவும் சீட்டில் அமர்ந்தாள். ஆழினியின் கண்கள் இருண்டு பார்வை மங்கலானது.


அடுத்து என்ன நடக்குமென யோசிக்கும் முன்னர் அவள் நினைவிழந்து சரிந்தாள்.


கண் விழித்துப் பார்க்கையில் நுரை மெத்தையில் உடல் அமுங்க படுத்திருந்தாள் அவள்.


தலை கொஞ்சம் பாரமாக இருந்தது. நெற்றியைத் தடவிக்கொண்டு எழுந்தவள் உடலை மூடியிருந்த சாட்டீன் விரிப்பு நழுவியபோது தான் திடுக்கிட்டாள்.


வேகமாக நழுவிய சாட்டீன் விரிப்பை எடுத்து கழுத்து வரை போர்த்திக்கொண்டவளுக்கு யாரோ அடித்து போட்டது போல உடல்வலி. கூடவே தான் இப்பொழுது இருக்கும் இந்நிலை வேறு ஆழினியின் மனதில் தேவையற்ற சந்தேகங்களை கிளை பரப்ப நடுங்கிப்போனாள் அந்த இளஞ்சிட்டு.


“கடவுளே, என்ன நடந்திருக்கும்?” வாய் விட்டுப் பதறியவள் தனது உடைகளைத் தேடினாள். அவையோ அவளிடம் தீவிரமாக கண்ணாமூச்சி ஆட்டம் ஆட அப்பொழுது அவள் இருந்த அறையின் குளியலறை கதவு திறந்தது.


ஆழினி வெடுக்கென திரும்பி பார்த்தாள். அடுத்த வினாடி அங்கே நின்றவனைப் பார்த்ததும் பயத்தில் வார்த்தைகள் வராமல் அமைதியானாள்.


ஆறடி இரண்டங்குலம் உயரத்தில் தேக்கு மர தேகத்தில் தசைகோலங்கள் உருண்டு சிக்ஸ் பேக்காக திரண்டு நிற்க அவற்றில் உருண்டோடின நீர்த்துளிகள். சட்டையற்ற மார்புக்காரன் டவலோடு நின்ற கோலத்தை கண்டு நடுங்கிப் போனாள் ஆழினி.


“நீ…..?”


அவள் எதிரில் நின்றவன் சிங்கத்தின் பிடறிமயிரை போன்ற தனது சிகையை உதறிக்கொண்டான். பார்ப்பதற்கு கம்பீரமான ஆண் சிங்கமொன்று எதிரியை தாக்க ஆயத்தமாகும் தோற்றம்.


 கையால் பிடறியைத் தடவியபடி ஆழினியின் முன்னே வந்து நின்றான் அவன்.


“முகம் மறந்துபோயிடுச்சா? பரவாயில்லை. இனிமேல் உனக்கு எப்பவும் என் முகம் மறக்காது.”


“யூ ஸ்கவுண்ட்ரல்”


கைகளை மெத்தையில் குத்தியவளை சீற்றமாக விழித்தான் அவன்.


“யாருடி ஸ்கவுண்ட்ரல்?”


வெறியோடு கேட்டபடி மெத்தையில் அவளது இருபுறமும் கைகளைக் குத்தி தனது மூச்சுக்காற்றால் அவளைச் சுட்டெரிப்பது போல் கேட்டான் அவன்.


ஆழினி கழுத்து வரை இழுத்துப் பிடித்த சாட்டீன் போர்வையை ஆபத்பாந்தவனைப் போல இறுக்கமாக பற்றிக்கொள்ளவும் அவன் கோணலாகச் சிரித்தான்.


“எதை நீ மறைக்கிறியோ அதை நான் ஆண்டு அனுபவிச்சு ஒரு மணி நேரம் ஆகுது ஆழினி”


வெற்றிப்புன்னகை அவன் வதனத்தில். ஆழினியின் முகமோ பேயறைந்தாற்போல மாறிப்போனது.


“நீ என்ன செஞ்ச? சொல்லு வேந்தன். என்னை செஞ்ச?”


மாறி மாறி கேட்டபடி அவன் மார்பில் குத்துச்சண்டை பயின்றவளை அடக்கி மெத்தையில் தள்ளினான் ஆறடி கட்டுமஸ்தான உடம்புக்குச் சொந்தகாரனான புகழ்வேந்தன்.


“சொல்றதை விட செயல்ல காட்டுனா இன்னும் கிக்கா இருக்கும். காட்டட்டுமா ஆழினி?”


வேட்கையோடு அவளை வேட்டையாடவா என கேட்டன புகழ்வேந்தனின் விழிகள்.


“நோஓஓஓ”


அலறியபடி அவனை தள்ள முயன்றாள் ஆழினி. அலறியதோடு மட்டுமன்றி அழுது துடிக்கவும் செய்தாள்.


அவள் புழுவாய் துடிப்பதை ரத்தவெறியோடு ரசிக்க காத்திருந்த புகழ்வேந்தனோ வெற்றியை எண்ணி இறுமாப்புறாமல் அவள் அழுகிறாளே என பரிதாபம் கொண்டான். அதை வெளிக்காட்டாமல் அவள் படுத்திருந்த தேக்குமரக்கட்டிலின் முனையில் கைகளை இடித்தான் கோபத்துடன்.


“ஷிட். வாயை மூடுடி. சத்தம் வந்துச்சுனா நினைவிழந்தப்ப நடந்தது மறுபடியும் நடக்கும்”


ஆழினி கத்துவதை நிறுத்தினாள்.


மெல்லிய கேவல் அவளிடம்.


ஆக்ரோசத்துடன் எழுந்த ஆணவனோ வேகமாக உடைமாற்றினான்.


பின்னர் அந்த அறையில் கிடந்த குஷன் சேரில் அமர்ந்தவன் வெகு நிதானமாக “என்னை கல்யாணம் செஞ்சுக்க ஆழினி” என்றான்.


படுக்கையில் கிடந்தவள் அழுகையினூடே “ஏன்? என்னை நாசம் செஞ்சு பழி தீர்த்ததுக்கு பரிகாரமா?” என்று கேட்க


அவனோ “இன்னும் பழி தீர்க்கலை ஆழினி. அதுக்காக” என்றான்.


அவனது வலிய கரங்கள் அமர்ந்திருந்த இருக்கையின் முனையை இறுக்கமாகப் பற்றின.


“நான் இப்ப பணக்காரன். உன் அப்பனை விட பெரிய பணக்காரன். உன் அப்பன் புதுசா ஆரம்பிச்சிருக்கிறானே ஓ.எம்.ஆர் புராஜக்ட் அதுக்கு பணம் கொடுக்கிற அளவுக்குப் பணக்காரன். இப்ப உனக்கு என்னை கல்யாணம் செஞ்சுக்க எந்த தடையும் இருக்காது”


கண்ணீர் உகுத்த ஆதினி எழுந்து அமர்ந்தாள்.


“எவ்வளவு பணம் சம்பாதிச்சாலும் நீ இப்பவும் என் கண்ணுக்கு செகண்ட்ஸ்ல பைக் ஓட்டுன புகழ்வேந்தனா தான் தெரியுற. ஒரு சின்ன வித்தியாசம், அவன் ஒழுக்கமானவன், பெண்களை மதிச்ச தெரிஞ்சவன். உன்னை மாதிரி கல்யாணம் ஆக போற பொண்ணை கடத்திட்டு வந்து நாசம் செய்றவனில்லை”


சேரில் வசதியாய் சாய்ந்திருந்த புகழ்வேந்தனோ “அவனை தானே நீ அத்தனை பேர் முன்னாடி அவமானப்படுத்தி அனுப்பின. அப்ப கசந்தவன் இப்ப இனிக்கிறானா? நடிக்காதடி. இனி உன்னால தப்பிக்க முடியாது. உன் காதலன் இமயனுக்கு முன்னாடி நீ எனக்கு சொந்தமாகிட்ட. இதை யாராலயும் மாற்ற முடியாது. இப்ப கெளம்பு. உன் கல்யாணம் என் கூட மட்டுமே நடக்கும்” என்றபடி அவளது உடைகளை அள்ளி முகத்தில் எறிந்தான்.


ஆழினி அவன் முன்னே உடைமாற்ற தயங்க புகழ்வேந்தனோ “நான் பார்க்காததுனு உன்ட்ட எதுமில்லை ஆழினி. சீக்கிரம் ட்ரஸ் மாற்றிக்க. என் மூட் மாறுச்சுனா உனக்கு கஷ்டம்” என்றான்.


சாட்டீன் போர்வையை உடல் முழுவதும் சுற்றிக்கொண்டு உடைகளோடு குளியலறைக்குள் ஓடிய ஆழினி உடைகளை மாற்றி முகம் கழுவிவிட்டு வெளியே வந்தாள்.


அவளைப் பார்த்ததும் ஏளனமாக முறுவலித்தவன் எதிர்பாராவிதமாக அவளது இதழில் முரட்டு முத்தம் வைத்தான்.


முத்தம் வைத்த போதே அவனது விரல்கள் கன்னம் கடந்து கழுத்தைத் தடவி எங்கெங்கோ பயணிக்க பெண்ணவள் அவனைத்  தடுக்க முடியாமல் தவித்து போய் நின்றாள்.


உணர்ச்சிகள் காட்டாற்று வெள்ளமாய் கரைபுரண்டோட அவற்றுக்கு அணை போட்டவன் அவளை விலக்கி நிறுத்தினான்.


“இந்த முத்தம் நம் கல்யாண வாழ்க்கைக்கு டோக்கன் அட்வான்ஸ். என்னை ஏமாற்றி திருட்டுத்தனம் செய்யலாம்னு யோசிக்காத. நான் பழைய புகழ்வேந்தன் இல்லை. உன் குடும்பத்தை உருத்தெரியாமல் அழிச்சிடுவேன்”


அவனது ஒவ்வொரு மிரட்டலுக்கும் ஆழினியின் உடல் அதிர்ந்தது.


“நவிலா”


உரத்தக்குரலில் அவன் அழைக்கவும் யாரோ ஓடோடி வந்தார்கள்.


“மேடத்தை அவங்க வீட்டுல பத்திரமா எறக்கி விடு. உன் வருங்கால எஜமானி இவங்க. கொஞ்சம் மெதுவா வண்டியை ஓட்டு”


உணர்வற்ற ஜடம் போல அவனைக் கடந்து போனாள் ஆழினி. புகழ்வேந்தன் சொன்னது போல அவன் பணக்காரன் என்பதை அவனது வீட்டின் ஒவ்வொரு அங்குலமும் சொன்னது.


வீட்டை விட்டு வந்தவள் “இது என்ன இடம்?” என நவிலனிடம் கேட்டாள்.


“ஈ.சி.ஆர் கானத்தூர் மேடம். சாருக்கு இந்த மாதிரி இன்னும் ரெண்டு பீச் பங்களா இருக்கு” என்றபடி கார்க்கதவை திறந்துவிட்டான் நவிலன்.


காரினுள் அமர்ந்தவள் கடந்தகாலமெனும் சுழலுக்குள் சிக்கிக்கொண்டாள்.


ஆழினி கல்லூரியில் யு.ஜி படித்த பொழுது அறிமுகமானவன் புகழ்வேந்தன். அவள் பயின்ற துறையின் பி.ஜி படித்தவன்.


பல சமயங்களில் அவனது ரசனைப்பார்வையை ஆழினி கடந்திருக்கிறாள். அவன் மீது அவளுக்கு எந்தவித உணர்வும் வந்தது இல்லை. அவன் நன்றாகப் படிப்பவன், குடும்பத்தைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு அவனுக்கு இருக்கிறதென ஒரு முறை உடன் பயிலும் மாணவி சொல்ல கேட்டிருந்தாள்.


அதை தவிர்த்து அவனுக்கு அவள் முக்கியத்துவம் அளித்ததில்லை. அவன் ஒரு முறை காதலிப்பதாக வந்து நின்றபோது கூட மறுத்துவிட்டாள்.


ஆனால் புகழ்வேந்தனால் அவளை மறக்க முடியவில்லை. அவன் காதலர் தினத்தன்று ரோஜாவோடு வந்து நின்றபோது கொஞ்சம் அதிகமாக அவனைத் திட்டிவிட்டாள்.


“உனக்கு என்ன தகுதி இருக்கு என்னை காதலிக்க? செகண்ட்ஸ்ல பைக் வாங்கி ஓட்டுறவனுக்கு ஆடி காருல போக ஆசை வரலாமா? இன்னொரு வாட்டி காதல் ஊதல்னு சொல்லிட்டு என் பின்னாடி அலைஞ்ச, எங்கப்பாட்ட சொல்லி கை காலை ஒடைக்க சொல்லிடுவேன் ஜாக்கிரதை”


தன் முன்னே நிற்பவனின் ஆண் எனும் திமிரைத் தூண்டுகிறோம் என்ற உணர்வில்லாமல் பணம் கொடுத்த செருக்கை மறைக்காமல் காட்டிவிட்டு காரினுள் ஏறினாள் ஆழினி.


மனம் ஏனோ அப்போது ஒப்பவில்லை. ஆனால் அப்படி செய்து தீரவேண்டிய கட்டாயம் ஆழினிக்கு. அங்கிருந்து சென்றுவிட்டவளுக்கு சுற்றியிருந்தவர்களால் புகழ்வேந்தன் எள்ளி நகையாடப்பட்டது தெரியாது.


ஆழினியின் கார் சென்றதும் சுற்றி நின்றவர்கள் தங்களுக்குள் குசுகுசுவென பேசிக்கொண்டு சிரிப்பதை கண்டு மனம் உடைந்து அவமானத்தில் தலைகுனிந்தான் புகழ்வேந்தன்.


“இவனுக்கு ஆழினிக்கும் ஏணி வைச்சாலும் எட்டாது. பணக்காரவீட்டுப்பொண்ணுனதும் ஐயா வளைச்சு பிடிக்க ஆசைப்படுறான். ஆழினி வைச்சாள்ல ஆப்பு”


“இவன் இடத்தில நான் இருந்திருந்தா ஒரு பொண்ணுட்ட அவமானப்பட்ட கேவலத்துக்கு ரெயில்ல பாய்ஞ்சு செத்திருப்பேன்”


காதலை அவமதித்தவளால் உண்டான காயம் மரணவலியைக் கொடுக்க செத்த பிணம் போல காலேஜ் கேம்பசிலிருந்து வெளியேறினான் புகழ்வேந்தன்.


அன்று அவனுக்குள் வந்த வெறி இன்னும் தீரவில்லை. ஆழினி தனது எல்லையைக் கடந்து விட்டதாக நினைத்து பழி தீர்ப்பதற்கு இந்த ஒரு சம்பவம் மட்டும் காரணமில்லை. வெறும் காதல் மறுப்புக்காக ஒரு பெண்ணின் மானத்தோடு விளையாடும் அளவுக்கு புகழ்வேந்தன் ஒன்றும் இழிபிறவி இல்லை.


காதலை மறுத்த தினத்தில் அவள் செய்த இன்னொரு காரியத்தால் புகழ்வேந்தன் ஒட்டுமொத்தமாக நொறுங்கிப்போனான். அதற்கு பழி வாங்க ஐந்தாண்டுகளாக கடுமையாக உழைத்து இன்வெஸ்ட்மெண்ட் பேங்கராக உருமாறி வந்திருக்கிறான். இனி ஆழியின் பிடி அவன் கையில்.


Comments

Popular posts from this blog

அத்தியாயம் 7

அத்தியாயம் 4

அத்தியாயம் 8