Posts

Showing posts with the label என் தோளில் சாய்ந்திட வா

அத்தியாயம் 13

Image
  செங்குட்டுவன் வைதீஸ்வரனின் வீட்டைக் கண்காணித்துக்கொண்டிருந்தான். புங்கைவனத்துக்குச் செல்லும் முன்னர் புகழ்வேந்தன் அவரது நடவடிக்கைகளைக் கவனிக்குமாறு பணித்துவிட்டு போயிருந்தான். எனவே கடந்த மூன்று வாரங்களாக அலுவலகப்பணியுடன் இதையும் செய்து வருகிறான் செங்குட்டுவன். வைதீஸ்வரனுக்கும் மீனாட்சியின் குடும்பத்திற்கும் நெருக்கமான ஒருவர் மீனாட்சியின் மரணத்துக்கு வைதீஸ்வரனும் தமயந்தியும்தான் காரணமென கூறியதால் இந்த கூடுதல் கவனிப்பு. செங்குட்டுவன் வீட்டுக்குள் அனுப்பி வைத்திருந்த ஆட்கள் வைதீஸ்வரனுக்கும் ஆழினிக்கும் நடந்த தொலைபேசி உரையாடலுக்குப் பின்னே நடந்த சம்பவங்கள் அனைத்தையும் அவனிடம் உடனுக்குடன் சொல்லிவிட்டார்கள். அதை வைதீஸ்வரனிடம் பகிர்ந்தவன் “ஆழினி மேடம் அங்க வந்துடுவாங்களோனு டென்சன்ல அந்தாளு ஊரை காலி செய்றதா சொல்லிருக்கிறார். உங்களை நெனைச்சு பயப்படுறதால மட்டும் இப்படி செய்யல சார். உண்மை தெரிஞ்சதுனால பயந்து ஓடுறார்னு தோணுது” என்றான். “அந்தாளு வீட்டு மதில் சுவரை தாண்டக்கூடாது. மீறி தாண்டுனா பொணமாதான் தாண்டனும்” இதுவே புகழ்வேந்தன் கொடுத்த கட்டளை. செங்குட்டுவனும் சில பவுன்சர்களோடு வந்து நின்ற...

அத்தியாயம் 1

Image
  “இன்னிக்கு என் ட்ரீட். என்ன வேணுமோ சாப்பிடுங்க. இன்னிக்குச் சாப்பிட்டாச்சே கல்யாணத்துக்கு வரவேணாமுனு முடிவு செஞ்சிங்கனா வீடு தேடி வந்து ஒதைப்பேன்” நண்பிகளுக்கு கட்டைளை போட்டு கொண்டிருந்தாள் அவள். ஒல்லியான மேனி, நல்ல உயரம், தேனையும் சந்தனத்தையும் கலந்த நிறம். பார்ப்பவர்களை சுண்டியிழுக்கும் எழில் அவளுடையது. இத்தனை அழகும் பணமும் ஒரே இடத்தில் சேர்ந்திருந்தால் அங்கே ஆணவம் இல்லாமல் இருக்குமா? நம் நாயகிக்கு அதுவும் கொஞ்சமுண்டு. அவள் ஆழினி, இருபத்து மூன்று வயது இளங்கிளி. இன்னும் ஒரு வாரத்தில் அவரது தந்தையின் தோழர் ஆராவமுதனின் மகன் இமயவரம்பனை மணமுடிக்க போகிறாள். ஆழினியின் அப்பா வைத்தீஸ்வரன் நகரத்தின் தலைசிறந்த பிசினஸ்மேன்களில் ஒருவர். கட்டிடங்களைக் கட்டி விற்கும் கன்ஸ்ட்ரக்சன் பிசினஸ் அவர்களுடையது. ஆழினி குழந்தையாக இருந்தபோது அன்னை மீனாட்சி இறந்துவிட அவரது தங்கை தமயந்தி அக்கா மகளின் நலனுக்காக வைதீஸ்வரனை மணந்தார்.  ஆழினியை இன்று வரை சொந்த மகளாகவே வளர்த்து வருபவர் தனக்கென ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ளவில்லை. அப்படி பெற்றுக்கொண்டால் ஆழினியை வெறுத்துவிடுவோமோ என்ற பயம் அவருக்கு. அதனாலே ஆழ...

அத்தியாயம் 7

Image
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சம்யுக்தாவுடன் நின்று கொண்டிருந்தாள் மித்ரவிந்தா. சம்யுக்தா தனது சொந்த ஊருக்குச் செல்ல மித்ரவிந்தா அவளை வழியனுப்ப வந்திருந்தாள். "ஸ்டடி ஹாலிடேனு ஊருக்கு கிளம்பினது ஓகே. ஆனா எக்சாமுக்குக் கொஞ்சமாவது படி சம்யூ. ஆண்ட்டி அங்கிளை நான் ரொம்ப விசாரிச்சேனு சொல்லு" "நான் ஊருக்குப் போனதும் செய்ற முதல் வேலையே இந்த  புக்கை எல்லாம் தலைய சுத்தி வீசுறது தான்" என்று கிண்டலாக சொல்லி  அவளிடம் அடி வாங்கிக் கொண்டாள் சம்யுக்தா. பேருந்து கிளம்பத் தயாராகவும் அவள் அதில் ஏறிக்கொள்ள அவளுக்கு கையசைத்துவிட்டு கிளம்பினாள் மித்ரவிந்தா. அங்கிருந்து அவளது வீடு இருக்கும் பகுதிக்கு வந்து சேருவதற்குள் அவள் ஓய்ந்து போனாள் எனலாம். பெருநகரத்தின் போக்குவரத்து நெரிசலின் உபயம் தான். அவர்களின் தெருமுனைக்கு வந்த போதே யாரோ கண்காணிப்பது போல தோன்ற மனதின் உறுத்தலை ஓரங்கட்டியபடி வீட்டின் கேட்டை மூடியவள் படியேறி கதவைத் திறக்க முயன்ற நேரம் "ஹாய் ஹனி" என்ற காந்தக்குரல் காதில் விழ கதவில் வைத்த கை வைத்தபடி இருக்க நிச்சயம் அவனாக இருக்காது, இது என்னவோ பிரம்மை என்று எண்ணியபடி மீண்...

அத்தியாயம் 6

Image
  இரவின் கனவுகள் கொடுத்த முகச்சிவப்புடன் எழுந்து அமர்ந்தாள் மித்ரவிந்தா. அவளருகில் படுத்திருந்த சம்யுக்தா எப்போதோ எழுந்துவிட்டாள் என்பதை சமையலறையில் விசிலடிக்கும் பால் குக்கரின் சத்தம் அவளுக்கு உணர்த்திவிட்டது. மித்ரவிந்தா படுக்கையிலேயே அமர்ந்துவிட்டவள் கண் மூடி நேற்றைய சம்பவங்களை மீண்டும் ஒரு முறை யோசிக்க ஆரம்பித்தாள். அவள் கண் முன்னே முகுந்தின் ஆளுமை  நிறைந்த முகம் வரவும் அவளறியாமல் நாணம் வந்து முகத்தில் ஒட்டிக்கொண்டது. எவ்வளவு இயல்பாக தனது கரத்தை வருடினான். தனது காதுகளில் முணுமுணுத்தது, இடையோடு சேர்த்து அணைத்தது, அடுத்த முறை கன்னத்தில் தான் என முன்னறிவிப்பு செய்தது என ஒவ்வொன்றாக வரிசைப்படுத்திப் பார்த்துவிட்டு தனக்குத் தானே சிரித்துக் கொண்டாள். இக்கால இளைஞிகளுக்கே உரித்தான காலையில் எழுந்ததும் போன் முகத்தில் விழிக்கும் பழக்கத்திற்கு மித்ரவிந்தாவும் விதிவிலக்கு அல்லவே. போனை எடுத்தவளின் மனதை ஏற்கெனவே தன் வசப்படுத்தியிருந்த முகுந்தின் பெயரை கூகுள் தேடுபொறியில் போட்டு பார்க்க அவனைப் பற்றிய தகவல்களுடன் சிற்சிற போட்டோக்களையும் கூகுள் கடை பரப்பியது. அவன் நீலநிற ஜெர்சியில் அணி வீரர்...