அத்தியாயம் 6

அத்தியாயம் 6 மருத்துவமனையில் இமயவரம்பனை அனுமதித்த புகழ்வேந்தனின் ஆட்கள் அவனை அங்கிருந்து கண்காணித்துக்கொண்டனர். அவனுக்கு நினைவு திரும்பியதும் தனக்கு தெரிவிக்குமாறு கட்டளை போட்டிருந்தான் புகழ்வேந்தன். சரியாக ஐந்து மணி நேரங்கள் கழித்து அவனுக்குச் சுயநினைவு வரவும் உடனடியாக புகழ்வேந்தனுக்குத் தகவல் பகிரப்பட புயல்வேகத்தில் மருத்துவமனைக்கு வந்தவன் இமயவரம்பனிடம் ஏன் ஆழினியைத் தனிமையில் சந்திக்க வேண்டும் என்றாய் என வினவினான். இமயவரம்பன் வாயைத் திறப்பேனா என சாதிக்கவும் அருகில் கிடந்த ட்ரேயில் இருந்து சர்ஜிக்கல் நைஃபை எடுத்து அவன் கழுத்தில் வைத்தான் புகழ்வேந்தன். கழுத்து நரம்புகள் புடைக்க “ஏன் ஆழினிய ஹோட்டலுக்கு வர சொன்ன? உண்மைய சொல்றியா? உன் கழுத்தை ஒரே சீவா சீவிட்டுப் போகவா?” என்று கர்ஜிக்க, அவனோ “வேண்டாம். நான் சொல்றேன் நான் சொல்றேன்” என அலறினான். அதற்குள் உள்ளே வந்த நர்ஸ் “யார் சார் நீங்க? பேசண்டை ஏன் டிஸ்டர்ப் பண்றிங்க?” என்க, புகழ்வேந்தனோ சர்ஜிக்கல் நைஃபை அவரை நோக்கி காட்டி “அரைமணிநேரம் எங்களை டிஸ்டர்ப் செய்யாம வெளிய போங்க சிஸ்டர். இல்லனா இவன் நிலமை உங்களுக்கு வரலாம்” என்க, அவர...