Posts

Showing posts with the label tamil novels

அத்தியாயம் 13

Image
  செங்குட்டுவன் வைதீஸ்வரனின் வீட்டைக் கண்காணித்துக்கொண்டிருந்தான். புங்கைவனத்துக்குச் செல்லும் முன்னர் புகழ்வேந்தன் அவரது நடவடிக்கைகளைக் கவனிக்குமாறு பணித்துவிட்டு போயிருந்தான். எனவே கடந்த மூன்று வாரங்களாக அலுவலகப்பணியுடன் இதையும் செய்து வருகிறான் செங்குட்டுவன். வைதீஸ்வரனுக்கும் மீனாட்சியின் குடும்பத்திற்கும் நெருக்கமான ஒருவர் மீனாட்சியின் மரணத்துக்கு வைதீஸ்வரனும் தமயந்தியும்தான் காரணமென கூறியதால் இந்த கூடுதல் கவனிப்பு. செங்குட்டுவன் வீட்டுக்குள் அனுப்பி வைத்திருந்த ஆட்கள் வைதீஸ்வரனுக்கும் ஆழினிக்கும் நடந்த தொலைபேசி உரையாடலுக்குப் பின்னே நடந்த சம்பவங்கள் அனைத்தையும் அவனிடம் உடனுக்குடன் சொல்லிவிட்டார்கள். அதை வைதீஸ்வரனிடம் பகிர்ந்தவன் “ஆழினி மேடம் அங்க வந்துடுவாங்களோனு டென்சன்ல அந்தாளு ஊரை காலி செய்றதா சொல்லிருக்கிறார். உங்களை நெனைச்சு பயப்படுறதால மட்டும் இப்படி செய்யல சார். உண்மை தெரிஞ்சதுனால பயந்து ஓடுறார்னு தோணுது” என்றான். “அந்தாளு வீட்டு மதில் சுவரை தாண்டக்கூடாது. மீறி தாண்டுனா பொணமாதான் தாண்டனும்” இதுவே புகழ்வேந்தன் கொடுத்த கட்டளை. செங்குட்டுவனும் சில பவுன்சர்களோடு வந்து நின்ற...

அத்தியாயம் 12

Image
  புங்கைவனம் கிராமத்தில் உள்ள ராஜராஜேஸ்வரி கோவில் பாரிவேந்தனின் குடும்பத்துக்கு குலதெய்வம். அவர்கள் குடும்பத்தில் புதிதாக திருமணமான மணமக்களை அங்கே அழைத்து சென்று பொங்கல் வைத்து பூஜை போடுவது பாரம்பரியமாக கடைபிடிக்கப்படும் குடும்ப வழக்கம். புகழ்வேந்தனுக்கு திருமணம் முடிந்த செய்தி கிடைத்ததுமே எழில்வேந்தன் பூசாரியிடம் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்வதற்கு பணம் கொடுத்துவிட்டார். புதுமணமக்களுக்கு அரண்மனையில் விருந்து வைத்து வேலையாட்களுக்குப் புது துணி கொடுத்து சாப்பாடு போடுவதும் அவர்களின் வழக்கம். ஆழினிக்கு அரண்மனைக்கு வந்ததிலிருந்து நீங்காமலிருந்த பிரமிப்பு இச்செய்திகளைக் கேட்டறிந்ததும் இன்னும் அதிகரித்தது. அரச குடும்பத்தை சேர்ந்தவனை அவள் கல்லூரி நாட்களில் அசட்டையாக கடந்திருக்கிறாள். இப்போது அவனையே மணந்து மனைவியும் ஆகிவிட்டாள். நினைத்தால் நம்பக்கூட முடியவில்லை. சற்று முன்னர் ராஜேஸ்வரி பர்வதத்தோடு வந்து நகைகளையும் புடவையையும் கொடுத்துவிட்டு போயிருந்தார். தங்க ஜரிகைகளால் நெய்யப்பட்ட புடவை கண்களைப் பறித்தது. அதற்கு பொருத்தமாக ஆபரணங்களையும் கொடுத்துவிட்டுப் போயிருந்தார் அவர். ஆழினி புடவையை உடுத்த...

அத்தியாயம் 11

Image
  பாரிவேந்தனின் குடும்பத்தினருக்குச் சொந்தமான அரண்மனைக்குப் பர்வதம், குமுதினியோடு அன்று காலை வந்து சேர்ந்தாள் ஆழினி. குடும்பத்தின் மருமகளுக்கு வரவேற்பு சிறப்பாக இருந்தது. புங்கைவனம் என்ற கிராமத்தில் அமைந்திருந்த அரண்மனை மற்றும் நிலபுலன்கள் சேதுபதி காலத்திலிருந்தே பாரிவேந்தனின் குடும்பத்தினருக்குப் பாத்தியப்பட்டவை. அந்த கிராமத்திலும், அங்கிருக்கும் ராஜராஜேஸ்வரி கோயிலிலும் அவர்கள் குடும்பத்திற்கு முதல் மரியாதை என்று பயணத்தின்போது எழில்வேந்தன் ஆழினியிடம் கூறியிருந்தார். விமானம் மூலம் மதுரை வந்து அங்கிருந்து காரில் ராமநாதபுரத்திற்கு வந்தவர்கள் புங்கைவனத்தை அடைந்தபோது மதியமாகிவிட்டது. அரண்மனையில் தனது தங்கை ஈஸ்வரியும் அவரது கணவர் இளஞ்சூரியனும் அவர்களின் மகள் இனியாவுடன் வசிக்கிறார்கள் என்றார் ராஜேஸ்வரி. கிராமத்திற்குள் நுழையும்போதே அது செழிப்பான கிராமம் என்று எண்ணினாள் ஆழினி. ராமநாதபுரம் வானம் பார்த்த பூமி. அங்கே இப்படி ஒரு செழிப்பை அவள் எதிர்பார்க்கவில்லை. அங்கே தெரிந்த பசுமை அவளை திகைப்பில் ஆழ்த்தியது. ஊரில் நுழையும்போதே இருபத்தேழடி அரண்மனையும், அதை விட உயரமான கோவில் கோபுரமும் கம்பீரமா...

அத்தியாயம் 9

Image
  அத்தியாயம் 9 புகழ்வேந்தனின் திருமண வாழ்க்கையின் முதல் நாள் என்பதால் தடபுடலாக காலையுணவைச் சமைக்க சொல்லியிருந்தார் பர்வதம். இட்லி தோசை பொங்கல் என்று ஒரு பக்கம் கமகமக்க, மறுபக்கம் பூரிக்கிழங்கு, சப்பாத்தி சென்னா மசாலா என மணம் கமழ்ந்தது. டைனிங் டேபிளுக்கு வந்தவனிடம் ஆசையாக மருமகளை பற்றி கேட்டார் பர்வதம். “அவள் லேட்டா வருவாம்மா” என்று அவன் சொல்லும்போதே காலர் வைத்த அனார்கலி சுடிதாரோடு வந்தாள் ஆழினி. நாகரிக உடை அணிந்தாலும் மறக்காமல் நெற்றியில் குங்கும திலகத்துடன் வந்த மருமகளை பார்த்ததும் பர்வதம் ஓடிச்சென்று அழைத்து வந்து மகனின் அருகில் அமர வைத்தார். ஆழினி குனிந்த தலை நிமிராது அமர்ந்திருந்தாள். மாமியார் பரிமாறிய சாப்பாட்டை அமைதியாகச் சாப்பிட்டாள். “இன்னும் கொஞ்சம் சட்டினி வைத்துக்கம்மா. வெறும் பொங்கல் சாப்பிட்டால் தொண்டையில் விக்கிக்கும்” என்று அன்பாக பரிமாறிய மாமியாரின் பாசத்தில் கண்ணிமைகள் நனைந்தது. புகழ்வேந்தனோ அவளுக்கு நடந்த உபசரிப்பை விரும்பவில்லை. அதை குழைக்கும்விதமாக நக்கல் பேச்சை ஆரம்பித்தான். “ஓசி கல்யாணம், ஓசி சாப்பாடு. கலக்கிற ஆழினி” விளையாட்டாக மனைவியிடம் பேசுவது போல அவனது பே...