அத்தியாயம் 11

 


பாரிவேந்தனின் குடும்பத்தினருக்குச் சொந்தமான அரண்மனைக்குப் பர்வதம், குமுதினியோடு அன்று காலை வந்து சேர்ந்தாள் ஆழினி.


குடும்பத்தின் மருமகளுக்கு வரவேற்பு சிறப்பாக இருந்தது. புங்கைவனம் என்ற கிராமத்தில் அமைந்திருந்த அரண்மனை மற்றும் நிலபுலன்கள் சேதுபதி காலத்திலிருந்தே பாரிவேந்தனின் குடும்பத்தினருக்குப் பாத்தியப்பட்டவை.


அந்த கிராமத்திலும், அங்கிருக்கும் ராஜராஜேஸ்வரி கோயிலிலும் அவர்கள் குடும்பத்திற்கு முதல் மரியாதை என்று பயணத்தின்போது எழில்வேந்தன் ஆழினியிடம் கூறியிருந்தார்.


விமானம் மூலம் மதுரை வந்து அங்கிருந்து காரில் ராமநாதபுரத்திற்கு வந்தவர்கள் புங்கைவனத்தை அடைந்தபோது மதியமாகிவிட்டது.


அரண்மனையில் தனது தங்கை ஈஸ்வரியும் அவரது கணவர் இளஞ்சூரியனும் அவர்களின் மகள் இனியாவுடன் வசிக்கிறார்கள் என்றார் ராஜேஸ்வரி.


கிராமத்திற்குள் நுழையும்போதே அது செழிப்பான கிராமம் என்று எண்ணினாள் ஆழினி. ராமநாதபுரம் வானம் பார்த்த பூமி. அங்கே இப்படி ஒரு செழிப்பை அவள் எதிர்பார்க்கவில்லை. அங்கே தெரிந்த பசுமை அவளை திகைப்பில் ஆழ்த்தியது.


ஊரில் நுழையும்போதே இருபத்தேழடி அரண்மனையும், அதை விட உயரமான கோவில் கோபுரமும் கம்பீரமாக தெரிந்தன.


அரண்மனையின் தோற்றம் புத்தம்புதிதாக இருந்தது. கொஞ்சம் புதிய மோஸ்தரில் புதுப்பித்திருந்தார்கள் போல. மற்றபடி பழங்கால கட்டிடக்கலையின் அழகு குறையாமல் பராமரித்திருந்தார்கள்.


அரண்மனையின் மதில்சுவரைத் தாண்டி பெரிய நுழைவாயிலைத் தாண்டி உள்ளே கார் செல்லும் போதே ரோஜா மலர்களின் நறுமணம் நாசிக்குள் சென்றது.


அழகான தோட்டம், அதை தாண்டி பெரிய நீரூற்று இதெல்லாம் கடந்தால் பரந்து விரிந்த அரண்மனை அவர்களை வரவேற்றன.


காரிலிருந்தவர்கள் இறங்கியதும் அங்கியிருந்த வேலையாட்கள் தமக்குள் பேசிக்கொண்டனர்.


ஆழினி தனது மாமியாரோடு அரண்மனை வாயிலில் நின்றபோது ஆரத்தியோடு வந்தார் ஒரு பெண்.


“வாங்க வாங்க. எல்லாரும் கொஞ்சம் விலகி நில்லுங்க. புகழ் பெண்டாட்டிக்கு ஆரத்தி எடுக்கனும்” என்றார்.


“உங்க மகளுக்கு ஆரத்தி எடுங்கண்ணி. நாங்க ஓரமா நிற்கிறோம்” என்ற ராஜேஸ்வரி ஆழினியை அவர் முன்ணே நிறுத்தினார்.


ஆழினியைத் திருப்தியிடம் அளவிட்ட அந்த பெண் ஆரத்தி எடுக்க ஆரம்பித்தார்.


ஆலம் சுற்றி அவளுக்கு பொட்டு வைத்துவிட்டு “ராக்கம்மா” என்று குரல் கொடுக்கவும் வேலைக்காரி ஒருத்தி ஓடி வந்தாள்.


அவளிடம் ஆரத்தி தட்டை கொடுத்து வெளியே ஊற்றிவிட்டு வரும்படி சொன்ன பிறகு வந்தவர்களை வீட்டுக்குள் அழைத்துச் சென்றார்.


ஆழினிக்கு அரண்மனையின் அழகு பிரம்மிப்பு கொடுத்தது. சுவரில் அந்தக் கால ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. ஆங்காங்கே கலைப்பொருட்கள் முன்னோர்களின் புகைப்படங்கள் தொங்கின.


அரண்மனை ஃபர்னிசர் எல்லாம் தேக்குமரத்தால் ஆனவை என்று சொன்ன அந்த பெண் ஈஸ்வரி பாரிவேந்தன், எழில்வேந்தனின் தங்கை. அவரது கணவர் இளஞ்சூரியனும் இனியாவும் அங்கே அமர்ந்திருந்தார்கள்.


வந்தவர்களைப் பார்த்ததும் புன்னகையோடு எழுந்தார்கள்.


“வாங்க அக்கா. குமுதா வாடி”


குமுதினி ஓடி சென்று அவளருகே நிற்கையிலே இன்னொரு இளம்பெண்ணும் ஆணும் வந்தார்கள்.


“என் மக இதழினி. மகன் முகில்வேந்தன்”


இருவரும் வணக்கம் சொன்னார்கள் ஆழினிக்கு.


“நம் புகழோட மனைவி ஆழினி” என்று எழில்வேந்தன் அவளை அறிமுகப்படுத்தினார்.


ஆழினி அங்கிருந்தவர்களிடன் ஆடை அணிகலன்களில் இருந்த எளிமையிலும் ஒரு ஆடம்பரம் தெரிவதை கண்டுகொண்டாள்.


ஏன் மாமியார் தன்னை வைர ட்ராப்ஸ் அணியச் சொன்னார் என்பதை புரிந்துகொண்டாள் அவள். தன்னை அவர்கள் யாரும் குறைவாக எடை போடக்கூடாது என மாமியார் யோசித்திருக்கிறாரே.


“உங்க கல்யாணத்துக்கு எங்களுக்கு அழைப்பு வரலை. அவ்வளவு அவசரம் புகழுக்கு. ஆனா இவ்வளவு அழகியை பார்த்தா எந்த ஆண் அவசரப்படமாட்டான்?” என்று குறும்பாக சொல்லி சிரித்தார் ஈஸ்வரி.


“சரிசரி. பேசிப்பேசி ஆழினிக்கு போரடிக்காம சாப்பாடு எடுத்து வைங்கண்ணி” என ராஜேஸ்வரி சொல்லவும் வேலைக்காரப்பெண்களை பரிமாறச் சொன்னார் ஈஸ்வரி.


வெள்ளி தட்டில் பரிமாறப்பட்ட சாப்பாடு ராஜவிருந்து போல இருந்தது.


குமுதினியைப் போல இனியாவும் இதழினியும் ஆழினியிடம் அன்பாக நடந்துகொண்டார்கள்.


அரண்மனை தோட்டத்திற்கு அழைத்து சென்றார்கள். அங்கே சிறிதுநேரம் அமர்ந்து கதை பேசினார்கள். குமுதினி தனது அண்ணி தனக்கு காசுமாலையைக் கொடுத்ததை பெருமையாகச் சொல்லிக்கொண்டிருந்தாள்.


சுற்றி மல்லிகை, முல்லை, ரோஜா என மணம் கமழும் மலர்கள் சுற்றியிருக்க சில்லென்ற காற்றில் தோட்டத்தில் ராட்சசத்தனமாக வளர்ந்திருந்த விருட்சங்கள் அசைந்தாடின.


இனியா தூரத்தில் தெரிந்த பெரிய கட்டிடத்தைக் காட்டினாள்.


“அந்த காலத்துல அங்க குதிரகளை கட்டி வைப்பாங்க. இப்போ புகழ் அத்தானோட குதிரை மட்டும் அங்க இருக்கு” என்றாள்.


“வேந்தனுக்கு குதிரை ஓட்ட தெரியுமா?”


ஆச்சரியமாக கேட்டாள் ஆழினி.


“அத்தானுக்கு குதிரை ஓட்ட தெரியும் அக்கா. இங்க இரண்டு வருடம் தங்கியிருந்தப்போ அப்பாட்ட கற்றுக்கிட்டார் அக்கா”


பெண்கள் பேசிக்கொண்டிருக்கும்போது புகழ்வேந்தனிடமிருந்து ஆழினிக்கு கால் வந்தது.


“அத்தானுக்கு கொஞ்சநேரம் கூட அக்காவ பிரிய முடியலை”


இனியா கிண்டல் செய்ய ஆழினி தனியே போய்விட்டாள்.


“ஏன் கால் பண்ணிங்க வேந்தன்?”


“தினமும் சாப்பிடுற மாத்திரையை எடுத்துட்டு போனயா ஆழினி?”


அதிகாரமாக வினவினான் புகழ்வேந்தன். ஆழினிக்கு எரிச்சல் வந்தது. அதை காட்ட முடியவில்லை. தூரத்தில் இருந்தாலும் பெண்களுக்கு அவளது பேச்சு மெதுவாக கேட்கும்.


“எடுத்துட்டு வந்திருக்கிறேன் வேந்தன்”


“குட். அங்க உனக்கு எந்த பிரச்சனையும் இல்லையே?”


“இல்லை”


“ஓ.கே. நான் நாளைக்கு ஈவ்னிங் வருவேன், அம்மாட்ட சொல்லிடு”


“சரி”


சுருக்கமாக பேசிவிட்டு பெண்களிடம் போய்விட்டாள் அவள். மனதிற்குள் தன்னை ஆசைநாயகியாக குறிப்பிட்ட புகழ்வேந்தனை இனியும் தன்னை தீண்ட விடுவதில் அவளுக்கு விருப்பமில்லை. எனவே திட்டம் போட்டு கருத்தடை மாத்திரை பாட்டிலை கொண்டு வரவில்லை.


இந்த கூட்டத்தில் அவன் தன்னை நெருங்காமல் பார்த்துகொள்ள எத்தனையோ வழிகள் வாய்க்கும். எப்படி இருந்தாலும் இன்றிரவு அவளுக்கு அவனிடமிருந்து விடுதலை.


நிம்மதியாக மாலை வரை நேரம் கடத்தியவள் குடும்பத்தோடு ராஜராஜேஸ்வரி கோவிலுக்குப் பெரியவர்கள் கிளம்ப சொல்லவும் கொண்டு வந்திருந்த புடவைகளில் வெண்ணிற மென்பட்டை எடுத்து உடுத்திக்கொண்டாள்.


கூந்தலை தளரப்பின்னியவள் மாமியார் திருமண பரிசாக கொடுத்த முத்து நகை செட்டை அணிந்து கைகளில் முத்துக்கள் பதித்த வளையலை போட்டுக்கொண்டாள்.


அழகாக அலங்கரித்து வந்து நின்றவளுக்கு ராஜேஸ்வரி திருஷ்டி கழித்தார்.


“ராக்கம்மா இந்த முளகாயை கொண்டு போய் அடுப்புல போடு”


பின்வாயிலில் எப்போதுமே ஒரு அடுப்பில் பாயிலரில் வென்னீர் கொதித்துக்கொண்டிருக்கும். அந்த அடுப்பில் மிளகாயை போட்டுவிட்டு வரச் சொன்னார்.


ஆழினி உடுத்தியிருந்த மெல்லிய வெண்பட்டுக்கு மேட்சாக நெருக்கமாக தொடுத்த மல்லிகையை ஆழினியின் தலையில் வைத்தார் அவர்.


“வாங்க கோயிலுக்குப் போயிட்டு வந்துடுவோம்”


வீட்டின் பெரியவர்கள் இளையவர்கள் அனைவரும் ராஜராஜேஸ்வரி கோயிலுக்குச் சென்று புகழ்வேந்தன், ஆழினி பெயரில் அர்ச்சனை செய்தார்கள்.


அர்ச்சகர் கொடுத்த விபூதி குங்கும பிரசாதத்தை வாங்கிக்கொண்டு பிரகாரத்தை வலம் வந்தார்கள். எதிர்பட்ட மக்கள் ஆழினியை ஆச்சரியத்துடன் பார்த்தனர். சிலர் யாரென விசாரித்தார்கள்.


“எங்க வீட்டு மூத்த மருமக” என பெருமையாக ராஜேஸ்வரி அறிமுகப்படுத்தினார்.


“ஓ புகழய்யா சம்சாரமா? ராஜாவுக்கு ஏற்ற ராணி. நீ மஞ்ச குங்குமத்தோட நீடூழி வாழனும் தாயி”


வயது முதிர்ந்த மூதாட்டி ஆழினியின் கன்னம் வழித்து வாழ்த்தினார். அதில் ஆழினியின் மனம் குளிர்ந்து போனது.


பூஜை முடிந்து அரண்மனைக்குத் திரும்பியதும் நிலா வெளிச்சத்தில் முத்து போல மின்னியது அரண்மனை.


அழகை ரசித்தவாறு தோட்டத்தில் உலாவியவள் மல்லிகை மலர்கள் இதழ் விரித்து மலர்ந்திருக்க நறுமணத்தை ரசித்துக்கொண்டிருந்தாள்.


சில நிமிடங்கள் கழித்து வலிய கரங்கள் இரண்டு பின்னே இருந்து அவளை அணைக்கவும் பதறிப்போய் திரும்பினாள்.


அவளை அணைத்திருந்தவன் புகழ்வேந்தன். அவனை பார்த்ததும் அதிர்ச்சியில் சிலையானாள்.


“வேந்தன்”


“ஷாக்கா இருக்கா ஹனி?”


இமைக்க கூட முடியாமல் நின்றாள் அவள்.


புகழ்வேந்தனோ அவளது அழகில் மெய் மறந்து நின்றான்.


வெண்பட்டில் முத்துச்சிலையாய் நின்றவளிடம் கமழ்ந்த மல்லிகை நறுமணம் அவனைப் பித்தன் ஆக்கியது.


அவனது கரங்கள் அவளது மெல்லிடையில் பயணிக்க “வேந்தன்” என அவஸ்தையாக குரல் எழுப்பினாள்.


“என்ன ஹனி?” உருகி குழைந்தது வேந்தனின் குரல்.


“நம்ம தோட்டத்தில நிற்கிறோம். மறந்துடாதீங்க”


விலக நினைத்தவளை இறுக்கி அணைத்தவன் முகத்தில் முத்தமழை பொழிந்தான்.


“வேந்தன் விடுங்க ப்ளீஸ்”


அவனிடமிருந்து விடுதலை என நினைத்தவளுக்குத் திடீர் வருகை உச்சபட்ச அதிர்ச்சி.


“உன் ஷாக் புரியுது. இவன் வரமாட்டான் சந்தோசமா இருக்கலாம்னு நினைச்சிருப்ப. நான் வந்து நின்னதும் உன் சந்தோசம் காணாம போயிடுச்சு”


வேந்தனை விலக்கி நிறுத்தினாள்.


“அத்தை கூப்புடுறாங்க வேந்தன்” என்றவள் நிற்காமல் ஓடிவிட்டாள்.


புகழ்வேந்தன் ஓடிச்செல்பவளைப் பார்த்தபடி கோணலாக சிரித்தவாறு நின்றான்.


பின்னர் அரண்மனைக்குள் நுழைந்தவனை ஆரவாரத்துடன் வரவேற்றனர் அரண்மனைவாசிகள்.


“நாளைக்கு வருவேனு சொல்லிட்டு இன்னிக்கு வந்து நிற்கிறான் பாரு... என் புள்ளை பாசக்காரன்”


“அவன் பெண்டாட்டியை பார்க்க வந்திருக்கிறான் அக்கா”


ராஜேஸ்வரியும் பர்வதமும் அவனைக் கேலி செய்தார்கள்.


புகழ்வேந்தன் பர்வதத்தை அணைத்தான்.


“எங்கம்மாக்கு அப்பறம் தான் எனக்கு எல்லாரும்” என்றான்.


“பாருங்கப்பா. புகழ் சொன்னா நம்பி தான் ஆகனும்”


“மீட்டிங் எல்லாம் முடிஞ்சதா அண்ணா? உங்களுக்காக ரிசபன் காத்திருக்கிறான்”


அவன் பார்வையிலிருந்து மறைந்து நின்ற ஆழினி அது யார் ரிசபன் என்று யோசித்தாள்.


“அவனை நாளைக்கு சந்திச்சு அட்டெண்டன்ஸ் போடுறேன் முகில். இப்போ பயங்கர பசி. சாப்பாடு போடுங்க சித்தி”


சிறுபிள்ளை போல ராஜேஸ்வரியிடம் கேட்டவனை நம்ப முடியாமல் பார்த்தாள் ஆழினி.


தன்னிடம் மட்டும் அத்துணை கர்வமாக பேசுவானே.


“உனக்குப் பொண்டாட்டி வந்தாச்சு பெரியவனே. இனி அவ தான் உனக்கு சாப்பாடு போடுவா”


ராஜேஸ்வரி சொன்னதும் புகழ்வேந்தனோ “நீங்க தான் சொல்றிங்க. என் பொண்டாட்டியை கண்ணுல காணோமே” என்றான்.


“மருமக இதழினி கூட போனாளே. ஆழிம்மா”


“வரேன் அத்தை”


இனியும் மறைந்திருக்காமல் வெளியே வந்தாள் ஆழினி.


“சொல்லுங்க அத்தை”


“உன் புருசனுக்கு சாப்பாடு போடும்மா. பயங்கரமா பசிக்குதுனு சொல்றான்”


ஆழினியோடு டைனிங் டேபிளுக்குப் போனான் புகழ்வேந்தன்.


“பயங்கரமா பசிக்குது ஹனி. சீக்கிரம் சாப்பாடு. இல்லைனா எதிர்ல இருக்கிறவங்களை கடிச்சு தின்னுடலாமானு தோணுறது”


அவன் இரட்டை அர்த்தத்தில் பேசுவது புரியவில்லை என்பது போல சாப்பாடு பரிமாறினாள் அவள்.


அவன் சாப்பிட்டு முடித்ததும் களைப்பாக இருக்கிறதென அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட அரைக்குள் சென்றுவிட்டான்.


“ஆழினி கொஞ்சம் வாயேன்”


போன அரை நிமிடத்தில் அவளை அழைக்கவும் விதியே என அங்கே போனாள் ஆழினி.


உள்ளே வந்தவளிடம் “மல்லிப்பூ எங்க?” என்று கேட்டான் அவன்.


“அங்க” என்று பக்கத்து மேஜையை காட்டினாள்.


அதை எடுத்து தலையில் வைத்துவிட்டான் புகழ்வேந்தன்.


“போய் சாப்பிட்டுட்டு வா”


அவன் அனுப்பி வைத்ததும் தப்பித்தோம் பிழைத்தோமென ஓடிவிட்டாள் ஆழினி. அவன் உறங்கும்வரை படுக்கையறை பக்கமே போககூடாதென சங்கல்பம் எடுத்துகொண்டாள்.


ஆனால் அவளது நேரம் “நீயும் போய் தூங்கும்மா. களைப்பா இருப்ப” என்று பர்வதம் அனுப்பி வைத்தார்.


எப்படியும் அவன் தூங்கியிருப்பான் என்ற நம்பிக்கையில் படுக்கையறக்குள் வந்தவள் மெய்யாகவே புகழ்வேந்தன் உறங்கிவிட்டதும் நிம்மதியுற்றாள்.


கருத்தடை மாத்திரை கொண்டுவரவில்லை என சொல்லிவிடலாமா என்று ஒரு மனம் கேள்வி கேட்டது.


ஆசைநாயகி என்றவனிடம் ஏன் சொல்லவேண்டும் என்பது இன்னொரு மனம்.


அவள் மனம் சண்டை போடும் போது “ஹனி” என்ற புகழ்வேந்தனின் குரல் அவளை உலுக்கியது.


இவன் இன்னுமா உறங்கவில்லை என திரும்பியவளை புகழ்வேந்தனின் பரந்த தோள்களும், வலிய கரங்களும் தங்களின் ஆதிக்கத்துக்குள் கொண்டு வந்தன.


“வேந்தன் நான்” என்றவளின் இதழில் கையை வைத்தவன் “நீ இன்னிக்கு ரொம்ப அழகா இருக்க. காலேஜ்ல பார்த்த அதே அழகு. என்னை கொள்ளையடிச்ச அழகு. இது எனக்கே எனக்கு” என்று சொன்னபடி கழுத்தில் இதழ்களை வைத்து காமனின் பாடத்தை ஆரம்பித்தான்.


“வேந்தன்”


ஆழினியின் விரல்கள் அவன் அணிந்திருந்த டீசர்ட்டின் காலரை பற்றிகொண்டன.


“டிசர்ட் பிடிக்கலயா ஹனி?” என்றபடி அதை கழற்றியவனின் வெற்று மார்பும் குறுகிய வயிறும் ஆண்மைக்கே இலக்கணமாக நின்றவனின் ஆகிருதியும் ஆழினியை மயக்கிவிட பெண்மயில் அமைதியாகிவிட்டாள்.


அவளது அமைதியை ரசித்தவன் மெதுவாக இதழ்களால் உடலெங்கும் ஊர்வலம் நடத்தி ஆழினியை ஆராதித்தன.


அவளை முத்தத்தால் சிவக்க வைத்தவன் மல்லிகை மணத்தை வாசம் பிடித்தான்.


“வாசனை ஆளை இழுக்குதுடி ஆழி”


ஹஸ்கியாய் முனங்கியபடி அவளது புடவையிடம் துச்சாததனம் செய்ய ஆரம்பித்தான்.


ஆழினியின் கரங்கள் சேலையைப் பிடித்ததும் “ஐ ஹேட் ட்ர

ஸ் ஆழி” என்று குறும்பாக மொழிந்தவன் அதை முழுவதுமாக அகற்றி அவளுக்கு தானே ஆடையானான்.


பழைய ஆழினியாக அவளை எண்ணி அவளுடன் காதலுடன் இணைந்தான் புகழ்வேந்தன்.


இந்நாளுக்காக பின்னாட்களீல் வருத்தப்படபோவதை அறியாமல் கணவனின் அருகாமையில் கரைந்து கொண்டிருந்தாள் ஆழினி.


Comments

Popular posts from this blog

அத்தியாயம் 7

அத்தியாயம் 4

அத்தியாயம் 8