அத்தியாயம் 12

 




புங்கைவனம் கிராமத்தில் உள்ள ராஜராஜேஸ்வரி கோவில் பாரிவேந்தனின் குடும்பத்துக்கு குலதெய்வம். அவர்கள் குடும்பத்தில் புதிதாக திருமணமான மணமக்களை அங்கே அழைத்து சென்று பொங்கல் வைத்து பூஜை போடுவது பாரம்பரியமாக கடைபிடிக்கப்படும் குடும்ப வழக்கம்.


புகழ்வேந்தனுக்கு திருமணம் முடிந்த செய்தி கிடைத்ததுமே எழில்வேந்தன் பூசாரியிடம் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்வதற்கு பணம் கொடுத்துவிட்டார்.


புதுமணமக்களுக்கு அரண்மனையில் விருந்து வைத்து வேலையாட்களுக்குப் புது துணி கொடுத்து சாப்பாடு போடுவதும் அவர்களின் வழக்கம்.


ஆழினிக்கு அரண்மனைக்கு வந்ததிலிருந்து நீங்காமலிருந்த பிரமிப்பு இச்செய்திகளைக் கேட்டறிந்ததும் இன்னும் அதிகரித்தது. அரச குடும்பத்தை சேர்ந்தவனை அவள் கல்லூரி நாட்களில் அசட்டையாக கடந்திருக்கிறாள். இப்போது அவனையே மணந்து மனைவியும் ஆகிவிட்டாள். நினைத்தால் நம்பக்கூட முடியவில்லை.


சற்று முன்னர் ராஜேஸ்வரி பர்வதத்தோடு வந்து நகைகளையும் புடவையையும் கொடுத்துவிட்டு போயிருந்தார்.


தங்க ஜரிகைகளால் நெய்யப்பட்ட புடவை கண்களைப் பறித்தது. அதற்கு பொருத்தமாக ஆபரணங்களையும் கொடுத்துவிட்டுப் போயிருந்தார் அவர்.


ஆழினி புடவையை உடுத்தி நகைகளை அணிந்துகொண்டாள். புகழ்வேந்தனுக்குப் பட்டுவேட்டி சட்டை இருந்தது. அவனை தான் காணவில்லை.


குமுதினியிடம் கேட்டபோது அவன் குதிரை லாயத்தில் இருப்பதாக சொன்னான்.


அங்கே போய் பார்த்தவள் குதிரையை தடவி கொடுத்து கொண்டிருந்த புகழ்வேந்தனை கோவிலுக்கு ஆயத்தமாக அழைத்தாள்.


“இங்க வா ஹனி”


கை நீட்டி குதிரைக்கு அருகில்  வரும்படி அழைத்தான் அவன்.


ஆழினி வெண்ணிற குதிரையைப் பயத்தோடு பார்த்தவாறு அவனருகே சென்றாள்.


“இவன் சூர்யா. என் பாசமான பெட்” என குதிரையை அறிமுகப்படுத்தினான்.


ஆழினி மிரட்சியோடு குதிரையைப் பார்த்தாள். பழக்கமற்றவளின் அருகாமையில் குதிரையும் பயந்து கனைத்தது. கால்களை உயரத் தூக்க முயன்றது. ஆனால் அருகில் புகழ்வேந்தன் இருந்து தட்டிக்கொடுத்தான்.


“ஒன்னுமில்லை சூர்யா. இவ ஆழினி. உன்னை ஒன்னும் செய்யமாட்டா”


குதிரை அமைதியானது. ஆழினிக்கு இன்னும் பயம் அகலவில்லை. புகழ்வேந்தன் அவளது கையை பிடித்து குதிரையின் தலையை வருடிக்கொடுக்க செய்தான்.


பட்டுப்போன்ற வெண்ணிற முடிகளில் கைகளை அலைந்தவள் “சூர்யா” என்று அழைக்கவும் குதிரை ஆவேசமின்றி கனைத்தது. அதாவது அவளை சூர்யா தோழியாக ஏற்றுக்கொண்டானான். இதை சொன்னவன் புகழ்வேந்தன்.


ஆழினி அவனை திகைப்பு மேலிட பார்த்தான்.


“உன் பார்வைல ஒரு வித்யாசம் தெரியுது ஹனி. என்ன சமாச்சாரம்?”


“இவ்வளவு பெரிய குடும்ப பின்னணியில இருக்கிறவர் ஏன் காலேஜ் நாட்கள்ல மிடில் க்ளாஸ் பையனா நடந்துக்கிட்டிங்க?”


அவளது கேள்வியில் இறுக்கமாக மாறியது புகழ்வேந்தனின் முகம்.


“ஓ நான் பெரிய குடும்பத்தை சேர்ந்தவன்னு முன்னமே தெரிஞ்சியிருந்தா நீ என்னை காதலிச்சிருப்ப தானே? கடைசில பணத்துக்கும் பகட்டுக்கும் விழுறவளா ஆயிட்டியே ஆழினி தேவி”


குத்திக் காட்டி பேசினான் அவன்.


“அப்படி இல்ல வேந்தன்” என்றவளின் பேச்சை அவன் முடிக்க விடவில்லை.


“அப்படி தான். நீ பணத்துக்காக மட்டும் தான் அமைதியா இருக்கிற ஆழினி. இப்ப ராஜகுடும்பம்ன்று வேற தெரிஞ்சிக்கிட்ட. இனி என்னை விட்டு போக உனக்கு மனசு வராது. என்னை விட்டுப் போனா உனக்கு வேற போக்கிடமும் இல்லை. என்ன பார்க்கிற? உன் அப்பனை பற்றி யோசிக்கிறியா? அவன் உன் அம்மாவையே சொத்துக்காக கொன்னவன். தமயந்தி மேல இருக்கிற கண்மூடித்தனமான நம்பிக்கையும் காதலும் அவனை அப்படி செய்ய வச்சுது. உன்னை அவன் வளர்த்தது கூட பாசத்தில் இல்லை. மீனாட்சி அம்மா சொத்து முழுக்க உனக்கும் உன் கல்யாணத்துக்கு அப்புறம் உன்னை மணமுடிக்கிறவனுக்கும்னு எழுதி வச்சிட்டாங்க. உன் கவனம் வெளியாளிங்க கிட்ட போய்டக்கூடாதேனு அவசரமா இமயனுக்கு உன்னை நிச்சயம் செஞ்சான் உன் அப்பன்.


நான் உன்னை காதலிக்கிறதை தெரிஞ்சிக்கிட்டவன் உன் அம்மாவுடைய நகையை நான் உன் வீட்டுக்கு வந்து திருடுனதா பொய் புகார் கொடுத்தான். ஆனா அந்த நகையை உன் அப்பனும் சித்தியும் உனக்குக் குடுக்காம லவட்டிட்டாங்க. நீ முட்டாள் போல அவங்களை நம்பி என்னை போலீஸ்ல மாட்டி விட்ட. நல்லா கேட்டுக்க, என் வட்டாரத்தை விட்டு நீ விலகிப்போனா, உனக்கு நடுத்தெரு தான் நிரந்தரம். உன் அப்பனும் தமயந்தியும் உனக்கு ஆதரவு கொடுக்க மாட்டாங்க. இதை எப்போதும் மனசில வச்சுக்க”


தனது தந்தை, சித்தியைப் பற்றி வேந்தன் சொன்னதை கேட்டு ஆழினி ஸ்தம்பித்து போய்விட்டாள்.


“பொய்” என்று கத்தினாள் அவள்.


புகழ்வேந்தன் அவளை இகழ்ச்சியாக கடந்தவன் குதிரை மேல் ஏறியமர்ந்தான்.


“என் பேச்சை உண்மைனு நம்ப விருப்பமில்லியா ஹனி? உன் அப்பனுக்கு போன் போட்டு எனக்கு வேந்தனை பிடிக்கலை, உங்க கூடவே வந்துடுறேன்னு சொல்லி பாரு. அவனுடைய சுயரூபம் தெரியும்”


நக்கலாக சொல்லிவிட்டு டக்டக்கென குதிரை குளம்பு ஒலிக்க அவன் கடந்துவிட்டான்.


ஆழினிக்கு அவன் சொன்ன செய்தியில் தலை சுற்றியது.


பாசமே உருவான தந்தை, அன்பே உருவான சித்தியைப் பற்றி இப்படி தாறுமாறாக பொய் சொல்கிறானே! என்ன மனிதன் இவன். சீ!


அப்படி என்றால் வைதீஸ்வரனுக்குப் போன் போட்டு புகழ்வேந்தன் சொன்னது போல கேள் என்று மூளை கட்டளையிட்டது.


ஆழினி தாமதிக்காமல் வைதீஸ்வரனின் போனுக்கு கால் செய்தாள்.


மறுமுனையில் “ஹலோ” என்றார் வைதீஸ்வரன்.


“அப்பா நான் நம் வீட்டுக்கு வந்துடட்டுமா?”


உடனே வைதீஸ்வரன் பதற ஆரம்பித்தார்.


“ஏன்மா? என்னாச்சி? மருமகன் எதுவும் சொன்னாரா?”


“அவருக்கு என் மேல் பாசமே இல்லைப்பா. எனக்கு அவரை விட்டா வேறு போக்கிடம் இல்லைனு சொல்றார்”


“உண்மை தான் ஆழினி. அவர் தான் இனி உன் வாழ்க்கை. நம் சொத்து எல்லாம் இப்போ அவருடையதாயிடுச்சு. அவருக்குப் பிடிக்கலைனா என்னால எப்படி உன்னை நம் வீட்டில சேர்த்துக்க முடியும்?”


“அவர் உங்களை ஏமாற்றி சொத்தை அவர் பெயர்ல மாற்றிக்கிட்டார்னு கோர்ட்ல கேஸ் போடலாம்பா”


“அது சரியா வராது ஆழினி. புகழ்வேந்தனை எதிர்த்து வாதாட எந்த வக்கீலும் ஒத்துக்கமாட்டாங்க. ஏதோ கடவுள் புண்ணியத்துல கம்பெனில இருந்து வரும்படி வருது. அதுக்கு வேட்டு வச்சிடாதே. புருசனோட புத்தியா பொழைக்க பார். இங்க வரனும்னு கனவு கூட காணாதே”


கறாராக பேசிய தந்தையின் சொற்கள் ஆழினிக்கு அடுத்த அதிர்ச்சியைக் கொடுத்தது.


“அப்பா”


“போனை வை ஆழினி”


கால் கட்டான டோன் கேட்டது. ஆழினி உடைந்து போனாள் அக்கணம். தந்தை இருந்தும் தாய் ஸ்தானத்தில் சித்தி இருந்தும் அனாதை நிலமை அவளுடையது. அவர்கள் செய்த துரோகத்திற்கு தண்டனை கிடைக்க வேண்டும்.


தூரத்தில் குதிரை மீது ராஜா போல வந்து கொண்டிருந்த புகழ்வேந்தன் மீது அவளுடைய துவேசம் திரும்பியது.


இவனால் தானே எல்லாம்? என்னை பழி தீர்க்கிறேன் என்று சொல்லி தனது உடல்தேவைக்கு உபயோகிக்கிறான். என்னை தூக்கி போடுவதற்கு வசதியாக குழந்தை வந்துவிடக்குடாதென கவனமாக இருக்கிறான். இவனுக்கு நான் கொடுக்கும் பதிலடி கருவுறுவது மட்டும் தான் என தீர்மானித்தாள்.


புகழ்வேந்தன் ஆழினிக்கு அவளது நிலமையை உணர்த்திவிட்டோமென்ற கர்வத்தோடு குதிரையிலிருந்து இறங்கினான்.


“பேசியாச்சா ஆழினிதேவி? என்ன சொன்னார் உன் அப்பா?”


கிண்டலாக கேட்டான். ஆழினி பதில் சொல்லாமல் அங்கிருந்து சென்றதும் வெற்றிக்களிப்பில் உரக்கச் சிரித்தான்.


“இதுக்கே ஸ்தம்பிச்சு போனா எப்படி ஆழினி? இன்னும் நீ பார்க்க வேண்டியது எவ்வளவு இருக்கு?”


வஞ்சினத்துடன் உரைத்தவன் குதிரையைக் கட்டிப்போட்டுவிட்டு அரண்மனைக்குள் நுழைந்தான்.


அவன் முன்னே எதிர்பட்டார் எழில்வேந்தன்.


“இன்னுமா கோவிலுக்கு தயாராகலை?”


“இதோ சித்தப்பா. மாமா எங்க? அவர் கிட்ட முக்கியமான சமாச்சாரம் பேசனும்”


“ஆடிட்டர் ஆபிசுக்குப் போயிருக்கிறார் புகழ். என்ன சமாச்சாரம்?”


“ராஜராஜேஸ்வரி கோவில் மதில்சுவர்ல விரிச்சல் விழுந்திருக்குது சித்தப்பா. அதை சரி செய்யனும்”


“அவர் வந்ததும் பேசி முடிச்சிடுப்பா. எனக்கு இருந்த வேலையில நான் கோவிலை கவனிக்காம விட்டுட்டேன். இது உன் கவனத்துக்கு வந்ததுல கொஞ்சம் நிம்மதியா இருக்கு”


“சரிங்க சித்தப்பா. நான் பேசிடுறேன்”


புகழ்வேந்தனிடம் பேசிவிட்டு  தனது ரூமிற்கு வந்தவன் குளித்து உடைமாற்றினான்.


ஆழினி எங்கே என தேடியவன் அவள் தோட்டத்தில் அமர்ந்திருக்கவும் இதழினியிடம் அவளை அழைத்து வர செய்தான். அணிந்திருந்த வைர வைடூரீய ஆபரணங்களோ அவளது முகத்தில் சந்தோசத்தைத் தரவில்லை.


சோர்ந்து போயிருந்தவளின் அருகே போனவன் “கோவிலுக்குப் போகனும் ஆழினி. கெளம்பு” என்றான்.


ஆழினி ரோபோ போல் எழுந்தாள்.


“வைதீஸ்வரன் எப்பேர்ப்பட்டவன்னு தெரிஞ்சிடுச்சு போல. இந்த சந்தோசம் போதும் எனக்கு”


அவளை அணைத்தபடி அரண்மனை முகப்புக்கு அழைத்துச் சென்றான் புகழ்வேந்தன்.


குடும்பத்தார் வந்ததும் ஒன்றாக சேர்ந்து ராஜராஜேஸ்வரி கோவிலுக்குச் சென்றார்கள்.


பூசாரி அவர்கள் வந்ததும் மரியாதையாக வரவேற்றார்.


ராஜராஜேஸ்வரிக்கு மலர் அலங்காரம் செய்து பாரிவேந்தனின் தந்தை அம்மனுக்காக கொடுத்த நகைகளை போட்டு ஜொலிக்க செய்திருந்தார்.


ஆழினி மனதிற்குள் தீர்மானித்ததை அம்மனிடம் கூறிவிட்டாள்.


“என்னை பெற்றவருக்கும் என் புருசனுக்கும் நான் வேண்டாதவளா ஆயிட்டேன்மா. நீயும் என்னை கைவிட்டுடாதே. என்னை ஆசைநாயகினு சொல்லி அவமானப்படுத்துன வேந்தனுடைய வாரிசை நான் சுமக்கனும். அதுக்கு உன் அருள் வேணும். அவர் சொன்னமாதிரி என் அம்மாவை திட்டம் போட்டு தமயந்தியும் வைதீஸ்வரனும் கொன்னது உண்மையா இருந்துச்சுனா அவங்களுக்கான தண்டனையை நீ கொடு தாயே”


மனதில் இமயமலை அளவுக்கு இருந்த வேதனை அம்மன் முன்னிலையில்  கொஞ்சம் தணிந்தது.


புகழ்வேந்தன் தனது கர்வம் அனைத்தையும் தூக்கிப்போட்டுவிட்டு அம்மன் முன்னிலையில் பணிந்து வேண்டினான்.


“நான் செய்யுறது சரி இல்லைனு தெரியும் தாயே. இருந்தாலும் என்னால பழசை மறக்க முடியலை. ஆழினியை மன்னிக்கிற பெரிய மனசை எனக்குக் கொடுக்கனும். என் கோபமும் பழிவெறியும் அவ அருகாமையில மறைஞ்சிடுது. ஆனாலும் அவளை பழிவாங்குறதா சொல்லி என்னை நானே சமாதானப்படுத்திக்கிட்டேன். அவ மேல கோவமும் காதலும் ஒரே நேரத்தில வருதே. என்னால என்னை தடுக்க முடியலை”


கணவனும் மனைவியும் அம்மனிடம் வேண்டிக்கொண்டு கிளம்பினார்கள்.


வீட்டுக்கு வந்ததும் ஆழினி – புகழ்வேந்தன் கையால் வேலைக்காரர்களுக்குப் புது துணியும் பணமும் கொடுக்க செய்தார் எழில்வேந்தன். பின்னர் அனைவருக்கும் சாப்பாடு பரிமாறப்பட்டது.


“நல்லா இருக்கனும்யா” என்று அனைவரும் வாழ்த்தி சென்றதும் வீட்டினருக்கு விருந்து ஆரம்பித்தது.


சாப்பாடு ருசியாக இருந்தது. நீண்டநாட்கள் கழித்து அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டதில் எழில்வேந்தனின் முகத்தில் பூரிப்பு பொங்கியது.


பின்னர் ஓய்வெடுக்க அவரவர் அறைக்குப் போய்விட்டனர் அனைவரும். ஆழினியும் தன் பங்குக்கு ஓய்வெடுக்கப் போய்விட்டாள்.


புகழ்வேந்தன் அலுவலகத்திலிருப்பவர்களிடம் வீடியோ கான்பரன்சில் பேசிக்கொண்டிருந்தவன் அறைக்குள் வந்த மனைவியைப் பார்த்தவாறு வேலையைத் தொடர்ந்தான்.


ஆழினி அவனைக் கண்டதும் அங்கே இருக்க தயங்கினாள்.


தயக்கத்துடன் வெளியே போக எத்தனித்தவளை “எங்க போற ஹனி?” என்ற புகழ்வேந்தனின் குரல் தடுத்து நிறுத்தியது.


“நீங்க வேலையை கவனிங்க வேந்தன். நான் இருந்தா தொந்தரவா இருக்கும்”


“உன்னால எனக்கு எந்த தொந்தரவும் இல்லை ஹனி”


போலியாய் சொன்னாலும் கேட்க பிடித்திருந்தது அவளுக்கு.


எனவே மறுபேச்சின்றி அமர்ந்தாள்.


புகழ்வேந்தன் அவனது வீடியோ கான்பரன்சை முடித்த பிறகு ஆழினியிடம் பேச்சை ஆரம்பித்தான்.


“கோவில்ல ரொம்ப நேரம் வேண்டுன போல. நான் நாசமா போகனும்னு வேண்டினீயா?”


“அப்படி வேண்டுனேன்னு நீங்களா நெனைச்சா நான் என்ன செய்வேன் வேந்தன்?”


மனைவியின் நிதானமான பேச்சு வேந்தனை யோசிக்க வைத்தது.


“உன் கிட்ட ஒரு சேஞ்ச் ஓவர் தெரியுதே ஹனி. இதுக்கு என்ன காரணம்?”


அவன் விசாரணையாய் பார்க்க ஆழினிக்கு முன்பு போல உதறல் எதுவும் இல்லை. என்ன செய்துவிடுவாய் நீ என்ற நிலை.


அவள் நிமிர்வாக நிற்கவும் பிடித்து இழுத்து தன்னருகே அமர வைத்தான்.


“இன்னிக்கு தெரிய வந்த உண்மையால நீ கொஞ்சம் டிஸ்டர்பா இருக்கிற மாதிரி தோணுது”


“உங்களை மறுபடி பார்த்தப்போ இருந்தே நான் டிஸ்டர்ப்டா தான் இருக்கிறேன் வேந்தன். என்னை அவமானப்படுத்துறதுக்கும் வேதனைப்படுத்துறதுக்கும் மட்டுமே கல்யாணம் செஞ்ச மனுசன் தானே நீங்க”


“ஓஹ் நீ அதிகமா பேசுற ஹனி. உன் நிலமை என்னன்று நான் சொல்லிட்டேன். என்னை விட்டா உனக்கு ஆதரவு கொடுக்க யாரும் வரபோறதில்லை. உன் காதலன் இமயனும் வரமாட்டான்”


ஆழினிக்கு  இமயனையும் அவளையும் இணைத்துப் பேசவும் கோபம் வந்துவிட்டது.


“எனக்கும் இமயனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இஷ்டத்துக்கு பேசாதீங்க வேந்தன்”


கோவத்தோடு எழுந்தவளை மீண்டும் இழுத்து அமர வைத்தான்.


“இன்னிக்கு உன் கோவம் பழைய ஆழினியை நினைவுபடுத்துது. மறுபடி உன் மேல காதல்ல விழ வைக்க முயற்சிக்கிறியா? அது நடக்காது ஹனி”


ஆழினி அவன் சொன்னதை கேட்டதும் இளக்காரமாக சிரித்தாள்.


“நீங்க பழைய இன்னசண்ட் வேந்தனா என் முன்னாடி வந்து நின்னா உங்களை காதலிக்க முயற்சி பண்ணுவேன். இந்த வேந்தனை காதலிக்கனும்னா நான் இதயமே இல்லாத ராட்சசியா மாறனும்”


“இன்னசண்ட் வேந்தனை அவ்வளவு பிடிக்குமா உனக்கு? இவ்வளவு நாளா இந்த சமாச்சாரம் எனக்கு தெரியாம போயிடுச்சு ஆழினி”


அவளைப்போல இளக்காரத்தோடு கூறினான் புகழ்வேந்தன்.


“உங்களுக்கு நிறைய சமாச்சாரம் தெரியாது வேந்தன். தெரிஞ்சா ஒருவேளை நீங்க பழைய வேந்தனா மாறலாம்”


“அதுக்கு வாய்ப்பு கம்மி ஆழினிதேவி. பழைய வேந்தன் எப்போ இறந்தான் தெரியுமா? என் அப்பா என் கண் முன்னாடி இரத்தவெள்ளத்தில கெடந்தாரே அப்போ. அவன் மறுபடி வரமாட்டான். உனக்கு காலம் முழுக்க இந்த வேந்தன் தான் துணை”


அவன் கர்வமாக உரைத்தான் தான். அதன் மறைபொருள் என்னிடமிருந்து உன்னை பிரிக்க விடமாட்டேன் என்பது.


“துணையா இருக்கிறவங்க காயப்படுத்தமாட்டாங்க வேந்தன். நீங்க எப்போவும் எனக்கு துணையா இருக்கமுடியாது. எழுதி வச்சுக்கோங்க, நீங்க இப்போ செய்யுற எ

ல்லாத்துக்கும் ஒருநாள் கட்டாயம் வருத்தப்படுவிங்க. நான் வருத்தப்பட வைப்பேன்”


மூச்சு வாங்க சொல்லிவிட்டு அங்கிருந்த சோபாவில் அமர்ந்தாள் ஆழினி.


புகழ்வேந்தன் அவளிடம் தெரிந்த மாற்றத்தைக் கண்டு புருவம் சுழித்தான்.


 


 


 


Comments

Post a Comment

Popular posts from this blog

அத்தியாயம் 7

அத்தியாயம் 4

அத்தியாயம் 8