“இன்னிக்கு என் ட்ரீட். என்ன வேணுமோ சாப்பிடுங்க. இன்னிக்குச் சாப்பிட்டாச்சே கல்யாணத்துக்கு வரவேணாமுனு முடிவு செஞ்சிங்கனா வீடு தேடி வந்து ஒதைப்பேன்” நண்பிகளுக்கு கட்டைளை போட்டு கொண்டிருந்தாள் அவள். ஒல்லியான மேனி, நல்ல உயரம், தேனையும் சந்தனத்தையும் கலந்த நிறம். பார்ப்பவர்களை சுண்டியிழுக்கும் எழில் அவளுடையது. இத்தனை அழகும் பணமும் ஒரே இடத்தில் சேர்ந்திருந்தால் அங்கே ஆணவம் இல்லாமல் இருக்குமா? நம் நாயகிக்கு அதுவும் கொஞ்சமுண்டு. அவள் ஆழினி, இருபத்து மூன்று வயது இளங்கிளி. இன்னும் ஒரு வாரத்தில் அவரது தந்தையின் தோழர் ஆராவமுதனின் மகன் இமயவரம்பனை மணமுடிக்க போகிறாள். ஆழினியின் அப்பா வைத்தீஸ்வரன் நகரத்தின் தலைசிறந்த பிசினஸ்மேன்களில் ஒருவர். கட்டிடங்களைக் கட்டி விற்கும் கன்ஸ்ட்ரக்சன் பிசினஸ் அவர்களுடையது. ஆழினி குழந்தையாக இருந்தபோது அன்னை மீனாட்சி இறந்துவிட அவரது தங்கை தமயந்தி அக்கா மகளின் நலனுக்காக வைதீஸ்வரனை மணந்தார். ஆழினியை இன்று வரை சொந்த மகளாகவே வளர்த்து வருபவர் தனக்கென ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ளவில்லை. அப்படி பெற்றுக்கொண்டால் ஆழினியை வெறுத்துவிடுவோமோ என்ற பயம் அவருக்கு. அதனாலே ஆழ...
ஆரம்பம் அமர்க்களம்
ReplyDeletethank you sago
Deleteஎன்னை tag பண்ணுங்கள் ப்ளீஸ்
ReplyDeletefacebookil request kudunga sagi. na accept seyyuren. appa thaan tag seyya mudigirathu
Delete