அத்தியாயம் 7
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சம்யுக்தாவுடன் நின்று கொண்டிருந்தாள் மித்ரவிந்தா. சம்யுக்தா தனது சொந்த ஊருக்குச் செல்ல மித்ரவிந்தா அவளை வழியனுப்ப வந்திருந்தாள்.
"ஸ்டடி ஹாலிடேனு ஊருக்கு கிளம்பினது ஓகே. ஆனா எக்சாமுக்குக் கொஞ்சமாவது படி சம்யூ. ஆண்ட்டி அங்கிளை நான் ரொம்ப விசாரிச்சேனு சொல்லு"
"நான் ஊருக்குப் போனதும் செய்ற முதல் வேலையே இந்த புக்கை எல்லாம் தலைய சுத்தி வீசுறது தான்" என்று கிண்டலாக சொல்லி அவளிடம் அடி வாங்கிக் கொண்டாள் சம்யுக்தா.
பேருந்து கிளம்பத் தயாராகவும் அவள் அதில் ஏறிக்கொள்ள அவளுக்கு கையசைத்துவிட்டு கிளம்பினாள் மித்ரவிந்தா. அங்கிருந்து அவளது வீடு இருக்கும் பகுதிக்கு வந்து சேருவதற்குள் அவள் ஓய்ந்து போனாள் எனலாம். பெருநகரத்தின் போக்குவரத்து நெரிசலின் உபயம் தான்.
அவர்களின் தெருமுனைக்கு வந்த போதே யாரோ கண்காணிப்பது போல தோன்ற மனதின் உறுத்தலை ஓரங்கட்டியபடி வீட்டின் கேட்டை மூடியவள் படியேறி கதவைத் திறக்க முயன்ற நேரம் "ஹாய் ஹனி" என்ற காந்தக்குரல் காதில் விழ கதவில் வைத்த கை வைத்தபடி இருக்க நிச்சயம் அவனாக இருக்காது, இது என்னவோ பிரம்மை என்று எண்ணியபடி மீண்டும் கதவில் கை வைத்து தள்ளி உள்ளே சென்றவள் கதவை வேகமாக மூட முற்பட்டாள்.
ஆனால் அதற்குள் வாயிலில் பிரசன்னமானான் முகுந்த். குறும்பு மின்னும் விழிகள், ஆளை மயக்கும் சிரிப்பு, அசரடிக்கும் உயரம் என அதே ஆண்மை மிளிரும் கம்பீரத்துடன் இம்முறையும் மித்ரவிந்தா அவனது தோற்றத்தில் மெய் மறந்து நின்றாள்.
ஆனால் கூகுளின் உபயத்தால் கிடைத்த அவனது போட்டோக்கள் நினைவுக்கு வரவும் அவளின் முகம் பனிகட்டியாக இறுகியது. இறுகிய முகத்துடன் கதவை மூட முயல அவளது முயற்சியை துச்சமாக தடுத்து வீட்டுக்குள் நுழைந்தான் அவன்.
மித்ரவிந்தா அவனது அடாவடியில் ஆத்திரமுற்று சீற்றம் நிறைந்த விழிகளுடன் அவனை முறைக்க ஆரம்பித்தாள்.
"இப்டி இண்டீசண்டா பிஹேவ் செய்ய உனக்கு வெக்கமா இல்லயா முகுந்த்? என் அனுமதி இல்லாம என் வீட்டுக்குள்ள இப்டி அடாவடியா வரதுக்கு பேரு ரவுடித்தனம்" என்றாள்.
முகுந்த் அதை கவனியாதது போல நடுஹாலுக்கு வந்தவன் வீட்டைப் பார்த்துவிட்டு "நாட் பேட். சின்ன வீடா இருந்தாலும் நீட்டா அம்சமா இருக்கு" என்று சொன்னபடி அங்கிருந்த மினிசோபாவில் உட்கார்ந்தான்.
மித்ரவிந்தா அவனது அதிரடியான செய்கையில் செய்வதறியாது தேமேயென விழித்தாள்.
பின்னர் இவனிடம் பேசினால் தானே வம்பு. பேசாமல் இருப்போம் என மௌனவிரதம் பூண்டாள். ஆனால் அவளது மௌனவிரதத்தை முறியடிக்கத் தானே முகுந்த் வந்திருக்கிறான்.
"என்ட பேசமாட்டியா ஹனி? என் அம்மாவுக்கு ஷாரி எடுக்க வரேனு என் கிட்ட நீ பிராமிஸ் பண்ணுனதா ஞாபகம். ஆனா பொண்ணுங்க கொடுத்த வாக்கை காப்பாத்துறதில்லங்கிறத நான் மறந்துட்டேன் போல. அன்னிக்கு ஃபுல் டேயும் உன்னோட போனுக்கு நான் மாத்தி மாத்தி கால் பண்ணேன். த நம்பர் யூ ஹேவ் டயல்ட் இஸ் கரெண்ட்லி சுவிட்ஸ்ட் ஆப்னு ரெக்கார்டட் வாய்ஸ் வந்தப்பயும் நீ போனை ஆன் பண்ணிட்டு என்னை கூப்பிடுவனு நம்பிக்கையோட காத்திருந்தேன் ஹனி. ஆனா என் ஹனி என்ன பண்ணா தெரியுமா? என் நம்பரையே டெலீட் பண்ணிட்டா"
அமைதியாய் சொன்னவன் கடைசி வார்த்தையில் கோபமுற்றானோ!
மித்ரவிந்தா அவனை ஏறிட்டாள். அவனது முகத்தில் கோபம், வெறுப்பு என எந்த உணர்ச்சியும் இல்லை. அதில் உணர்ச்சியற்ற தன்மை நிறைந்திருந்தது. அவன் அப்படியே இருந்திருந்தால் கூட மித்ரவிந்தா எதுவும் சொல்லியிருக்க மாட்டாள்.
ஆனால் முகுந்த் பேசிமுடித்துவிட்டு அவளை நெருங்கவும் அவளுக்குள் அபாயச்சங்கு ஒலிக்க ஆரம்பித்தது.
"கிட்ட வராத முன்னா"
"ஏன் என்னை அவாய்ட் பண்ற?"
"முன்னா தள்ளி போ"
"ஏன் என்னை அவாய்ட் பண்றனு கேட்டேன் ஹனி"
"உனக்கு காது கேக்கலயா முன்னா? தள்ளி போடா"
"ஏன் என்னை அவாய்ட் பண்றடி?"
அவனது சத்தமற்ற நிதானமான வார்த்தைகளில் நிரம்பியிருந்த கோபமும் கண்களில் தெரிந்த சீற்றமும் அவளது முதுகுத்தண்டை சில்லிட வைத்து நெஞ்சுக்குள் குளிர் பரப்பியது.
வாயில் வார்த்தைகள் வர மறுத்தது. நெஞ்சுக்குள் குளிர் பரவினாலும் வியர்வைப்பூக்கள் மலர்வதை யாராலும் தடுக்கமுடியவில்லை.
மித்ரவிந்தா அவனைத் தாண்டி செல்ல முயல அவளைச் சுவருடன் சேர்த்து தனது கரங்களால் அணை கட்டி தடுத்தான் முகுந்த்.
"ஐ வோன்ட் லெட் யூ எஸ்கேப். ஆன்சர் மை கொஸ்டீன். ஒய் டிட் யூ அவாய்ட் மீ?"
மித்ரவிந்தா இதற்கு மேல் அமைதி காப்பதில் அர்த்தமில்லை என புரிந்து கொண்டு வாயைத் திறந்தாள்.
"எனக்கு உன்னோட வர விருப்பமில்ல முன்னா. அதனால தான் வரல"
"ம்ம். ஓகே. ஏன் என் நம்பரை டெலீட் செஞ்ச?"
"உன் நம்பர் எனக்குத் தேவையில்லனு தோணுச்சு. அதனால தான் டெலீட் செஞ்சேன்"
"ஓஹோ. தேவையில்லனு தோணுனது என் நம்பரா நானா?" இறுகிய குரலில் சொன்னவன் அவளை வெறிக்க ஆரம்பித்தான்.
மித்ரவிந்தா ஒரு வினாடி திகைத்து விழித்தவள் "ரெண்டுமே தான்" என்றாள் மெல்லிய குரலில்.
அவள் சொன்ன அடுத்த வினாடி முகுந்தின் விழிகள் கோபத்தில் ஜொலித்தன. முகம் அவமானத்தில் சிவந்தது. ஆனால் அவளின் விழிகள் அவனை ஆராய முற்பட்ட கணத்தில் முகத்தை சீராக்கிக் கொண்டான்.
"எதனாலனு நான் தெரிஞ்சுக்கலாமா?"
"உன் லைப்ஸ்டைல், பழக்கவழக்கம், உன் ஸ்டேட்டஸ் எல்லாமே என்னில இருந்து வித்தியாசமானது. சினிமால வேணா வேற வேற சோஷியல் கிளாஸ்ல இருக்கிறவங்க லவ்... ஃப்ரெண்ட்சா இருக்கலாம். ஆனா நிஜ வாழ்க்கைல அப்டி இருக்க முடியாதுனு புரிஞ்சுது. அதோட....." என்றவள் சொல்ல முடியாமல் தவிக்க ஆரம்பித்தாள்.
ஆனால் சொல்லாமல் உன்னை விடப்போவதில்லை என முகுந்த் சொன்ன விதத்தில் கண்களைத் தாழ்த்தியபடி "அதோட நீ பழகுன மற்ற கேர்ள்ஸ் மாதிரி நான் இல்ல முன்னா. எனக்குனு சில கோட்பாடு இருக்கு. உன்னோட பழகுறதால அது பாதிக்கப்படலாம்னு நான் பயப்படுறேன்" என்றாள் சங்கடத்துடன்.
முகுந்த் புரியாத பார்வை பார்த்தவன் "வாட்? நானும் நீயும் குலோசா இருக்கிறதுக்கும் அந்த கேர்ள்சுக்கும் என்ன லிங் இருக்கு ஹனி? அண்ட் மோர் ஓவர் நீ அவங்களை மாதிரி இல்லனு எனக்கு நல்லா தெரியும். இது வரைக்கும் என்னை எந்த பொண்ணும் அவாய்ட் பண்ணதில்ல. என்னோட டைம் ஸ்பெண்ட் பண்ண தான் மற்ற பொண்ணுங்க நினைப்பாங்க. என் கவனத்தை அவங்க பக்கம் திருப்ப முயற்சிப்பாங்க. ஆனா நீ என்னை அவாய்ட் பண்ண. என் கவனம் உன் பக்கம் வரக்கூடாதுனு என் நம்பரை டெலீட் பண்ண. அப்டி இருந்தும் நான் உன்னைத் தேடி வந்திருக்கிறேன்னா அதுக்கு என்ன அர்த்தம்?" என்று அவளிடம் வினவ
"என்ன அர்த்தம் முன்னா?" என கேட்டாள் அவள்.
"எனக்கு நீ அவ்வளவு முக்கியமானவனு அர்த்தம் ஹனி. நீ எனக்கு ஸ்பெஷல்டி. உன்னை பிரிஞ்சு சிலநாள் இருந்ததுக்கே எனக்கு பைத்தியம் பிடிச்சிடுச்சி. நிரந்தரமா பிரிஞ்சிட்டா நான் இருப்பேனா இல்லையாங்கிறதே டவுட்டாய்டும். நீ என்னை ரொம்ப பாதிச்சிட்ட ஹனி" என்றவன் அவளை இறுக்கமாக அணைத்து அவளின் கார்கூந்தலில் முகம் புதைத்தான்.
மித்ரவிந்தாவுக்கு அவன் பேசியதில் கண்ணீர் எட்டிப்பார்க்க அவனது உயரத்துக்கு அவளின் தலை அவன் மார்பளவே இருக்க அவளின் கண்ணீர்த்துளிகள் அவனது டீசர்ட்டை நனைக்கத் துவங்கியது.
முகுந்த் அவளின் அணைப்பில் ஏதோ ஒன்றை புதிதாய் உணரும் போதே மார்பு பக்கம் சட்டை நனைவதை உணர்ந்து திடுக்கிட்டான். அவளை அவசரமாக விலக்கி நிறுத்திவிட்டு கண்ணீரில் நனைந்திருந்த டீசர்ட்டையும் அவளின் ஈர இமைகளையும் மாறி மாறி பார்த்துவிட்டு அவளின் குடை இமைகளின் மீது இதழ் பதித்தான்.
அடுத்து அழுது சிவந்த நாசிகளின் மீது அவனது கவனம் சென்றது. அவளது மூக்கின் மீது மென்மையாக முத்தமிட்டான். துடித்த இதழ்களின் மீது அவனது கவனம் செல்லும் போதே அவசரப்படாதே முகுந்த் என அவனது மூளை எச்சரித்தது.
"நீயும் என்னை ரொம்ப பாதிச்சிட்ட முன்னா. ஆனா இந்த பாதிப்பு எப்டிபட்டதுனு புரிஞ்சுக்கிறதுக்கு முன்னாடியே நான் அத முளையோட கிள்ள நெனைச்சேன். ஆனா, ஆனா உன்னை நேர்ல பாக்குறப்ப என்னால உன்னை பத்தி நெனைக்காம இருக்க முடியல முன்னா"
"ஓகே. ரெண்டு பேருமே ஒருத்தருக்கொருத்தர் எவ்வளவு முக்கியம்னு இப்ப புரிஞ்சுகிட்டோம். இனிமே நமக்குள்ள எந்த பிரச்சனையும் வராது" என்று சொன்னபடி அவளின் முன்னெற்றியில் முத்தமிட்டான் அவன்.
மித்ரவிந்தாவுக்கு அக்கணம் அவன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை பிறந்தது. தனது காதல் தவறானவன் மீது இல்லை என்பது புரிந்தது. கண்ணீரைத் துடைத்துக் கொண்டவள் "என் அட்ரஸ் உனக்கு எப்டி கிடைச்சிது?" என வினவ
"நிஹாரிகா இருக்க பயமேன்" என்றான் முகுந்த்.
"ஓ! சரி சரி. அப்றம் சார் கெளம்புறீங்களா?" என அவள் கேட்கவும் அவனது முகம் விளக்கெண்ணெய் குடித்ததை போல மாறிவிட்டது.
"ஹனி நீ இத்தனை நாள் என்னை அவாய்ட் செஞ்சது தப்பு. அப்றம் இப்ப என்னை கெளம்ப சொல்லுறதும் தப்பு"
"அப்ப சார் கெளம்புற எண்ணத்துல வரல?"
"எப்டி உன்னை தனியா விட்டுட்டு நான் போவேன் ஹனி? இன்னிக்கு சம்யூ வேற இல்ல. நீ தனியா இருந்தா பயந்துடுவ. நான் உன் கூட இருந்து பத்ரமா பாத்துக்கிறேனே"
"நான் தனியா இருக்கிறது ஒன்னும் புதுசு இல்ல சார். நீங்க கெளம்புங்க" என்று அவள் அவனைப் பிடித்துத் தள்ள அவனோ அவளையும் சேர்த்து இழுத்தபடி சோபாவில் சரிந்தான்.
மித்ரவிந்தா பதறி விலக முயல முகுந்த் தன்னோடு சேர்த்து அவளை அணைத்துக் கொண்டான்.
மித்ரவிந்தாவின் பதற்றம், முகச்சிவப்பு, அதிரும் இதழ்கள் என அணுவணுவாக ரசித்தவனுக்கு அவளின் நெருக்கம் மிகவும் பிடித்து போய்விட்டது.
அவளை விட்டு விலகும் எண்ணமற்றவனாக "சே. ஏன் ஹனி லாங் டாப் போட்டிருக்க. ஷாரினா டிஸ்டர்பன்ஸ் இல்லாம இருக்கும்" என கொஞ்சியபடியே டாப் விலகியிருந்த வெற்றிடையை வருட
"ச்சீ. பொறுக்கி. கைய எடுடா" என்று சிணுங்கினாலும் அவனை விட்டு விலகும் எண்ணமற்றவளாக அவனது அணைப்பில் கட்டுண்டு கிடந்தாள் மித்ரவிந்தா. அவளின் மனமெங்கும் அவன் மீது கொண்ட காதல் கிளை பரப்பி மலர்ந்து மனம் வீச ஆரம்பித்திருந்தது.
பின்னர் அவனை விலக்கியவள் "உன் மம்மிக்கு ஷாரி வாங்க போலாமா?" என ஆர்வமாக கேட்க
"டபுள் ஓகே ஹனி" என்று முகுந்தும் உற்சாகமாக எழுந்து கொண்டான்.
இருவரும் சேர்ந்தே முகுந்தின் அன்னைக்கு பட்டுப்புடவை வாங்கினர். முகுந்த் மறக்காமல் மித்ரவிந்தாவுக்கும் வாங்கி தர "எனக்கு எதுக்கு முகுந்த்?" என சங்கடத்துடன் மறுத்தாள்.
"நான் வாங்கி குடுத்தா வேண்டானு சொல்லுவியா ஹனி?"
"இல்லடா. எனக்கு ஷாரி கட்ட தெரியாது. அதனால தான் வேண்டானு சொன்னேன்"
"அப்ப நிஹாரிகா கல்யாணத்துல..."
"அன்னிக்கு சம்யூ கட்டி விட்டா முன்னா"
"ஓகே. நோ ப்ராப்லம். இதை வாங்கிக்க ஹனி. உனக்கு நான் கட்டி விட்றேன்" என்றான் குறும்புத்தனம் மின்ன.
மித்ரவிந்தா அவனது மார்பில் செல்லமாக அடிக்க அவனோ அவளது கரத்தைப் பற்றி முத்தமிட்டான் மென்மையாக.
முடிவில் மித்ரவிந்தாவுக்கும் சேர்த்தே சேலையை வாங்கிக் கொண்டு திரும்பினர்.
ஆனால் அன்று இரவே முகுந்த் மீண்டும் மும்பை செல்வதற்கு தயாரானான். மித்ரவிந்தாவுக்கு காரணத்தை வாட்சப்பில் சொன்னவன் அவளிடம் தேர்வை நன்றாக எழுதும்படி அறிவுறுத்திவிட்டுக் கிளம்பினான்.
அவனுக்கு ஆஸ்திரேலியாவில் நடக்கும் டெஸ்ட் போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்க வேண்டிய கட்டாயம். அது முடிந்து ஆஸ்திரேலியா கிளம்பினால் முழுதாக ஒரு மாதம் கழித்து தான் இந்தியா திரும்ப முடியும். இதற்கு இடையே தான் மித்ரவிந்தாவின் அருகாமையில் கழித்த இனிய தருணங்களை அசை போட்டபடி இருப்பேன் என அவன் சொல்லியிருந்தான்.
ஒரு மாதம் கழித்து அவன் திரும்பி வருகையில் அவளுக்கும் தேர்வு முடிந்திருக்கும். அப்போது இன்னும் அதிகநேரம் செலவளிக்கலாம் என்ற செய்தியுடன் முத்தமிடும் ஸ்மைலியையும் அனுப்பிவைத்தவன் விமானத்துக்கான அழைப்பு வர அணியின் சகவீரர்களுடன் சேர்ந்து விமானப்பயணத்துக்குத் தயாரானான்.
மித்ரவிந்தா தலைவனை பிரிந்த தலைவியின் நிலைக்குத் தள்ளப்பட்டாள். சாப்பிட பிடிக்கவில்லை. தூக்கமோ வரவில்லை. படிக்க புத்தகத்தை எடுத்தால் எண்கள் எல்லாம் அவனாகவே தெரிந்தன. அவனிடம் பேசலாம் என்றால் பயிற்சியாட்டத்தின் போது அவனைத் தொந்தரவு செய்வது தவறு என மனசாட்சி இடித்துரைக்க அமைதியுற்று விடுவாள்.எங்கு நோக்கினும் முகுந்தின் பிம்பமே.
சம்யுக்தா மித்ரவிந்தாவின் இந்தச் சோகத்துக்கு காரணம் புரியாது விழித்தாள். என்னென்னவோ சொல்லி அவளைச் சாப்பிட வைத்தாள். படிப்பு தான் முக்கியமென சொல்லி புரியவைத்தாள்.
ஒரு வழியாக மித்ரவிந்தா அந்தச் சோகத்திலிருந்து வெளிவந்து படிப்பில் கவனம் செலுத்தினாலும் அவனைப் பிரிந்திருக்கையில் துணையைப் பிரிந்த அன்றிலைப் போல வாடிப்போனாள்.
பிரிவாற்றாமை பொறுக்காதவளாய் அவள் வணங்கும் முகுந்தனிடமே முறையிட்டாள் மித்ரவிந்தா.
"ஏன் கிருஷ்ணா என் முகுந்தை என்னை விட்டு பிரிச்சிங்க? அவன் இல்லாம ஒவ்வொரு நொடியும் நரகம் மாதிரி இருக்கு கிருஷ்ணா" என கண்ணீர் உகுப்பவளை பார்த்து கோகுலத்து கண்ணன் நகைத்துக் கொண்டார்.
"அவனது தற்காலிகப்பிரிவுக்கே நீ கண்ணீர் வடிக்கிறாய். ஆனால் இன்னும் சில காலங்களில் நீயே அவனை விட்டு பிரியப்போகிறாய். அவனை வெறுக்க போகிறாய். அந்த வேதனையை நீ எப்படி தாங்குவாய் பக்தையே?" என்ற அவரின் கேள்வி அவளது செவிகளில் விழாதது மித்ரவிந்தாவின் துரதிர்ஷ்டம் தான்.
தொடரும்
வணக்கம் வாசக தோழமைகளே
எனக்கு காலேஜ் திறந்திட்டாங்க. இனிமே அப்டேட் வரதுக்கு கொஞ்சம் காலம் எடுக்கும். இந்த அப்டேட் காலேஜ்ல இருந்து போடுறது தான். கெடைச்ச கேப்ல போட முயற்சிக்கிறேன்.
Comments
Post a Comment