அத்தியாயம் 10

 


ஆழினியோடு வீட்டுக்குள் வந்த புகழ்வேந்தன் அங்கு கேட்ட பேச்சு சத்தத்தில் யாரோ வீட்டுக்கு வந்திருக்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டான்.


வரவேற்பறைக்குள்  நுழைந்தபோது “வாடாப்பா பெரியவனே. சொந்தபந்தங்களை அழைக்காம கல்யாணம் செஞ்சாச்சு. அதுக்கப்புறம் கூட எங்களுக்கு தகவல் சொல்லியனுப்பனும்னு தோணலையா?” என்று கோபக்குரல் ஒலித்தது.


புகழ்வேந்தன் அங்கிருந்தவரைப் பார்த்ததும் புன்னகைத்தவாறு அவரை அணைத்துக்கொண்டான்.


“நலமா இருக்கீங்களா சித்தப்பா?” என குசலம் விசாரித்தவனை அணைத்துக்கொண்டார் கோபக்குரலுக்கு சொந்தகாரரான எழில்வேந்தன்.


பாரிவேந்தனின் முகச்சாயலில் கம்பீரமான நரையோடு இருந்தார் அவர்.


அவர் யார் என தெரியாமல் அமைதியாக நின்ற ஆழினியிடம் ஓடோடி வந்த குமுதினி “இவங்க என் அண்ணி ஆழினி. அண்ணி, இவங்க எங்க சித்தி ராஜேஸ்வரி” என்றதும் பர்வதத்தில் வயதில் ஒரு பெண் வந்து ஆழினியின் கையைப் பிடித்தார். அவள் வைத்திருந்த பெட்டியைப் பார்த்தவர் அதை வாங்கி கீழே வைத்தார்.


“நான் உனக்கு சின்ன மாமியார்” என்றார் ராஜேஸ்வரி. மகாலெட்சுமி போன்ற தோற்றம். கம்பீரம் துலங்கும் வதனம். ஒரு ராணிக்குரிய ஆளுமை உடல்மொழியில் தெரிந்தது.


“அப்படியே சின்ன மாமனாரையும் அறிமுகம் செய்து வை ராஜி” என்றபடி ஆழினியிடம் அறிமுகமாகிக்கொண்டார் எழில்வேந்தன்.


இருவருக்கும் மரியாதையாக வணக்கம் சொன்னாள் ஆழினி.


“நம் புகழுக்கு ஏற்ற பொண்ணு தான்” என்று ராஜேஸ்வரி பாராட்டியதும் பர்வதத்தின் முகத்தில் பெருமிதம் பொங்கியது.


“என் மருமக சொக்கத்தங்கம் ராஜி. பணக்காரப்பொண்ணுன்ற எண்ணம் அவளுக்கு கெடையாது. ரொம்ப அன்பானவ”


பர்வதம் ஆழினியைப் புகழ்வதை கேட்டு ஏளனமாக உதட்டை வளைத்தான் புகழ்வேந்தன்.


“நீ சிரிக்காதே புகழ், உன் மேல எனக்கும் ராஜிக்கும் செம கோவம். எங்களை அழைக்காமலே கல்யாணம் செஞ்சிட்டல்ல?”


குறைபட்டார் எழில்வேந்தன்.


“நம் பக்கத்து முறை எதுவும் செய்யலைங்க மருமகளுக்கு” என ஏக்கமாகச் சொன்னார் ராஜேஸ்வரி.


புகழ்வேந்தன் ராஜேஸ்வரி தம்பதிக்கு முகில்வேந்தன் இதழினி என இரண்டு வாரிசுகள்.


புகழ்வேந்தனின் சித்தப்பாவான அவர் இப்போது வசிப்பது ராமநாதபுரத்தில். அங்கே அவர்கள் குடும்பத்துக்குச் சொந்தமாக சேதுபதி அவர்கள் கொடுத்த அரண்மனை போன்ற வீட்டில் புகழ்வேந்தன் தனது சகோதரி மற்றும் அவரது குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகிறார்.


“கல்யாணம் அவசரமா நடந்துடுச்சு சித்தப்பா. யாருக்கும் அழைப்பு வைக்க முடியல. மன்னிச்சிடுங்க. நீங்க என்ன முறை செஞ்சு பார்க்கணும்னு ஆசைப்படுறிங்களோ அதெல்லாம் ஆழினிக்குச் செஞ்சு பாருங்க. உங்களை யாரும் தடுக்கப்போறதில்லை சித்தி” என்று முன்ஜாமீன் வாங்கிக்கொண்டான் புகழ்வேந்தன்.


ராஜேஸ்வரியோ “மருமகளுக்கு மட்டுமில்லடா. உனக்கும் விருந்து வைக்கனும். புது துணி வாங்கிக் கொடுக்கனும். நிறைய சம்பிரதாயம் இருக்கு புகழ். அதெல்லாம் நம்ம அரண்மனைல வச்சிக்கலாம். நாங்க இங்க வந்ததே உங்களை அழைக்கிறதுக்காக தான்” என்றார்.


புகழ்வேந்தனுக்கு கொஞ்சம் வேலை இருந்தது. அவனது நிறுவனத்தின் முக்கிய வேலை பங்கு சந்தையில் பங்குகளை வாங்கி விற்பது தான்.


இது பங்குசந்தை இறங்குமுகமாக இருக்கும் நேரம். முக்கியமான நிறுவனங்களில் பங்குகளை வாங்குவதற்கு சரியான சமயம். அது குறித்து அடிக்கடி அலுவலகத்தில் மீட்டிங் நடக்கும். அவன் இல்லாவிட்டால் கஷ்டம்.


அதே சமயம் சித்தி சித்தப்பாவின் ஆசையை மறுக்கவும் முடியாது.


“நீங்க ரெண்டு நாள் இங்க தங்குங்க. மூனாவது நாள் அம்மா, குமுதா, ஆழினியை அழைச்சிட்டுப் போங்க. நான் வேலையை முடிச்சிட்டு வந்துடுறேன்.” என்றான் புகழ்வேந்தன்.


அரண்மனை என்ற வார்த்தையில் மனைவியின் வதனத்தில் குன்றல் பரவுவதைக் கவனித்தவன்


“உன் சித்தி கொடுத்த நகை எல்லாம் சரியா இருக்கா எண்டு செக் செஞ்சுக்க ஹனி. நாளைக்கு அம்மா கூட பேங்குக்கு போய் அதை லாக்கர்ல வச்சிடலாம்” என்றான்.


என்ன நகையென அங்கிருந்தவர்கள் திகைக்கும்போதே பெட்டியைத் திறந்து நகைகளை மாமியாரிடம் காட்டினாள் ஆழினி.


ராஜேஸ்வரி அதிலிருந்த மாங்காய் மாலையை எடுத்து ஆழினியின் மீது வைத்துப் பார்த்தார்.


“இதுல இருக்கிறது ஒரிஜினல் பச்சைக்கல் மருமகளே. அது மரகதம்” என நவரத்தினங்களை அடிக்கடி புழங்குவதால் உண்டான ஞானத்தை வைத்து கூறினார்.


“புகழ் சொல்லுற போல பேங்க்ல வச்சிடலாம் ஆழிம்மா. எல்லாம் விலையுயர்ந்த நகைங்க” என்றார் பர்வதம்.


அதில் கழுத்தை ஒட்டி வரும் காசு மாலை ஒன்றை குமுதினி ஆசையாய் எடுத்துப் பார்க்கவும் அதை அவளிடம் கொடுத்தாள் ஆழினி.


“அண்ணி…” என அவள் தடுமாறவும் “உனக்கு இது அழகா இருக்கும் குமுதா. இது என் நாத்தனாருக்கு என்னுடைய பரிசு” என்றாள்.


குமுதினி அன்னையைப் பார்க்க அவர் வாங்கிக்கொள் என்று அனுமதி கொடுத்தார்.


அதை ஆவலுடன் வாங்கிக்கொண்டவள் ஆழினியை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள்.


“தேங்க்ஸ் அண்ணி”


தங்கையிடம் மனைவி நடந்துகொண்ட விதத்தை ஆச்சரியத்தை வெளியே காட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான் புகழ்வேந்தன். பணத்திமிரால் தன்னை அவமரியாதை செய்த ஆழினியா இவள்?


“அண்ணிய கொஞ்சுனது போதும். நம் அரண்மனைக்கு வர்றச்ச இந்த காசுமாலையை எடுத்து வச்சுக்க. நம் குலதெய்வ கோவிலுக்குப் போறச்ச போட்டுக்கலாம்” என்ற ராஜேஸ்வரி மருமகளுக்கும் மகனுக்கும் தாங்கள் கொண்டு வந்த பரிசை நீட்டினார்.


வெள்ளி தாம்பாளத்தில் காஞ்சிப்பட்டு, வெள்ளி குங்கும சிமிழ், மாணிகம் பதித்த இரண்டு ஜோடி கெட்டியான தங்க வளையல்கள், அதே வடிவமைப்பில் கழுத்தை ஒட்டி அணியும் அட்டிகை ஒன்று.


அவரும் எழில்வேந்தனும் கொடுக்க ஆழினியும் புகழ்வேந்தனும் வாங்கிக்கொண்டார்கள். ஆழினி அவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டாள்.


“தீர்க்க சுமங்கலியா வாழணும். நம் குலத்தை தழைக்க செய்யனும்” என மனமார ஆசிர்வதித்தனர் ராஜேஸ்வரியும் எழில்வேந்தனும்.


குலம் தழைப்பது என் கையில் இல்லயே என மனம் வருந்தினாலும் அதை காட்டிக்கொள்ளாது இன்முகத்துடன் வாங்கிக்கொண்டவள் நகைப்பெட்டியை மாமியாரிடம் கொடுத்தாள்.


“பேங்குக்கு போறச்ச வாங்கிக்கறேன் அத்தை. இதுவும் உங்க கிட்ட இருக்கட்டும்” என ராஜேஸ்வரி பரிசாக கொடுத்தவற்றில் குங்குமச்சிமிழை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றவற்றை நீட்டினாள்.


மருமகள் தனக்கு அளித்த மரியாதையில் பூரித்துப்போனவராக அதை வாங்கிக்கொண்டார்.


“நீ டயர்டா இருப்ப. ரெஸ்ட் எடுத்துக்கம்மா. ராஜி நீ என் கூட வா. கொஞ்சம் பேசனும். நீங்களும் வாங்க தம்பி” என்று பர்வதம் தன்னோடு ராஜேஸ்வரியையும் எழில்வேந்தனையும் அழைத்துச் சென்றுவிட்டார்.


ஆழினியைத் தன்னோடு வருமாறு பார்வையால் அழைத்துவிட்டு தனது மினி பங்களாவுக்குள் சென்றான் புகழ்வேந்தன்.


காரில் வரும் போது நடந்த உரையாடலில் கசப்பு இன்னும் அவர்களுக்குள் மிச்சமிருக்கிறது அல்லவா!


படுக்கையறைக்குள் நுழைந்தவள் குங்குமச்சிமிழை ட்ரசிங் டேபிள் மீது வைத்துவிட்டு திரும்பியபோது புகழ்வேந்தன் மீது மோதி நின்றாள்.


தடுமாறியவளை தன்னுடன் சேர்த்து அணைத்தவனின் முகத்தில் கோபத்தின் தீற்றல்.


“கார்ல வர்றச்ச என்ன சொன்ன? செத்துடுவியா?” என கேட்டவனின் குரலில் கூட கோபவாடை வீசியது.


ஆழினி பதில் சொல்லாமல் அமைதி காத்தாள். அவளது மோவாயை இறுக்கமாக பிடித்து நிமிர்த்தினான்.


“கேள்விக்கு பதில் வரலைனா எனக்கு பிடிக்காது ஹனி”


“உங்க கூட வாழுற வாழ்க்கை முழு நரகமா தோனுறச்ச செத்துடுவேனு சொன்னதா நியாபகம்”


“இப்போ நீ நரகமா நினைக்கல?”


இந்த கேள்விக்கு அவளிடம் பதில் இல்லை.


புகழ்வேந்தன் மனைவியை ஆழ்ந்து நோக்கினான்.


“நான் உன்னை சாகவிடமாட்டேன் ஆழினி. நீ செத்துட்டா நான் தோத்துடுவேன்”


இல்லை என்பது போல தலையாட்டினாள் ஆழினி,.


“உங்க மனசுல என் மேல மறுபடி காதல் வந்தா நீங்க தோத்துடுவிங்க வேந்தன். அது வராதுன்ற நம்பிக்கையில தானே என்னை காயப்படுத்துறிங்க”


“ஹாஹாஹா! நல்லா பேசுற ஆழினி தேவி. பேசுறதுக்கு உனக்கு சொல்லியா தரனும்?”


வஞ்சப்புகழ்ச்சியாக கேட்டவன் “எனக்கு நீ செஞ்ச அநியாயத்தை மறந்தா தான் நான் மறுபடி உன்னை காதலிப்பேன்டி. அப்படி ஒரு மறதி இந்த ஜென்மத்தில எனக்கு வராது. உன்னால என் குடும்பம் அனுபவிச்ச ஒவ்வொன்னுக்கும் உனக்கு திருப்பி கொடுப்பேன், என் பாணியில. அதை தான் நீ அனுபவிச்சிட்டிருக்க” என்று வெறுப்போடு சொல்லிவிட்டு இடத்தைக் காலி செய்தான்.


அவன் சென்றதும் படுக்கையில் அமர்ந்த ஆழினி ட்ரசிங் டேபில் மீதிருந்த குங்குமச்சிமிழை வெறித்தாள்.


அவளுக்காக சித்தி சித்தப்பாவிடம் சண்டையிடுகிறான். இமயனிடம் இருந்து அவளை காப்பாற்றியிருக்கிறான். இப்படிப்பட்டவன் காதலே இல்லை என்று சொல்லி கட்டிலில் கடமைக்காகவா கட்டியணைக்கிறான்?


அவன் சென்றதும் யோசனையிலும், ராஜேஸ்வரி எழில்வேந்தனுடன் உரையாடியதிலும் நேரம் சென்றது ஆழினிக்கு.


கிடைத்த தனிமையில் மருமகளிடம் பர்வதம் மகனைப் பற்றி விசாரித்தார்.


“வேந்தன் உன் கிட்ட நல்லபடியா நடந்துக்கிறானா ஆழிம்மா?”


ஏன் இந்த திடீர் கேள்வி என ஆழினிக்குப் புரியாவிட்டாலும் ஆமென தலையாட்டினாள். ஏன் இந்த தாயின் மனதை பரிதவிக்க வைக்க வேண்டுமென்ற எண்ணம்.


பர்வதம் நடுங்கிய கைகளால் மருமகளின் முகத்தை வருடிக்கொடுத்தவர்


“அவனுக்கு உன் மேல இருக்கிற கோவத்தை மறந்துட்டான்னு நம்புறேன் ஆழிம்மா. எல்லாத்தையும் மறந்து அவன் ஆசைப்பட்டவளோட நல்லபடியா வாழனும்னு ஒவ்வொரு நாளும் நான் ஆண்டவன்ட்ட வேண்டிக்கிறேன்” என்றார்.


ஆழினி மௌனம் சாதிக்கவும் அவளை உச்சி முகர்ந்தவர் “காலேஜ் படிச்சப்ப காதல் வேண்டாம்னு நினைச்சு உன் கிட்ட கேட்டுக்கிட்டதுக்காக அவன் காதலை நீ நிராகரிச்ச. நான் தான் உன்னை அப்படி செய்யச்சொன்னேன்னு இப்போ வரை நீ வேந்தன் கிட்ட சொல்லலை. நான் அவனிடம் சொல்லட்டுமா ஆழிம்மா?” என்றார்.


“பழசை ஏன் பேசுறிங்க அத்தை? எனக்கும் அப்போ வேந்தன் மேல காதல் இல்லை. சாதாரணமா நிராகரிச்சா அவர் ஒத்துக்கமாட்டார்ன்று தோணியதால நான் திமிரா பேசி அவரை நிராகரிச்சேன். அதெல்லாம் பழையக்கதை. இப்போ அவர் என்னோட கணவர். நீங்க கவலைப்படாதிங்க. என்னை அவர் நல்லபடியா பார்த்துக்கிறார். நீங்க எதையும் சொல்லவேண்டாம்” என்றாள் ஆழினி.


நல்லவிதமாக வாழ்க்கை போயிருந்தால் புகழ்வேந்தனிடம் தன் தரப்பு நியாயத்தைச் சொல்வதில் அர்த்தமுள்ளது. அவனே பழிவாங்கும் வெறியில் இருக்கிறான். இதை சொன்னால் மட்டும் நம்பவா போகிறான். மருமகள் மீதிருக்கும் பாசத்தால் அன்னை பொய் சொல்கிறார் என்று கூட நினைப்பான். இவ்வளவு ஏன், ஆழினி தான் பர்வதத்தை பொய் சொல்ல சொன்னாள் என்று கூட நினைப்பான். ஏன் இதெல்லாம்? வாழ்க்கை போகிற போக்கில்  போகட்டும் என்ற ஜென் நிலையில் இருந்தாள் ஆழினி.


“இருந்தாலும் மனசுல ஒரு உறுத்தல். பணத்திமிரால நீ அவனை நிராகரிச்சதா நினைச்சு கோவப்பட்டான் புகழ். ஹூம்! அதுக்கு அப்புறம் நிறைய நடந்துடுச்சு. கடவுள் உனக்கும் அவனுக்கும் அப்போ போட்ட முடுச்சு இத்தனை வருசம் கழிச்சு நீங்க கணவன் மனைவியா ஆகிட்டிங்க. ஒரு பேரனோ பேத்தியோ பொறந்துச்சுனா என் மனசு இப்படி பரிதவிக்கிறதை நிறுத்திடும்”


ஆழினிக்குப் பேரன் பேத்தி என்றதும் கண்கள் கலங்கியது. என் கணவன் என்னை அதற்கு அனுமதிக்கமாட்டானே என்ற கலக்கம். இருப்பினும் புன்னகைத்து சமாளித்தாள்.


அன்று ராஜேஸ்வரி எழில்வேந்தனுக்காக இரவுணவு விருந்து போல தயாராகியிருந்தது. புகழ்வேந்தனும் சீக்கிரமே வந்துவிட்டான்.


குடும்பமே ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள். கதை பேசினார்கள். பின்னர் உறக்கம் வரவும் கலைந்தார்கள்.


படுக்கையறைக்குள் நுழைந்த ஆழினியை வேந்தனின் கரங்கள் வளைத்துக்கொண்டன.


“ஐ நீட் யூ ஆழி”


அவளால் மறுப்பு கூறவா முடியும்?


வேந்தன் எனும் புயல் அவளைப் புரட்டியெடுத்து சோர்வடைய செய்து ஓய்ந்த பிறகு முதுகு காட்டி படுத்துக்கொண்டாள் ஆழினி.


அவளை முதுகோடு சேர்த்தணைத்தவன் காது மடல்களில் உதிர்த்த வார்த்தையால் திடுக்கிட்டுத் திரும்பினாள் ஆழினி.


“வெறும் படுக்கைக்கு மட்டும் உன்னை உபயோகிக்கிறப்பவும் உனக்கு வாழ்க்கை நரகமா தோணலையா ஹனி? உனக்கே இந்த ஏற்பாடு பிடிச்சிருக்குனு தோணுதே”


சட்டென திரும்பியவள் அவனது வெற்று மார்பில் முகம் முட்ட விலக முயன்றாள்.


அவன் அதற்கு அனுமதிக்க வேண்டுமே. இறுக்கமாக தன்னுடன் சேர்த்து ஒட்ட வைத்துக்கொண்டான் புகழ்வேந்தன்.


“பதில் சொல்லணும்” என அதட்டினான்.


“வாழ்க்கை அமைதியா கழியனும்னு எத்தனையோ பிடிக்காத விசயங்களை சகிச்சிக்கிறோம். அப்பிடி கூட வச்சிக்கலாம் வேந்தன்”


புகழ்வேந்தனுக்கு அவளது பதிலில் வந்த கோபத்திற்கு அளவேயில்லை.


“அப்போ நீ என்னை சகிச்சிக்க ஆரம்பிச்சிட்ட?”


“ஆமா வேந்தன்”


கண்ணுக்கு கண் பார்த்து சொன்னாள்.


புகழ்வேந்தன் அவளுக்குச் சளைக்காத நிமிர்வோடு ஆழினியைப் பார்த்தான்.


“வெரி நைஸ் ஹனி. குழந்தைய சுமக்காம ஒரு ஆணோட உடல்தேவைய மட்டும் நிறைவேத்துறவங்களை ஆசைநாயகினு சொல்லுவாங்க. நீயும் எனக்கு ஆசைநாயகி மட்டும் தான்”


ஆழினியின் கண்கள் புகழ்வேந்தனின் கொடுஞ்சொல்லால் கலங்கிவிட அவள் மனமோ காயப்பட்டுப்போனது.


தாலி கட்டிய கணவன் தனக்கு மனைவி ஸ்தானத்தைக் கொடுக்காமல் ஆசைநாயகி பட்டம் கொடுப்பதை எந்த பெண்ணால் ஏற்றுக்கொள்ள முடியும்.


மனவேதனையுடன் முகம் கறுக்க கண்ணீர் சிந்தியவளை அவன் சமாதானப்படுத்தாமல் வேடிக்கை பார்த்தான்.


ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் போர்வையை அவள் மீது வீசிவிட்டு எழுந்தவன் எரிச்சலோடு அங்கிருந்து சென்றுவிட்டான்.


கண்ணீர் உகுத்த ஆழினி உடை மாற்றி குளியலறைக்கு சென்று திரும்பியபோது சிகர் வாடை நாசியில் ஏறியது.


அவனே வருவானென படுத்தவள் உறங்கிப்போனாள்.


மறுநாள் கண் விழித்தபோது அருகே உறங்கிக்கொண்டிருந்த புகழ்வேந்தனை நிதானமாகப் பார்த்தாள்.


மேல்சட்டை அணியாமல் ஏ.சி குளிரில் உறங்கிக்கொண்டிருந்திருக்கிறான் போல. சீரான மூச்சில் ஆகிருதியான தோள்கள் ஏறியிறங்கின.


சிக்ஸ்பேக் தேகத்தின் தசைக்கோளங்களும் உறக்கத்தில் ஏறியிறங்கியதை பார்த்தவளுக்கு கல்லூரிக்கால புகழ்வேந்தன் நியாபகம் வந்தான்.


இதே உயரம், கம்பீரம் அப்போதும் உண்டு. ஆனால் இப்போது இருக்கும் கட்டுமஸ்தான உடலமைப்பு அப்போது கிடையாது. சாக்லேட் பாய் போல அவ்வளவு அழகு என ஆழினியின் தோழியே ஒரு முறை கூறியிருக்கிறாள்.


இப்போது இருப்பவனுக்கும் அவனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இவன் கடுமையே உருவானவன். பார்க்கும் போதே பயத்தை மட்டுமே தன் மனதில் விதைப்பவன். மஞ்சள் கயிறு மேஜிக்கால் அவனது தொடுகையில் உடல் உருகி குலைந்தாலும் மனதில் அவன் மீது காதல் வரவில்லை.


ஆழினி மனம் போன போக்கில் சிந்திக்கும்போதே புகழ்வேந்தன் விழித்துக்கொண்டான்.


அவன் கண் விழித்ததும் படக்கென எழப்போனவளை இழுத்தணைத்துக்கொண்டான்,


“விடுங்க”


ஆசைநாயகி என்று சொன்ன கோவத்தில் திமிறினாள் ஆழினி.


“முடியாது. இவ்வளவு நேரம் என்னை ரசிச்சல்ல. இப்போ என்னை ரசிக்க விடு” என்றவன் திமிறியவனின் இதழை தனது இதழால் அடக்கி காலையிலேயே தேனரு

ந்த ஆரம்பித்தான்.


இப்படியே இரு தினங்கள் ஊடலும் கூடலுமாக கழிய, எழில்வேந்தன் தனது தமையனின் குடும்பத்தாரை ராமநாதபுரத்துக்கு அழைத்துச் சென்றார். புகழ்வேந்தன் அவர்களை அனுப்பிவிட்டு மறுநாள் வருவதாகச் சொல்லிவிட்டான்.


Comments

Post a Comment

Popular posts from this blog

அத்தியாயம் 7

அத்தியாயம் 4

அத்தியாயம் 8