அத்தியாயம் 5

 

பர்வதத்தையும் குமுதினியையும் பங்களாவில் இறக்கிவிட்ட கையோடு செங்குட்டுவனை அழைத்துக்கொண்டு அவனது அலுவலகத்துக்குக் கிளம்பினான் புகழ்வேந்தன்.


அன்று என்ன ப்ரோகிராம் மிச்சமிருக்கிறது என செங்குட்டுவனிடம் வினவினான்.


“சோழால முக்கியமான மீட்டிங் இருக்கு பாஸ்” என்று நினைவூட்டிய செங்குட்டுவனிடம் ஆழினியைக் கண்காணிக்க சில ஆட்களை நியமிக்கும்படி கூறினான் புகழ்வேந்தன்.


“பாஸ்”


ஏன் என்று நேரடியாக கேட்காதவனிடம் “எனக்கு ஆழினியை பற்றி தெரியும். நான் எதை செய்யாதேனு சொல்றேனோ அதை அவ செய்வா. இமயவரம்பனை அவ சந்திக்க முயற்சி செஞ்சாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்லை. அவ திருமதி புகழ்வேந்தன் ஆகிற வரைக்கும் என் கட்டுப்பாட்டுல இருக்கவேண்டியது அவசியம் செங்குட்டுவன்”


“டன் பாஸ்” உடனடியாக ஆட்களை ஏற்பாடு செய்யும் நிறுவனத்திற்கு அழைத்து ஆழினியின் வீட்டைச் சுற்றி கண்காணிப்புக்கு ஆட்களைப் போடுமாறு கட்டளையிட்டான் செங்குட்டுவன்.


கூடவே ஆழினியும் அவளது பெற்றோரும் எங்கே போகிறார்கள், அவர்களின் பங்களாவுக்கு யார் வருகிறார்கள் என்பதை எல்லாம் கண்காணிக்கும்படி ஆணையிட்டான் அவன்.


சொன்ன வேலைய சடுதியில் முடித்தவனை மெச்சும் பார்வை பார்த்தான் புகழ்வேந்தன். அந்த பார்வைக்காக எதையும் செய்ய தயாராக இருப்பான் செங்குட்டுவன்.


இருவரும் புகழ்வேந்தனின் முதலீட்டு நிறுவனத்திற்கு வந்து சேர்ந்தனர். தென்னிந்தியாவின் மாபெரும் முதலீட்டு நிறுவனம் அது. சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்குகிறது. ஒட்டுமொத்த தென்னிந்திய பண பரிவர்த்தனைக்கான அலுவல்களையும் கவனிக்கும் அந்த ஏழு மாடி கட்டிடத்தின் தோற்றமே நிறுவனம் எந்தளவுக்கு லாபகரமாக இயங்கி வருகிறது என்பதை பறைசாற்றும்.


அவர்கள் முதலீடு செய்த தொழில்கள் அனைத்தும் லாபத்தைக் கொட்டிக் கொடுத்தன என்று தனியாய் சொல்ல தேவையில்லை.


அவனது நிறுவனத்தில் பணியாற்ற வேண்டுமென்பது நிறைய இளைஞர்களுக்குக் கனவும் கூட. நிறுவனத்திற்குள் புகழ்வேந்தன் நுழைந்ததும் மரியாதையான குட் அப்டர் நூன்களை உதிர்த்தார்கள் அலுவலக பணியாட்கள்.


அவர்களிடம் தலையசைத்துவிட்டு தனது எம்.டி கேபினுக்குள் நுழைந்தான் புகழ்வேந்தன். அங்கே சுழல் நாற்காலிக்குப் பதிலாக அரசனின் அரியாசனம் போன்ற அமைப்பில் நாற்காலி ஒன்று இருந்தது. அதில் சிம்மத்தின் கம்பீரத்தோடு அமர்ந்தவன் அன்றைய அலுவல்கள் என்னவோ அதை கவனிக்க ஆரம்பித்தான்.


அப்படி வேலையில் மூழ்கியிருந்தவனை உசுப்பேற்றியது செங்குட்டுவன் பதட்டத்தோடு கூறிய தகவலொன்று.


“ஆழினி மேடம் கார் பங்களால இருந்து வெளிய போனதா நியூஸ் வந்திருக்கு சார். அவங்க காரை ஃபாலோ செஞ்ச ஆட்கள் அவங்க ஹோட்டல் சோழாக்குப் போனதா சொல்றாங்க. ஹோட்டல் சோழால விசாரிச்சப்ப அங்க இமயவரம்பன் ஒரு வடமாநில தொழிலதிபரை சந்திக்க வந்திருக்கிறதா தகவல் கெடச்சிருக்கு”


செங்குட்டுவன் சொன்ன சேதியில் புகழ்வேந்தனின் வதனம் கறுத்துப் போனது. ஆழினி கட்டாயம் இமயவரம்பனை சந்திக்கவே சென்றிருப்பாள் என ஊர்ஜிதப்படுத்திக்கொண்டவன் “ஹோட்டல் சோழாக்கு போலாம் செங்குட்டுவா” என்றபடி கிளம்பினான்.


கோபத்தில் வேகநடை நடந்தவனின் சிகை அசைந்தவிதம் ஆண் சிங்கத்தை நினைவுபடுத்தியது செங்குட்டுவனுக்கு.


டிரைவரை வேண்டாமென சொல்லிவிட்டு செங்குட்டுவனே காரை ஓட்டினான்.


“இமயவரம்பனோட ரூம் நம்பர் என்னனு விசாரிச்சியா செங்குட்டுவா?”


“வி.ஐ.பி சூட் நம்பர் 25 பாஸ்”


“ஆழினி அங்க போறப்ப அவன் அந்த ரூமுல இருக்க கூடாது”


புகழ்வேந்தன் கட்டளையிடவும் செங்குட்டுவன் ப்ளுடுத் செவிபேசி வழியாக ஆட்களுக்கு ஆணையிட்டான்.


“ஆழினிய சந்திக்க நினைச்சதுக்கு அவனுக்கு பனிஸ்மெண்ட் கிடைக்கனும். நம்ம பழைய கார்களை பூட்டி வைப்போமே கராஜ் அங்க அவனை இழுத்துட்டு வந்து கட்டிப் போட சொல்லு. ஆழினிக்குப் பாடம் கற்றுக் கொடுத்த பிறகு அவனுக்குத் தண்டனை கொடுக்கலாம்”


புகழ்வேந்தனுக்கு தனது எச்சரிக்கையை அவமதித்த ஆழினியின் மீதான குரோதம் கடல் அளவு அதிகரித்திருந்தது.


இருவரும் ஹோட்டல் சோழாவை அடைந்ததும் ஆழினி அங்கே வந்து சேர்ந்தாள்.


இமயவரம்பன் தங்கியிருந்த அறையை அடைந்தவன் அங்கே ஆழினி அவனைத் தேடி கொண்டிருப்பதை கண்டதும் கோணலாகச் சிரித்தான்.


“வெல்கம் ஹனி. வாட் எ ஸ்வீட் சர்ப்ரைஸ்”


வருவித்துக்கொண்ட இனிமையான குரலில் அவன் பேசவும் ஆழினி அதிர்ச்சியோடு திரும்பினாள்.


குளிர் கண்ணாடியைக் கழற்றியவாறு கருப்பு கோர்ட் ஷூட்டில் விரல்களை பேண்ட் பாக்கெட்டில் நுழைத்து கால்களை சற்று அகட்டியவண்ணம் நின்று அவளை குத்தீட்டி பார்வை பார்த்தான் புகழ்வேந்தன்.


வந்த போதிருந்த கோபத்தை முழுமையாக வடியச் செய்துவிட்டது கோலமயிலின் எழில் தோற்றம்.


ஆழினியின் மடல்வாழை தொடையழகைக் காட்டிய கருப்புநிற பாடிகான் உடை அவளது உடலின் வளைவு நெளிவுகளை வரிவடிவமாக காட்டி புகழ்வேந்தனுக்குப் போதையேற்றியது.


தோள்பக்கம் ஸ்பகட்டி ட்ராப் மட்டும் இருக்க நங்கையின் தந்தவண்ண தோள்களின் அழகு நாயகனை தலை சுற்ற வைத்தது.


பெண்ணின் அழகு போதையூட்டினாலும் அவள் இங்கே இக்கோலத்தில் வந்தது இமயனை சந்திப்பதற்காக என்ற உண்மை புகழ்வேந்தனுக்கு அடங்கா சினத்தை வரவைத்தது.


இவளை என் கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிட்டால் அது எங்கே போய் முடியுமென இப்போது தெரிகிறது. இவளுக்கு என் மீது பயம் வரவேண்டும். அதை இப்போதே வரவைக்கிறேன் என தீர்மானம் செய்தவனாக சிம்மக்குரலில் முழங்கினான்.


"நான் அவ்வளவு தூரம் சொல்லியும் உன் காதலனை தேடி வந்திருக்க. உன் இந்த தைரியம் தான் எனக்கு பிடிச்சது. இந்த தைரியத்தை பாராட்டி ஏதாவது பரிசு கொடுக்கலாமானு யோசிக்கிறேன்"


கண்கள் கோபத்தில் இடுங்க சொன்னான் புகழ்வேந்தன். அவனது இடுங்கிய பார்வையில் முதுகுத்தண்டு சில்லிட்டுப்போனது ஆழினிக்கு. போதாக்குறையாக இமயவரம்பன் புக் பண்ணிய ரூம் என்று நினைத்து தனிமையில் வேறு இந்த தடியனிடம் சிக்கிக்கொண்டோமே என்று நடுங்கினாள். அவளுடைய தைரியம் எல்லாம் பொது இடத்தில் அவனை சந்தித்தாலே வற்றி போய்விடும். இப்போதோ தன்னந்தனியாக ஒரேண் ரூமில் வேறு இருக்கிறாள். பெண்ணவளின் கண்களும் உதடுகளும் டென்சனில் துடிக்க அது கண்கொள்ளா காட்சியாக புகழ்வேந்தனுக்கு தெரிந்தது.


அவளை நோக்கி அழுத்தமான காலடிகளுடன் வந்தவன் பயத்தில் சுவற்றோடு ஒட்டி நின்றவளை மூச்சுக்காற்று மோதும் இடைவெளியில் எதிர்கொண்டான்.


“பரிசு கொடுத்துடலாமா ஹனி?”


பயத்தில் விழிகளை மூடிக்கொண்டு இதயம் தடதடக்க நின்றவளின் செவ்விதழ்களை முரட்டுத்தனமாக கொய்தான் புகழ்வேந்தன். இதழில் கள் அருந்திய வண்டாக கிறங்கியவன் ஆவேசமாக மீண்டும் மீண்டும் அவளது உதடுகளை நாடினான். ஆழினிக்கோ அவனது அசுர முத்தத்தில் மூச்சு வாங்கியது. தள்ளிவிட நினைத்தாலோ வலியுடன் கூடிய முத்தத்தில் சுகம் கண்ட மனம் அதில் மூழ்கித் திளைத்தது. புகழ்வேந்தன் மைவிழியாளின் இதழை விடுத்து கன்னங்களில் மையம் கொண்டான். அடுத்தடுத்து நகர்ந்து கழுத்தில் முத்தமிட்டு ஊர்ந்த அவன் உதடுகள் எல்லை தாண்டி பெண்மையின் கலசங்களைத் தீண்டிவிட ஆழினி சுதாரித்துக்கொண்டாள்.


வேகமாக அவனை தள்ளிவிட்டவள் "நான் வீட்டுக்குப் போகனும் வேந்தன்" என்றாள்.


புகழ்வேந்தன் மதுவுண்ட வண்டாக கிறங்கிப்போயிருந்தான். தன்னை அவள் தள்ளிவிட்டதில் சீற்றம் கொண்டவனுக்கு பெண்ணவளின் அருகாமை வேண்டும் என தோன்றியது.


"ஐ நீட் யூ ஆழினி" என்றவாறு அவளை நெருங்கியவனின் கண்கள் அக்னி கோலங்களாக ஜொலித்தன.


“நோஓஓஓஒ”


ஆழினியின் அலறல் அந்த ரூமின் சுவற்றில் பட்டு எதிரொலித்தது.


பயத்தில் வேர்த்து வழிந்தவள் “வேண்டாம் வேந்தன்” என்று சொல்லிக்கொண்டிருக்கையிலேயே அவளை அள்ளி அணைத்தான் வேந்தன்.


ராஜாளியின் இறகுகளாய் அவனது வலிய கரங்கள் ஆழினியின் முழுவுடலையும் மூடிகொள்ள மெல்லினத்தாளின் முட்டல்களும் மோதல்களும் அவனது திண்மார்போடு அடங்கிப்போனது.


அள்ளிய பூவையை புயலாய் மையம் கொண்டு மூழ்கடிக்க ஆவேசம் கொண்டது வேந்தனின் மனம்.


அங்கிருந்த மெத்தையில் அவளை இட்டு சரிந்தவன் மூர்க்கமாக முத்தமிட்டான் முகமெங்கும். ஆழினி அவனைத் தடுக்க எடுத்த முயற்சிகள் விரயமாகிவிட விரக தாபத்தில் கொதித்தவன் அவளது இதழை கொய்ய ஆரம்பித்தான்.


நனிமதுர நங்கையின் இதழ் மதுரத்துக்கு தேவேந்திரனின் அமிர்தமும் ஈடாகாது என்று எண்ணியவனாக மீண்டும் மீண்டும் மலரை நாடும் வண்டாகிப்போனான் வேந்தன்.


அவனது முரட்டுத்தனத்திலும் வேகத்திலும் ஆழினியின் தோளைப் பிடித்திருந்த ஸ்கபடி ஸ்ட்ராப்கள் பிய்ந்து போயின.


மங்கையவளின் மென்மையான பெண்மை எவ்வளவு நேரம் உடையை பிடித்து வைக்கும். அதுவும் மெதுவாக நழுவத் தொடங்கியது. ஆழினிக்கோ பயம். வழி தெரியாது அடர் கானகத்தில் சிக்கிக்கொண்டவள் முட்டாள்தனமாக காட்டாற்று வெள்ளத்தில் விழுந்துவிட்டாளே!


அந்த வெள்ளம் அவளை விட்டுவைக்குமா என்ன? மூர்க்கமாய் அவளை மருட்டி மிரட்டி புரட்டிப் போட்டு தனது பசிக்குத் தீனியாக்கப் பார்க்கிறதே!


புகழ்வேந்தனின் கோபம் அடங்கினால் ஒழிய அவன் அவளை விடுவிக்கப்போவதில்லை. ஒருவேளை அந்த கோபத்திற்கு அவளது பெண்மை இரையாகிப்போனால்?


சுயநினைவின்றி தன்னை இழந்ததற்கும் சுயநினைவோடு வேந்தனிடம் தன்னை இழக்கவிருப்பதற்கும் வேறுபாடு உள்ளதே.


காரிகை மூச்சை இழுத்துப்பிடித்துக்கொண்டு முரடனை விலக்க போராடினாள். அவள் போராடியது அவனோடு மட்டுமன்றி, அவனது முரட்டுத்தனமான ஸ்பரிசத்தை உள்வாங்கி அதை அனுபவித்த தனது உடலோடும் தான்.


ஒருவழியாக போராட்டம் உச்சம் பெற்ற நேரம் அவளது கண்கள் கண்ணீரை கசிய வைக்க புகழ்வேந்தனின் கோபம் தணிந்தது.


அவளை விட்டு புயல்வேகத்தில் விலகினான்.


நழுவிய பாடிகான் உடையை இழுத்துப் பிடித்துக்கொண்டு வெண்தோள்கள் குலுங்க அழ ஆரம்பித்தாள் ஆழினி. அந்த தோள்கள் வேந்தனின் முரட்டுத்தனத்தால் கன்றி சிவந்திருக்க அவனுக்கே தன்னை எண்ணி அவமானமாய் போனது.


“சீ! இவ ஒரு காலத்தில் என்னை எல்லார் முன்னேயும் அவமானப்படுத்தினா. என் குடும்பம் சொல்லவொண்ணா துன்பத்தை அவமானத்தை சந்திக்க காரணமா இருந்தவளை கட்டியணைச்சு புரண்டு இருக்கிறேனே”


கேவலமாய் தன்னை திட்டிக்கொண்டவன் சீற்றத்தோடு தான் கழற்றி வீசிய கோர்ட்டை அவளை நோக்கி எறிந்தான்.


“கெளம்பு”


“எங்கே?” விசும்பலும் கேவலுமாக ஆழினி கேட்டாள்.


“உன் காதலனை பார்க்க வேண்டாமா ஹனி?”


ஏளனமாக கேட்டவன் அவளது அனுமதியின்றி அவளுக்கு கோர்ட்டை அணிவித்தான். ஆழினி கண்ணீரோடு அவன் செய்த எதையும் தடுக்க முடியாமல் அமர்ந்திருந்தாள்.


கோர்ட் அவளை மூடியதும் மெத்தையிலிருந்து இழுத்தவன் அவளை வலுக்கட்டாயமாக தன்னோடு சேர்த்து அணைத்தபடி அங்கிருந்து அழைத்து சென்றான்.


மற்றவர்கள் பார்வைக்கு அது காதலர்களின் மையல் அணைப்பாக தெரியும். அணைப்பிலிருந்த இருவருக்கும் அது நரகத்தீயின் வெம்மை.


ஆழினியைக் காருக்குள் தள்ளியவன் கராஜை நோக்கி கிளம்பினான்.


அவனருகே அமர்ந்திருந்தவளின் கண்ணீர் இன்னும் நின்றபாடில்லை.


கராஜை அடைந்ததும் ஆழினியை உள்ளே இழுத்துச் சென்றவன், ஆட்கள் புடை சூழ கட்டிப்போட பட்டிருந்த இமயவரம்பன் முன்னே அவளை நிறுத்தினான்.


ஆழினி அங்கே ரத்த வெள்ளத்தோடு நாற்காலியில் கட்டிப்போடப்பட்டிருந்த இமயவரம்பனை பார்த்ததும் யாரென புரியாமல் தவித்தாள்.


அவனைச் சுற்றியிருந்த பௌன்சர்கள் கொஞ்சம் விலகி நிற்க புகழ்வேந்தன் அவளை நெருங்கினான்.


“யாருனு தெரியலையா ஹனி? உன் காதலன் இமயன்”


போலி பரிதாபத்தோடு அவன் கூற ஆழினியின் மனம் ‘சீ இவனா என் காதலன்’ என்று அப்போதும் கூவியது.


அடையாளம் தெரியாத அளவுக்கு பௌன்சர்கள் அவனைத் தாக்கியிருந்தார்கள். குருதிப்புனல் கமலைப்போல முகம் சிதைந்து போயிருந்தான் இமயன்.


கை கால்களிலும் எலும்பு முறிவு இருக்கலாம் என சந்தேகித்தவளின் மனதுக்குள் மெதுவாக கிலி பரவியது.


“ஏன் வேந்தன் இப்படி..” வார்த்தையை முழுவதுமாக முடிக்கும் தைரியம் கூட பெண்ணவளுக்கு வரவில்லை.


புகழ்வேந்தன் இடி முழக்கம் போல சிரித்தான்.


“என்னடி கேட்ட? ஏன் வேந்தனா? எனக்கு நிச்சயம் செய்த பொண்ண தனியறைக்கு வரச் சொன்னவனை மாலை போட்டு மரியாதை செய்ற அளவுக்கு பெரியமனசு எனக்கு கெடையாது ஆழினி தேவி”


சொன்னதோடு ஒரு பௌன்சரின் கையிலிருந்த கட்டையை வாங்கி இமயனை நைய புடைத்தான் புகழ்வேந்தன்.


“ஆஆஆ! ஐயோஓஓஓஓ! என்னை விட்.ட்ட்…ட்ட்ட்..ட்ட்.ருங்கஅஅ”


அரை உயிராக கதறினான் இமயன்.


“இவ என் ஆழினி.  இன்னொரு வாட்டி உன் பார்வை இவ மேல பட்டுதுனா கூட உன்னை காணப்பொணம் ஆக்கிடுவேன். ஜாக்கிரதை”


புகழ்வேந்தனின் ருத்ரவதாரத்தைக் கண்டு உச்சி முதல் பாதம் வரை நடுக்கம் கண்டது ஆழினிக்கு.


“மா.ட்ட்..ட்ட்.டேன்... ஆ..ழ்..ழ்.நி…யை”


முடிக்கும் முன்னர் இமயனின் தலை சரிந்துவிட ஆழினி ‘வீலென்று’ அலறினாள்.


அவன் செத்துவிட்டான் என்று கதற ஆரம்பித்தாள். பணத்திமிரில் மிடுக்காக நடமாடுபவள் இன்று மரணபயத்தில் அலறி துடித்தாள். புகழ்வேந்தனை பணமில்லாதவன் என எட்டி உதைத்தவள் இன்று அவனது கோபத்தீயை நேரில் கண்டதில் நெஞ்சு வெடிக்க கதறினாள்.


புகழ்வேந்தன் அவளது கதறலை திருப்தியோடு பார்த்துவிட்டு இமயவரம்பனுக்கு மூச்சு இருக்கிறதா என பரிசோதித்தான். இன்னும் அவன் சாகவில்லை என்றதும் பௌன்சர்களை அழைத்து அவனை மருத்துவமனையில் அனுமதிக்குமாறு கூறினான்.


பௌன்சர்கள் இமயனை தூக்கி செல்வதை பயத்தோடு பார்த்துக்கொண்டிருந்த ஆழினியிடம் வந்து குத்துக்காலிட்டு நின்றவன்


“ச்சோ பாவம். ஆழினி தேவியா இப்படி அரண்டு போய் அழுறது? நெனைக்கவே பாவமா இருக்குதே” என கேலி செய்தான்.


ஆழினி மிரட்சியோடு தன் முன்னே அழிக்க முடியாத அசுரனாய், சிம்ம சொப்பனமாய் பிடறி மயிர் சிலிர்க்க குத்துக்காலிட்டு நிற்பவனைப் பார்க்க பயந்து நடுங்கினாள்.


வலுக்கட்டாயமாக அவளது மோவாயை பற்றி திருப்பியவன் “இனி என்னை மீறி எதையும் செய்ய நெனைக்காதே ஆழினி. எனக்குள்ள இருந்த காதல் மாதிரி மென்மையான உணர்வுகள் மடிந்து போய் ரொம்ப நாளாகுது. இப்ப இங்க நிறைஞ்சு இருக்கிறது பழிவெறியும், உன் அழகை பார்த்ததும் உண்டாகுற மோகமும் தான். என் பழிவெறியையும் மோகத்தயும் தீர்க்க மனைவி என்ற பெயரில் வாழ்நாள் முழுக்க நீ கருவியா இருக்க போகிற ஆழினி. என்ட்ட இருந்து தப்பிக்கலாம்னு நீ யோசிச்ச அடுத்த நொடி என்னோட சுயரூபத்தை நீ பார்ப்பாய்” என்றான்.


தனது செல்வச்செருக்கால் கனிவே உருவாய் இருந்த புகழ்வேந்தனை கொன்றுவிட்டதை எண்ணி மனம் நொந்து கதறியழ ஆரம்பித்தாள் ஆழினி.


ஆண்சிங்கத்தை எதிர்கொள்ளும் கம்பீரமே பெண் சிங்கத்துக்கு அழகு. அந்தக் கம்பீரத்தை பெண்சிங்கம் இழக்

குமானால் ஆண்சிங்கத்துக்குச் சுவாரசியம் குறைந்துவிடும். பழி தீர்க்க கர்ஜிக்கும் ஆண் சிங்கத்துக்கு நிகராய் பெண் சிங்கம் திமிறி நிற்பது எந்நாளிலோ?


************ 


அடுத்த பதிவு திங்கள்.


Comments

Popular posts from this blog

அத்தியாயம் 7

அத்தியாயம் 4

அத்தியாயம் 8