அத்தியாயம் 4

 


புயலைப் போன்ற வேகத்துடன் பங்களாவுக்குள் நுழைந்தது புகழ்வேந்தனின் ஆடி. அதிலிருந்து இறங்கியவன் செங்குட்டுவனிடம் பேசியவாறு பங்களாவுக்குள் நுழைந்தான்.


அவனை எதிர்பார்த்து வழிமேல் விழி வைத்து காத்துக் கொண்டிருந்தார் பர்வதம். புகழ்வேந்தனின் அன்னை. நெற்றியில் துலங்கிய திருநீறு அவர் ஒரு கைம்பெண் என்பதற்கு அடையாளம். நான்கு வருடங்களுக்கு முன்னர் நடந்த துயரம் அவருடைய கணவர் கார்மேகவண்ணனின் மரணம்.


அந்த ஒரு மனிதரின் அகால மரணம் அவருடைய ஒரே மகனின் குணாதியத்தை ஒரேயடியாக மாற்றியிருந்தது.


புகழ்வேந்தன் நேரே அன்னையின் காலில் விழுந்து வணங்கினான்.


“நான் நெனைச்சதை முடிச்சிட்டேன்மா. முடிவு எனக்கு சாதகமா வரும்னு நம்புறேன்”


ஆறடிக்கு வளர்ந்துவிட்ட மகனின் சிரத்தைத் தொட்டு ஆசிர்வதித்தார் பர்வதம்.’


“நீ நெனைச்ச எல்லாம் நடக்கும் புகழ். எந்த நிலமையிலும் உனக்கு நான் கற்றுக் கொடுத்த நல்ல ஒழுக்கத்தை மட்டும் இழந்துடாதே.”


புகழ்வேந்தனோ “நான் உங்க வளர்ப்பு. கெட்ட காரிய எதையும் செய்யமாட்டேன். அதே நேரம் நமக்கு நடந்த அநீதிக்குக் காரணமானவங்களை பழிவாங்காம ஓயமாட்டேன்மா” என்று அழுத்தமாக உரைத்தான்.


பர்வதத்தின் கண்கள் கலங்கியது.


“நீ ஆழினியை கஷ்டப்படுத்தலைதானே? யாரோ செய்த தவறுக்கு அந்த பொண்ணு பழிகடா ஆகிடக்கூடாது புகழ்”


புகழ்வேந்தனோ முடியாதென மறுத்தான்.


“எல்லா தவறுகளோட ஆரம்பப்புள்ளி ஆழினி. அவளை நான் கஷ்டப்படுத்தக்கூடாதுனா அவ திருமதி புகழ்வேந்தனா மாறனும். அப்படி மாறுனாலும் என் பழியுணர்ச்சி என்னை விட்டு போகாது.” என்று பிடிவாதமாக கூறியவனிடம் பர்வதமும் அடங்கிப்போனார்.


கணவரின் மறைவுக்குப் பிறகு ராப்பகலாக உழைத்து குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டு வந்தவனின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல் தனது மனதிலுள்ள ஆசையை மட்டும் கூறினார்.


“ஆழினி கல்யாணத்திற்கு சம்மதிச்சிட்டாளா புகழ்?”


“அவ சம்மதிச்சு தான் ஆகனும். அவ அப்பன் சம்மதிக்க வைப்பான். அவளைப் பெண் கேட்டு வரதா சொல்லிட்டு வந்திருக்கிறேன். கூடிய சீக்கிரம் வைதீஸ்வரன்ட்ட இருந்து நல்லசேதி வரும்”


அதை சொல்லும்போது புகழ்வேந்தனின் கண்கள் பழிவெறியில் மின்னின.


அவன் நம்பியது போலவே செண்டிமெண்ட் பேச்சில் மகளின் மனதை மாற்றி திருமணத்துக்கு சம்மதிக்க வைத்துவிட்டார் வைதீஸ்வரன். போதாக்குறைக்கு தமயந்தியின் ஒப்பாரி வேறு. தந்தையின் கையறுநிலை, தாய்கு நிகரான சித்தியின் கதறலுக்கு மனம் இரங்கிய ஆழினி வெறுப்போடு புகழ்வேந்தனை மணக்க சம்மதித்தாள்.


இழக்க கூடாத பெண்மையையே இழந்தாயிற்று. இனி ஜாண் போனால் என்ன முழம் போனால் என்ன.


ஆழினியின் சம்மதம் பற்றி தகவல் புகழ்வேந்தனுக்குக் கிடைத்ததும் பெண் பார்க்கும் வைபவத்துக்கு அன்னையையும் தங்கையையும் தயாராக சொன்னான்.


குமுதினி அவனது இருபது வயது தங்கை. துறுதுறு சுபாவம் கொண்ட பெண். அன்னையைப் போலவே பணத்திமிர் அற்றவள். சினிமா ஹீரோ போன்ற தன் அண்ணனுக்கு ஆழினி போன்ற பேரழகி மனைவியாகப் போகிறாள் என்றதும் குதியாட்டம் போட்டாள்.


“அண்ணி வீட்டுக்கு வந்ததும் நானும் அவங்களும் ஒன்னா ஷாப்பிங் போவோம். டென்னிஸ் ப்ராக்டீஸ் செய்வோம். என் ஃப்ரெண்ட்ஸ் வைக்குற பார்ட்டிக்கு ஒன்னா போவோம். நெனைச்சாலே ஜாலியா இருக்கு. தேங்க்ஸ்ண்ணா, ஆழினி அண்ணி மாதிரி ஒருத்தவங்களை கல்யாணம் செஞ்சு எனக்கு அண்ணியா கொண்டு வரப்போறதுக்கு”


முயல்குட்டியாக துள்ளும் தங்கையை ஆதுரமாகப் பார்த்த புகழ்வேந்தன் அவர்களோடு வைதீஸ்வரனின் வீட்டை அடைந்தான்.


வைதீஸ்வரனும் தமயந்தியு நெற்றியில் திருநீறோடு வந்த பர்வதத்தைப் பார்த்ததும் விக்கித்துப் போயினர். பர்வதமும் அவர்களைப் பார்த்து கசந்த முறுவலை சிந்தி கைகூப்பினார்.


தமயந்தியோ வைதீஸ்வரனைப் போலன்றி “வணக்கம் சம்மந்திம்மா” என சுதாரித்து அவர்களை வரவேற்றார்.


புகழ்வேந்தனின் மனதில் கோபத்தீ எரிந்து கொண்டிருக்க அவன் எங்கே இதையெல்லாம் கவனிப்பான்.


பர்வதமும் குமுதினியும் அமர்ந்தார்கள். ஆனால் புகழ்வேந்தன் இறுகிப்போன முகத்தோடு நின்று கொண்டிருந்தான். அவனருகில் நின்ற செங்குட்டுவன் “உட்காருங்க பாஸ்” என்று சொன்னதும் கருப்பு கண்ணாடியைக் கழற்றியவன் “ஆழினி வரட்டும்” என்றான்.


வைதீஸ்வரனும் தமயந்தியும் பர்வதத்திடம் சங்கடத்தோடு பேசினார்கள்.


“நடந்த எதையும் சம்மந்திம்மா மனசுல வச்சிக்க கூடாது. ஏதோ புத்திக்கெட்டு போதாத காலத்தில தப்பு செஞ்சுட்டோம்” என தடுமாறி உரைத்தார் வைதீஸ்வரன்.


தமயந்தியோ ஒரு படி மேலே போய் “எங்கவீட்டு பொண்ணை உங்க மகள் மாதிரி நெனைச்சு மன்னிச்சு ஏற்றுக்கோங்க சம்மந்திம்மா” என்று கெஞ்சும் தொனியில் பேச பர்வதம் தர்மசங்கடத்தில் நெளிந்தார்.


“எதுக்கு பழசை பேசி நேரத்தை விரயமாக்கனும்? என் மருமகளை கூப்புடுங்க சம்மந்திம்மா” என்று அவர் சொன்னதும் தமயந்திக்கு வாயெல்லாம் பல்லாக போனது.


“இதோ கூட்டிட்டு வரேன் சம்மந்திம்மா” என அவசரமாக மாடிப்படியேறினார்.


இங்கே நடந்த எதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்ற பாவனையோடு நின்று கொண்டிருந்த புகழ்வேந்தன் பட்டாடை பூண்டு அன்னநடை பயின்று வந்த ஆழினியைக் கண்டதும் மெய்மறந்தான்.


அழகு என்ற வார்த்தைக்கு அவளது பெயரை அர்த்தம் சொல்லலாம் போல பெண்மைக்கு உரித்தான லாவண்யத்துடன் மின்னியவளைக் கண்டு தடுமாறிப்போனான் காளையவன்.


அவள் நடக்கும் போது அசையும் துடி இடையைத் தீண்டி ஜென்மசாபல்யம் பெற அவனது கரங்கள் துடித்தன. அவளது துடிக்கும் இதழ்களை அடக்கி அமைதிப்படுத்தி தேனமுதம் அருந்த அவனது உதடுகள் உண்ணாவிரதம் இருந்தன.


அவனுக்குப் பிடித்த மல்லிகையை நீலப்பின்னலில் பூச்சூடியிருந்தாள் ஆழினி.


கண்களில் கண்மை மின்னியது. துடிக்கும் உதடுகளும், எரிக்கும் விழிகளும் அவள் அணிந்திருந்த செவ்வண்ண பட்டுச்சேலைக்குப் பொருத்தமாக ஜொலித்தன. செவ்வண்ணப்பாவையாக வந்தவள் சுரத்தின்றி வணக்கம் சொன்னாள்.


பர்வதத்தை மட்டும் அமைதியாக பார்த்தாள். அவளைப் பார்த்த பர்வதமோ கண் கலங்க “ஆழினி நல்லா இருக்கியாம்மா?” என தழுதழுத்த குரலில் கேட்டார். அவரது குரல் அமைதியை இழந்து தடுமாறியது.


இக்காட்சியை பார்த்த புகழ்வேந்தனோ “திமிர் பிடிச்சவட்ட அம்மா ஏன் நலம் விசாரிக்காங்க?” என புகைந்தான்.


ஆழினியோ புன்னகை பூத்தாள். பர்வதத்தையும் குமுதினியையும் அவள் பார்த்த விதத்தில் வெறுப்பில்லை.


“நல்லா இருக்கிறேன் ஆன்ட்டி. நீங்களும் நல்லா இருப்பீங்கனு நம்புறேன். அங்கிள் தவறிப்போனது எனக்கு தெரியாது. சித்தி இப்போ சொன்னதும் தான் தெரிஞ்சுது”


கார்மேகவண்ணனை அவள் நினைவூட்டவும் பர்வதமும் குமுதினியும் கண் கலங்கினார்கள். பேச்சு வரவில்லை.


“பழசை பேசவேண்டாம்னு அம்மா சொல்லிட்டாங்க. இனி நடக்கப்போகிறதை கவனிக்கலாம்”


கட்டளையிடும் தொனியில் புகழ்வேந்தன் கூறவும் பெண் பார்க்கும் வைபவம் ஆரம்பித்தது.


ஆழினிக்காக ஆசையாக வாங்கி வந்த வைர ஆரத்தை அவள் கழுத்தில் போட்டு அழகு பார்த்தார் பர்வதம். குமுதினி அண்ணிக்காக வாங்கி வந்த மோதிரத்தை போட்டுவிடுமாறு புகழ்வேந்தனிடம் கூறினாள்.


தங்கையின் ஆசையை நிறைவேற்ற மோதிரத்தை வாங்கியவன் ஆழினியின் வெண்டைப்பிஞ்சு விரல்லில் அதை போட்டான்.


அவனது தொடுகையில் ஆழினியின் உடல் விரைக்க ஏளனச்சிரிப்போடு அவள் காதருகே குனிந்தவன் “மொத்தத்தையும் தொட்டவன்டி நான். விரலுக்கே விரைச்சு போகிற” என்றதும் அவமானத்தில் கூனிக் குறுகினாள் ஆழினி.


கண்கள் கலங்கி சூடாக ஒரு துளி கண்ணீர் அவனது கையில் விழவும் புகழ்வேந்தன் அமைதியானான்.


தங்கள் குடும்ப ஜோசியர் சொன்ன தேதியில் திருமணத்தை வைத்துக்கொள்ளலாமா என கேட்டு உறுதிபடுத்திக்கொண்டார் பர்வதம்.


 கிளம்பும் முன்னர் ஆழினியிடம் தனியே பேசவேண்டுமென அவளது அறைக்கு சென்றான் புகழ்வேந்தன்.


ஆழினிக்கோ அவனோடு தனியே பேச பயம். தனக்கும் அவனுக்கும் இடையே இருந்த வெறுப்பை தாண்டி அவனது சீண்டல் எல்லை மீறீயதை வைத்து தான் அந்த பயம் வந்தது.


புகழ்வேந்தனோ மல்லிகை வாசத்தில் கிறங்கி ஆழினியின் இடையைப் பற்றி தன்னருகே இழுத்துக்கொண்டான்.


அவனது அழுத்தமான விரல்கள் இடையை மீட்டி மேலேறி பெண்மையின் லாவண்யங்களைத் தீண்ட துடித்தன. ஆழினியோ அவனது கரத்தின் தீண்டலை அனல் தீண்டலாய் நினைத்து துடித்தாள்.


“விடு வேந்தன் என்னை”


திமிறியவளை இரு கரம் கொண்டு அடக்கியவன் எலும்புகள் நொறுங்கும் அளவுக்கு அணைத்து அவளது கூந்தலில் இருந்த மல்லிகையை வாசம் பிடித்தான்.


அணைக்கும்போதே ஆழினியின் மென்மை அவனை பாடாய்படுத்தியது.


ஆழினிக்கோ அவனது தீண்டலில் மேனி சிலிர்த்து போனது. பருந்தின் இறக்கைக்குள் சிக்கிய கோழிக்குஞ்சாக அவனது ஆகிருதியான சரீரத்துக்குள் மென்பாவையவள் ஒடுங்கிக்கொண்டாள்.


“இன்னும் பத்து நாளில நீ எனக்கு முழுவதும் சொந்தமாகிடுவ ஆழினி. அதை மனசுல வச்சு நடந்துக்க. இனி நீ இமயனை பார்க்க கூடாது. அவன் கூட எந்த பேச்சுவார்த்தையும் வச்சுக்க கூடாது. புரிந்ததா?”


ஆழினிக்கு நடுக்கத்தில் பேச்சு வரவில்லை. கீழ்த்தளத்தில் எல்லாரும் இருக்கும்போது இப்படி இவன் அத்துமீறுவான் என அவள் எதிர்பார்க்கவில்லை. அவனது அத்துமீறலுக்கு அடிபணிந்த தனது உடலையும் சேர்த்து வைதவள் “என்னை விடு வேந்தன். இன்னும் நீ என் கணவன் ஆகலை” என்றாள்.


புகழ்வேந்தனோ அவள் காமெடி செய்தது போல சிரித்து “ஒரு கணவனுக்கு உண்டான எல்லா உரிமையையும் நான் எடுத்துக்கிட்டேன் ஹனி. இன்னுமா நீ என்னை விலகி நிற்க சொல்ற?” என்று நக்கல் செய்தான்.


சிரித்தவன் அப்படியே அவளது கழுத்து வளைவில் வாசம் பிடிக்கவும் ஆழினியின் தேகம் விரைத்தது.


“என் அனுமதியில்லாம நீங்க செஞ்ச காரியம் கேவலமானது வேந்தன். அதுக்கு நீங்க வெட்கி தலைகுனியனும்”


தைரியத்தைத் திரட்டிக்கொண்டு கத்தினாள் ஆழினி.


உடனே அவளை விலக்கினான் புகழ்வேந்தன். அவனது விழிகள் அக்னி கோலங்களாய் ஜொலித்தன.


“யாருடி வெட்கப்படனும்? நானா இல்லை நீயா? பணத்திமிரால் என் குடும்பத்தை கதிகலங்க வைச்சவ நீ. அதுக்கு நீ கூனி குறுகனும். அசிங்கப்படனும். இந்த வேந்தன் உன்னை அசிங்கப்பட வைப்பேன். நானும் என் குடும்பமும் நிற்கதியா நின்றது போல உன்னையும் நிற்க வைப்பேன். இது வேந்தனோட சபதம்.”


சிங்கமாக மாறி கர்ஜித்தவன் “இந்த கல்யாணம் உனக்கு நரகம் ஆழினி. இதுல இருந்து தப்பிச்சிடலாம்னு கனவு காணாதே. என் மனசுல எரியுற பழி நெருப்பு உன்னை முழுசா எரிச்சா தான் அடங்கும். வரட்டுமா ஆழினி தேவி?” என்று எள்ளல் தொனியில் விடைபெற்றான்.


அவனது தடதட காலடியோசை அங்கிருந்து சென்றதும் அப்படியே தரையில் மடிந்து அமர்ந்து கண்ணீர் உகுத்தாள் ஆழினி. அவளது செல்வச்செருக்கு தன் குடும்பத்தை கதிகலங்க வைத்ததாக வேந்தன் எண்ணுவதும், அவளை குற்றம் சாட்டுவதும் ஏன் என ஆழினிக்குப் புரியவில்லை.


காதலை மறுத்தபோது கொஞ்சம் அதிகமாக பேசிவிட்டாள் தான். அதற்கு வலுவான காரணமும் உள்ளது. இப்போது அதை சொன்னால் கூட வேந்தன் நம்புவது கடினம்.


நான்கு புறமும் எரியும் நரகத்தீயினுள்ளே மாட்டிக்கொண்ட புழுவைப்போல துடித்தாள் ஆழினி.


அதே வேதனையை புகழ்வேந்தனுடன் காரில் பயணித்த பர்வதமும் அனுபவித்தார். காரணம் ஆழினியின் கண்களில் இருந்த ஜீவனற்ற பார்வை.


ஏதோ தவறு நடந்திருக்கிறதென அன்னை மனம் பதறியது. மகன் ஏதேனும் தவறிழைத்திருப்பானோ என பயந்தது. அதை மகனிடம் கேட்கவும் தயக்கம். ஆம் என்று சொல்லிவிட்டான் என்றால் பர்வதத்தின் நெஞ்சு வெடித்துவிடும்.


புகழ்வேந்தனின் வாழ்க்கையில் முக்கியமான இரண்டு பெண்கள் துடித்துக்கொண்டிருக்கையில் அவனோ அடுத்து நகர்த்த வேண்டிய காய்களைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தான்.


“இன்னைக்கு சோழால ஒரு மீட்டிங் இருக்கு பாஸ்” என்று செங்குட்டுவன் வேறு தொழில் மீட்டிங்கை நினைவூட்ட தற்காலிகமாக ஆழினியை மறந்தான் வேந்தன்.


அங்கே அழுது ஓய்ந்த ஆழினியோ புடவையை மாற்றி வழக்கமான டாப் அணிந்துகொண்டாள்.


அப்போது அவளது போனிற்கு கால் வந்தது. அழைத்தவன் இமயவரம்பன் என்றதும் பெண்ணிற்கு கோபம் வந்துவிட்டது.


“கல்யாணத்தை நிறுத்திட்டு ஏன் கால் செஞ்சடா?” என அவனிடம் வெடித்தாள் ஆழினி.


இமயவரம்பனோ பம்மி பம்மி பேசினான்.


“என்னை மன்னிச்சிடு ஆழினி. சில தவறான புரிதல்கள். உன்னை நேர்ல பார்த்து விளக்கம் சொல்ல விரும்புறேன். உன்னால சோழா வரமுடியுமா ஆழினி? ப்ளீஸ் மாட்டேன்னு சொல்லிடாதே”


சற்று முன்னர் புகழ்வேந்தன் இமயவரம்பனை சந்திக்க கூடாதென எச்சரித்தது நினைவுக்கு வந்தது. ஒருவேளை இமயவரம்பனை தனது வாழ்க்கையிலிருந்து அவன் தான் விலக்கி வைத்திருப்பானோ? தன்னை பழிவாங்க தனது வாழ்க்கைக்குள் நுழைய எந்த கீழ்த்தரமான காரியத்தையும் செய்ய தயாராய் இருப்பவன் தானே. செய்தாலும் செய்திருப்பான்.


இமயவரம்பன் என்ன சொல்ல அழைக்கிறான் என்று தெரிந்துகொள்ளும் ஆவல் ஆழினிக்குப் பிறந்தது.


பீரோவைத் திறந்தவள் கருப்பு வண்ண பாடிகான் கவுனை அணிந்துகொண்டாள்.


போனுடன் வெளியேறி காரை எடுத்துக்கொண்டவள் தமயந்தியும் வைதீஸ்வரனும் தடுக்க தடுக்க கேட்காமல் சோழாவுக்குக் கிளம்பினாள்.


ஹோட்டலுக்கு வந்த பிறகு இமயவரம்பனின் போனுக்கு கால் செய்தாள் அவள்.


“வந்திட்டியா ஆழி? நான் உனக்காக வி.ஐ.பி சூட் நம்பர் 25ல் காத்திருக்கிறேன்” என்றான் இமயவரம்பன்.


தன்னை தனியறைக்கு வரச் சொல்கிறானே என்று யோசிக்கும் நிதானத்தில் ஆழினி இல்லை. திருமணத்தை நிறுத்தி தந்தையை புகழ்வேந்தன் முன்னே மண்டியிட வைத்தவனை சட்டையை பிடித்து கேள்வி கேட்கும் கோபம் மட்டுமே அவள் மனமெங்கும் நிறைந்திருந்தது. லிப்டில் ஏறி அவன் சொன்ன அறையை அடைந்தவள் கதவில் கை வைத்ததுமே அது திறந்துகொண்டது.


உள்ளே சென்றவள் “இமயன்” என்று அழைக்க பதில் வரவில்லை.


தன்னை வரச் சொல்லிவிட்டு இவன் எங்கே போய் தொலைந்தான் என்று பற்களை அவள் கடித்த போது “வெல்கம் ஹனி. வாட் எ ஸ்வீட் சர்ப்ரைஸ்” என ஆச்சரியமாக புகழ்வேந்தனின் குரல் அவள் முதுகுக்குப் பின்னே கேட்க ஆழினி வெலவெலத்துப் போய் திரும்பினாள்.


அங்கே குளிர் கண்ணாடியைக் கழற்றிவாறு கருப்பு கோர்ட் ஷூட்டில்

 விரல்களை பேண்ட் பாக்கெட்டில் நுழைத்து கால்களை சற்று அகட்டியவண்ணம் நின்று அவளை குத்தீட்டி பார்வை பார்த்துக்கொண்டிருந்தான் புகழ்வேந்தன்.


----------------


அடுத்த பதிவு நாளை.


Comments

Popular posts from this blog

அத்தியாயம் 7

அத்தியாயம் 8