அத்தியாயம் 8

 


அத்தியாயம் 8


புகழ்வேந்தன் தனது மினி பங்களாவின் ஆபிஸ் ரூமில் இருந்தான். தனது பெயருக்கு மாறியிருந்த ஆழினியின் அன்னைக்கு உரிமைப்பட்ட சொத்து சம்பந்தப்பட்ட பத்திரங்களை பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.


செங்குட்டுவனின் போனுக்குக் கால் செய்தவன் “வைதீஸ்வரன் வீட்டில என்ன நடக்குது செங்குட்டுவா?” என்று கேட்க, அவனோ “நம்ம ஆட்கள் அவங்க வீட்டை கண்காணிச்சிட்டு இருக்காங்க பாஸ். சந்தேகப்படுற விதத்தில எதுவும் நடக்கலை. அப்படி நடந்திச்சினா உடனே உங்களுக்குக் கால் பண்றேன் பாஸ்” என்றான்.


“சரி செங்குட்டுவா. எனக்குச் சில விவரங்கள் தெரியனும்”


“யாரை பற்றி பாஸ்?”


“ஆழினியோட அம்மா மீனாட்சியைப் பற்றி. அவங்களுக்கு விசுவாசமான வேலையாட்கள் யாரும் இப்போ அவங்க வீட்டில வேலை செய்யலை. அவங்க மரணத்தில மர்மம் இருக்கிறதா குடும்ப வக்கீல் வேணுகோபால் சொல்றார். எதுவோ இடிக்குது. அதை பற்றி விசாரிச்சு வை”


“விசாரிக்கிறேன் பாஸ்”


அவனோடு பேசிவிட்டு காலை கட் செய்தவன் அன்னையின் வற்புறுத்தலுக்காக வீட்டில் தயாரான கல்யாணவிருந்தை ஆழினியோடு சாப்பிட ஒப்புக்கொண்டான்.

சாப்பிடும் போது குமுதினி செய்த குறும்பு விளையாட்டுகளை ஒரு அண்ணனாக பொறுத்துக்கொண்டான்.


“அண்ணிக்கு ஊட்டிவிடுங்க அண்ணா” “லட்டு கொடுங்க” “அண்ணி நீங்களும் ஊட்டி விடுங்க”


அவளது விளையாட்டுத்தனத்தால் தம்பதிகள் அசவுகரியமாக உணர்ந்தாலும் அதை வெளிக்காட்டினால் குமுதினி முகம் வாடுமே என்பதால் அவள் ஆட்டுவித்தவாறு ஆடினார்கள்.


அதனால் குமுதினியின் முகம் பூரித்துப்போனது. அண்ணி அண்ணி என்று அவள் ஆழினியைத் தாங்குவது புகழ்வேந்தனுக்குப் பிடிக்கவில்லை. அவளால் தாங்கள் இழந்த அனைத்தும் கண் முன் வந்து போனதால் வெறுப்போடு அக்காட்சியைப் பார்த்தான்.


உடன் பிறந்தவர்கள் யாருமின்றி தனியே வளர்ந்த ஆழினிக்கோ குமுதினியின் பாசம் பிடித்துவிட்டது.


“நீ சொன்னா சரியா தான் இருக்கும் குமுதாம்மா” என்று அன்போடு கேட்டுகொண்டாள்.


ஆழினிக்கு அன்பாக கூட பேசத் தெரியுமா என்று வியந்தான் புகழ்வேந்தன்.


“அப்பா என்னை குமுதாம்மானு கூப்புடுவாங்க அண்ணி” தந்தையின் நினைவில் கண்ணீர் பெருக்கினாள் குமுதினி.


பர்வதமோ “கண்ணை துடைச்சுக்க. உன் அப்பாவே நம்ம புகழுக்குப் புள்ளையா வந்து பிறப்பார் பாரேன்” என்றார் மகளுக்கு ஆறுதலாக. அதில் குமுதினியின் முகம் மலர்ந்தது.


ஆழினியோ தர்மசங்கடத்துக்கு ஆளானாள். நடப்பவை அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்த புகழ்வேந்தனோ குழந்தை பற்றிய பேச்சில் யோசனைவயப்பட்டான். அதற்கு மேல் அங்கே நடப்பதை பார்க்க விருப்பமில்லை என்று எள்ளலோடு தனது அறைக்குப் போய்விட்டான்.


சாப்பாடு முடிந்ததும் பர்வதம் மருமகளை ஓய்வெடுக்கும்படி கூற அவளுக்கோ மீண்டும் புகழ்வேந்தனின் அறைக்குப் போக தயக்கம். அவன் எப்போது தாபத்தில் கொஞ்சுவான், எப்போது சினத்தில் சீறுவான் என்று புரியாத பேதை வேறு என்ன செய்வாள்.


பர்வதத்திடம் “நான் உங்க மடியில படுத்துக்கவா அத்த?” என்று அவள் கேட்க, பர்வதமோ “இதுக்கு கேட்கணுமா ஆழி? வா, படுத்துக்க” என்று மருமகளை மடியில் படுக்க வைத்துக்கொண்டார்.


அவளது சிகையை வருடியவர் “உனக்கு பட்டு போல முடி ஆழிம்மா” என்று சொல்ல, ஆழினியோ “என் அம்மாவுக்கு இப்படி பட்டு போல முடி இருக்கும் அத்த” என்றாள்.


பர்வதத்தின் மடி அன்னையின் மடியைப் போல இதமாக இருக்க கண் மூடி உறங்கிப்போனாள் அவள்.


அவள் கண் விழித்தபோது பர்வதம் சோபாவில் கையை பக்கவாட்டில் வைத்து உறங்கியிருந்தார்.


தனது உறக்கம் கெட்டுவிடக்கூடாதென இவ்வாறு உறங்குபவரின் அன்பில் ஆழினியின் கண்கள் கலங்கின.


“அத்த”


மெதுவாக கண் விழித்தவரை அவரது ரூமில் படுக்குமாறு கூறினாள் ஆழினி.


பர்வதமும் அவரது ரூமுக்குச் சென்றுவிட ஆழினி வேறு வழியில்லாமல் புகழ்வேந்தனின் மினி பங்களாவுக்குப் போனாள். அவளது நல்லநேரம் அங்கே புகழ்வேந்தன் இல்லை.


செங்குட்டுவனின் கால் வந்ததும் அன்னையிடம் சொல்லிக்கொண்டு எப்போதோ கிளம்பியிருந்தான். அவன் இல்லை என்ற நிம்மதியில் மஞ்சத்தில் கண் மூடிப் படுத்தாள் அவள்.


அவள் கண்ணுறங்கியபோது புகழ்வேந்தன் அவனது தலைமை அலுவலகத்தில் செங்குட்டுவனோடு பேசிக்கொண்டிருந்தான்.


“நீங்க கால் செஞ்சு கொஞ்சநேரத்தில வைதீஸ்வரன் வீட்டுக்கு ஒரு டயோட்டா கார் வந்திருக்கு பாஸ். அதுல இருந்து இறங்கின ஆள் பார்க்கிறதுக்கு மிலிட்டரி ஆள் மாதிரி இருந்தான்னு நம்ம ஆட்கள் தகவல் சொன்னாங்க”


“அவனோட போட்டோ கெடைச்சுதா?”


“அனுப்பியிருக்காங்க பாஸ்”


செங்குட்டுவனின் போனுக்கு அந்த ஆளின் போட்டோவை அனுப்பியிருந்தார்கள் கண்காணிக்கும் ஆட்கள்.


ஆள் பார்க்க விரைப்பாக இருந்தான். இவனுக்கும் வைதீஸ்வரனுக்கும் என்ன தொடர்பு என புகழ்வேந்தன் யோசித்தான்.


“இவன் அடிக்கடி அங்க வந்தான்னா நம் ஆட்களை வச்சு தூக்கிடு செங்குட்டுவா” என்று கட்டளை போட்டான்.


“சரி பாஸ். நான் அதை கவனிச்சிருக்கிறேன். நீங்க புது மாப்ளை பாஸ். ஹனிமூன் ப்ளான் எதுவும் இல்லையா?”


செங்குட்டுவன் இவ்வாறு கேட்டதும் முகம் மாறியது புகழ்வேந்தனுக்கு.


“உனக்கு எல்லாமே தெரிஞ்சும் இப்படி பேசலாமா செங்குட்டுவா? ஹனிமூன் சனிமூன் எதுவும் போற எண்ணம் எனக்கில்லை. என் நோக்கம் எல்லாம் ஆழினி மட்டுமே”


“இன்னிக்கு நீங்க ஆபிசுக்கு வந்ததை வைத்து நம்ம ஸ்டாப்ஸ் எல்லாம் கிசுகிசு பேசுறாங்க பாஸ். இதுல ஹனிமூன் போகலைனா கிசுகிசு இன்னும் அதிகமாகும்”


புகழ்வேந்தனோ எதையும் காதில் போட்டுக்கொள்ளவில்லை.


இரவு வரை இருந்து வேலைகளை முடித்தவன் அன்னையிடமிருந்து போன் வரவும் வீட்டுக்குக் கிளம்பினான்.


வீட்டுக்கு வந்தவனை புன்னகையோடு வரவேற்ற பர்வதம் இரவுணவைப் பரிமாறினார். ஆழினி எங்கே என கேட்டவனுக்கு அவளுக்கு அலங்காரம் நடைபெறுவதாக பதில் கிடைத்தது.


சாப்பிட்டு முடித்தவனிடம் “பழசு எதையும் மனசில வைச்சுக்காதே புகழ். ஆழினி தங்கமான பெண். நானே பார்த்திருந்தா கூட இப்படி ஒருத்தியை உனக்காக தேடியிருக்க முடியாது. நீங்க ரெண்டு பேரும் சந்தோசமா வாழனும். குமுதினிக்கு ஏற்ற வரன் அமைந்ததுனா என் கடமைய முடிச்சிட்டு நான் காசி ராமேஸ்வரம்னு போயிடுவேன்” என்றார் பர்வதம்.


புகழ்வேந்தனோ “நீங்க காசி ராமேஸ்வரம் போயிட்டா என் புள்ளையை யார்மா வளர்ப்பாங்க?” என்று கேட்டு அன்னையின் மனதை குளிரவைத்தான்.


ஜோசியர் குறித்து கொடுத்த நேரத்தில் மருமகளை மகனின் அறைக்கு அனுப்பி வைத்தார் பர்வதம்.


புகழ்வேந்தன் சொன்ன புடவையை அணிந்து ஆரணங்காக அவனது மினி பங்களாவுக்குள் அடியெடுத்த வைத்த ஆழினிக்கோ பயத்தில் வேர்த்து ஊற்றியது.


தட்டுத்தடுமாறி அவனது ரூமூக்குள் காலடி எடுத்து வைத்தவள் எந்த கிளேசமுமின்றி இயல்பாக மார்பின் குறுக்கே கை கட்டி நின்ற புகழ்வேந்தனை பொருளறியா பார்வை பார்த்தாள்.


அவன் நிதானமாக ரூமின் கதவைச் சாற்றினான்.


அவளை நெருங்கிய வேந்தனின் காலடி சத்தம் ஆழினியின் காதுகளில் முரசு கொட்டுவது போல ஒலித்தது.


அந்த சத்தம் நின்றதும் பருந்தின் இறகாய் அவனது வலிய கரங்கள் அவளை வளைத்துக்கொண்டன. ஆழினி உணர்வின்றி சிலையாய் சமைந்தாள்.


அவள் தலையில் சூடியிருந்த மல்லிகையை வாசம் பிடித்தவன் முதுகில் தெரிந்த மச்சத்தில் முத்தமிட ஆழினியின் உடல் சிலிர்த்து போனது. கண் மூடி சிலிர்ப்பை அனுபவித்தவளின் கையில் ஏதோ திணிக்கப்பட்டது. பதறி கண் விழித்தவள் அது மாத்திரை பாட்டில் என்றதும் புரியாமல் விழித்தாள்.


ஒருவேளை விஷமாத்திரை கொடுத்து தன்னை கொல்ல போகிறானா?


“டெய்லி காலையில இந்த மாத்திரையை போட்டுக்க” என ஆணையாக ஒலித்தது வேந்தனின் குரல். கருத்தரிப்பை தடுக்கும் மாத்திரை அடங்கிய பாட்டிலை ஆழினியின் கையில் திணித்தான் புகழ்வேந்தன். 


ஆழினியோ திகைத்து "இது எதற்கு?" என்க, அவனோ " கூடவே “உன் வயிற்றுல என் அப்பா பிறப்பார்னு அம்மா சொன்னாங்க. என் அப்பாவ மாதிரி நல்ல மனுசனை சுமக்க உனக்கு அருகதை இல்லை. இந்த மாத்திரை போட்டுக்கிட்டா நீ ப்ரெக்னெண்ட் ஆக மாட்ட. என் குழந்தை உன் வயிற்றில வளரக்குடாது. அதுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை" என்றான் கூலாக.


ஆழினி இதயம் அதிர நின்றாள். மணவாழ்வின் பூரணம் மழலை பிறப்பில் தானே. அதை சுமக்கவும் தடை போட்டவனை மனம் வலிக்க ஏறிட்டாள் காரிகை. 


நெஞ்சு துடிக்க "நான் சுமக்கிற குழந்தை வேண்டாம். ஆனா உங்க மோகத்துக்கு வடிகாலா சுகம் தேட மட்டும் நான் வேண்டுமா வேந்தன்?" என கேட்க


"என் படுக்கையை பகிர்ந்துக்கவும் உனக்கு அருகதை இல்லை தான். உன் கழுத்தில தாலி கட்டியிருக்கிறேன்‌. அந்த கடனை எப்படி வசூலிக்க? என் இயல்பான உடல் தேவையை தீர்த்துக்க உன்னை நாடுறேன். இது கிவ் அன்ட் டேக் பாலிசி ஆழினி தேவி" என்றான் திமிராக...


அதாவது அவளின் கழுத்தில் தாலி கட்டிய நன்றிக்கடனை அவனது உடல்தேவையை தீர்த்து ஆழினி கழிக்க வேண்டுமாம்‌. அந்த கணம் அவன் தீண்டி சுகித்த தேகம் ஊழித்தீயாக எரிந்தது கன்னல்மொழியாளுக்கு.


கண்கள் கரித்துக்கொண்டு அழுகை வர விம்மிய நெஞ்சு ஏறியிறங்க அவள் நின்ற கோலத்தை நிதானமாக ரசித்தவன் "பேசி நிறைய டைம் வேஸ்ட் செஞ்சுட்டேன். ஆரம்பிக்கலாமா?" என்று அவளை தன்னுடன் அணைத்தபடி படுக்கையில் சரிந்தான்.


அவளது ஆடை களைத்து தேடலை ஆரம்பித்தவனிடம் தடுமாறி கேட்டாள் ஆழினி.


“எனக்கு சுயநினைவு இல்லாதப்போ நடந்த சம்பவத்தால நான் கருத்தரிச்சா என்ன செய்வீங்க வேந்தன்?”


புகழ்வேந்தன் அவளை விட்டு விலகி அமர்ந்தான். அவன் உதட்டில் ஏளனப்புன்னகை.


“நான் என்ன சொன்னாலும் நம்புறீயே ஆழினிதேவி” என்ற கிண்டலோடு அவன் புருவத்தைத் தூக்கியவிதம் ஆழினிக்கு எதையோ சொன்னது.


வேகமாக புடவையை மடித்துவிட்டு எழுந்தவளோ “அப்போ நீங்க சொன்னது பொய்யா?” என்று இதழ்கள் துடிக்க கேட்டாள்.


புகழ்வேந்தனோ “ஆமாம். பொய்யே தான்” என்றான் தலைசரித்து.


ஆழினி பொங்கிய சினத்தோடு அவனது சட்டையைப் பற்றியவள் “ஏன்டா இப்படி பொய் சொன்ன? உன்னால எத்தனை நான் என்னையே வெறுத்திருக்கிறேன் தெரியுமா? நீ மனுசனா இல்ல மிருகமா?” என கதறி துடிக்க, அவனோ “உன் கிட்ட மனுசனா நடந்துக்கனும்னு எனக்கு தோணலைடி” என்றான் திமிராக.


“சீ” என்றபடி எழுந்தவளோ “இனி உன் சுண்டுவிரல் கூட என் மேல படக்கூடாது. நீ கேவலமான ஜந்து” என்றபடி படுக்கையைவிட்டு விலகிப் போக எத்தனிக்க, புகழ்வேந்தனோ அவளது கையைப் பிடித்து இழுத்து படுக்கையில் சரித்தான்.


ஆழினி அடம்பிடிக்கவும் அவளை அடக்கியவன் அவளது திமிறிய உதடுகளை தன் முரட்டு உதடுகளால் சிறை பிடித்தான். உதடுகளை சிறை பிடித்தவனின் கரங்கள் அவளது தேகத்தை வருடி வீணையாய் மீட்ட ஆரம்பித்தன.


ஆழினியின் இதழ்கள் அவனது மூர்க்கமான முத்தத்தால் எரிய ஆரம்பிக்கவும் பெண்ணவள் கண்ணீர் உகுத்தாள்.


கொஞ்சம் இடைவெளி விட்டு அவளது இதழ்களை விடுவித்தவன் “அன்னிக்கு உன்னை தொட எனக்கு உரிமையில்லடி. தாலி கட்டாம ஒரு பொண்ணை சூறையாடுற அளவுக்கு நான் கேவலமானவன் இல்லை. உன்னை பழிவாங்க பொய் சொன்னேன். நீ உடைந்து அழனும், துடிக்கனும்னு ஆசைப்பட்டேன். நான் நினைச்சது நடந்தது. இன்னும் என் பழிவாங்கும் படலம் முடியலை. இப்போ தான் ஆரம்பிச்சியிருக்கு” என்றான் ஆழினியிடம்.


ஆழினியின் கண்ணீர் நிற்கவில்லை. அவன் மனதில் ஒட்டியிருந்த காதல் கொஞ்சம் வேலை செய்தது. தன் உதடுகளால் அவள் கண்ணீரை துடைத்தவன் சிப்பி இமைகள் மீது முத்தமிட்டான்.


நெற்றி, கன்னம், உதடு என மாறி மாறி முத்த ஊர்வலம் நடத்தியவன் ஆழினியின் செவிமடலை நாவால் வருடியவாறே “ஐ நீட் யு ஆழினி. ஐ நீட் யு ரைட் நவ்” என்று ஹஸ்கி குரலில் கூற, ஆழினியோ அவனது ஒவ்வொரு முத்தத்திலும் தனது மனவுறுதி கற்பூரமாக கறைவதை ஆதங்கத்துடன் அனுபவித்தாள்.


புகழ்வேந்தன் அவள் கழுத்தில் வாசம் பிடித்தவன் மெதுவாக அவளது உடலை தன் வசப்படுத்தினான். மாறனின் மறுஜென்மமோ என சந்தேகம் கொள்ளும் வகையில் மன்மதக்கலையின் ஒவ்வொரு பாடத்தையும் ஆழினியின் பூவுடலில் படிக்க ஆரம்பித்தான் அவன்.


ஆடைகள் அங்கே அபத்தமாகின. ஆலிங்கனங்கள் அங்கே ஆபரணங்கள் ஆகின. முத்தங்கள் அங்கே முக்கியமாகிவிட மோகத்தையும் தாகத்தையும் ஒருசேர ஆழினியிடம் தீர்க்க ஆரம்பித்தான் புகழ்வேந்தன்.


பூமேனி ஆணவனின் முரட்டுக்காதலில் நொந்து போக, பெண்ணவளோ புதிதாய் கற்ற மன்மதக்கலையின் மயக்கத்தில் இருந்தாள். கட்டில் யுத்தத்தில் முரடனிடம் பட்ட காயங்கள் வலியை விட சுகத்தை கொடுத்தன அவளுக்கு.


யாருடைய காதலை மறுதலித்தாளோ அவனுடனே காதல் விளையாட்டை பஞ்சணையில் விளையாடிக்கொண்டிருக்கிறோம் என்பதை மறந்தாள். யாரை எள்ளி நகையாடினாளோ அவனையே இன்று நாயகனாக பெற்றதை மறந்தாள்.


யாரை வெறுத்தாளோ அவனின் தொடுகையிலே மயங்கி சிலிர்த்து அடங்கிப்போவதை மறந்தாள். மொத்தத்தில் ஆழினி தன்னையே மறந்து புகழ்வேந்தனின் தேடலுக்கு இடம் கொடுத்தாள்.


தேடியவன் அவளில் தொலைவதை ரசித்தவள் தானுமே தேடலில் பங்குகொண்டாள். பள்ளியறையின் முதல் விதியே தொலைப்பதும் தேடுவதும் தானே. விடிய விடிய நடந்த இந்த விளையாட்டில் அவன் தன்னை மீண்டும் மீண்டும் தேடியதில் களித்து களைத்து அவள் கண்ணுறங்கிப் போகையில் கங்குல் கரைந்து போயிருந்தது.


விடியலில் கண்ணயர்ந்தவள் விழிக்கையில் பகலவன் பணிக்கு வந்துவிட்டான். உடல் அலுப்பில் எழுந்திருக்க மனமின்றி கம்போர்டருக்குள் புறண்டவளை சுற்றி வளைத்து அணைத்துக்கொண்டான் புகழ்வேந்தன்.


இரவின் மயக்கம் தீர்ந்த நிலையில் அவனது அணைப்பு அனாவசியமாக தோன்ற திமிறி விலக நினைத்தாள் பெண். அவனா விடுவான்? வாரி சுருட்டிய அவளைத் தன்னுடன் ஒட்டிக்கொண்டான். அவளைப் படுக்கையில் கவிழ்த்து இரு புறமும் கரங்களால் அணையிட்டவன் கண்ணுக்குக் கண் ஆழினியைப் பார்த்தான்.


இரவின் மோகம் மிச்சமிருந்த கண்கள் அவளிடம் ஏதோ சொல்லின. அதை புரிந்துகொள்ள விரும்பாத ஆழினி முகத்தைத் திருப்பிக்கொள்ள தனக்கு வாகாய் கிடைத்த கழுத்தில் முத்தமிட்டான் புகழ்வேந்தன்.


இப்போதும் அவனது முத்தத்தில் பெண்ணவளுக்கு மேனி சிலிர்த்து புல்லரித்தாள்.


அதை கண்டு நமட்டுச்சிரிப்போடு “ஐ நீட் யு ஹனி” என்றான். ஏற்கெனவே களைத்துப் போயிருந்தவளோ அவனது பேச்சில் அதிர்ந்து விழித்தாள்.


“ஏன் ஷாக் ஆகிற ஹனி? புதுசா திருமணம் ஆன புருசன் பொண்டாட்டியை நாடுறதுல என்ன தவறு இருக்கு? அதுவும் எனக்கு கிடைச்ச பொண்டாட்டி பேரழகி. சும்மா சொல்லக்கூடாது, நேற்று நைட் முழுக்க நீ களைக்காம எனக்கு கம்பெனி குடுத்து திருப்திப்படுத்துன. அது தான் என் மனசு இப்போவும் நீ வேணும்னு பேராசப்படுது. எடுத்துக்கவா ஆழினி?”


இவன் அனுமதி கேட்கிறானா? கிண்டல் செய்கிறானா? புரியவில்லை ஆழினிக்கு. அவன் ஒரு விரலால் தீண்டினாலே மனமும் உடலும் அவனது கட்டளைக்கு நாய்க்குட்டியாய் வாலாட்டுகிறதே. இவனுக்கு ஏன் அனுமதி வேண்டும்?


ஆழினி யோசிக்கும்போதே மாத்திரை பாட்டிலில் இருந்து ஒரு மாத்திரையை எடுத்தவன் அவளது வாய்க்குள் போட்டு தண்ணீரை ஊற்றினான். திணறலோடு மாத்திரையை விழுங்கினாள் ஆழினி.


விழுங்கி முடித்தவளின் கண்களில் நீர்த்திரை. ஏன் இப்படி செய்கிறாய் என்று கேட்டன அந்த விழிகள்.


“உன் மேல இருக்கிற மோகத்தில மறந்துடுவேன்னு நினைச்சியா ஹனி? நெவர். அவ்வளவு ஈசியா மறந்துடமாட்டேன்”


திமிரோடு சொல்லியபடி அவள் கழுத்தில் இருந்த பற்தடத்தில் முத்தமிட்டவன் உடைகளை அணிந்துகொள்ள, ஆழினி ஊமையாய் கண்ணீர் சிந்த ஆரம்பித்தாள்.


Comments

Popular posts from this blog

அத்தியாயம் 7

அத்தியாயம் 4