அத்தியாயம் 7

 


அத்தியாயம் 7


புகழ்வேந்தனோடு நின்ற ஆழினியை ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் வரவேற்றார் பர்வதம். எங்கே மகன் தனியொருவனாக நின்றுவிடுவானோ என்று இத்தனை ஆண்டுகள் இருந்த மனவுளைச்சல் அகன்று சூரியனைப் போல பிரகாசித்தது அவரது முகம்.


குமுதினிக்கோ அண்ணி வந்த சந்தோசம். ஆழினியை பூஜாரூமுக்கு அழைத்து சென்று பர்வதம் விளக்கேற்ற சொல்ல துணையாய் அவளும் சென்றாள்.


குத்துவிளக்கின் பிரகாசம் போல புகழ்வேந்தனின் வாழ்க்கையும் பிரகாசிக்கவேண்டும் என்று பூஜாரூமின் உள்ளே இருந்த முருகனின் திருவுருவப்படத்திடம் வேண்டிக்கொண்டார் பர்வதம்.


கரம் கூப்பி கண் மூடி நின்ற ஆழினியோ எப்படியாவது இந்த ராட்சசனிடமிருந்து என்னை காப்பாற்று இறைவா என்று மனமுருகி வேண்டினாள்.


அவளுக்கு இனி ரட்சகனாய் வரப்போவதே இந்த ராட்சசன் தான் என்பதை பேதை எப்போது அறிவாளோ?


 விளக்கேற்றியபிறகு பால் பழம் கொடுத்துவிட்டு இன்னும் சடங்கு சம்பிரதாயம் என்று பரபரத்த அன்னையை பார்வையால் அடக்கினான் புகழ்வேந்தன்.


“எல்லாம் சம்பிரதாயத்தையும் செய்திடனும்னு நான் ஆசைப்படக்கூடாதா புகழ்? அப்பா போட்டோவை ஆழினியோட சேர்ந்து கும்பிட்டுக்கப்பா” என்று அவர் ஆதங்கப்பட, குமுதினியோ “இன்னும் பால்ல மோதிரம் தேடுற ரிஸ்வல் இருக்கு அண்ணா” என வருத்தப்பட, புகழ்வேந்தனோ சம்பிரதாயம் என்ற வார்த்தைக்கே முற்றுப்புள்ளி வைத்துவிட்டான்.


ஆழினியின் புடவை நுனியோடு முடிச்சு போடப்பட்டிருந்த அவனது அங்கவஸ்திரத்தை மெதுவாக விடுவித்தவன் “இதோட கல்யாண டிராமா முடிஞ்சுதும்மா. இதுக்கு மேல என்னை எதுவும் செய்ய சொல்லி கட்டாயப்படுத்தாதீங்க” என்று கட்டளை போட ஆழினியின் மனம் வாடிப்போனது. ஆக அவளுக்கு கல்யாணத்தின் சடங்குகளைச் செய்யும் குடுப்பினையையும் இவன் கொடுக்கப்போவதில்லை!


புகழ்வேந்தனோ அவளது முகம் வாடுவதை கவனித்துவிட்டு வீட்டிலிருந்த பணியாட்களிடம் கல்யாண விருந்தை சமைக்கும்படி ஆணையிட்டவன் வேணுகோபாலன் கொடுத்த பத்திரங்களோடு தனது மினி பங்களாவுக்குச் சென்றுவிட ஆழினி தனியே நின்றாள்.


மணமாகி வந்த நாளிலே மருமகளைத் தனியே விட்டு சென்ற மகனை எப்படி கண்டிப்பதென தெரியாமல் விழித்த பர்வதம் குமுதினியை வைத்து மருமகளைச் சமாதானம் செய்ய ஆரம்பித்தார்.


அவளைக் கணவரின் ஆளுயர புகைப்படத்தின் முன்னே அழைத்து சென்றார்.


கிட்டத்தட்ட புகழ்வேந்தனின் சாயலில் புகைப்படத்தில் கம்பீரமாகச் சிரித்தார் அவனது தந்தை பாரிவேந்தன். முகத்தில் அப்படியொரு சாந்தம்.


வயதானால் புகழ்வேந்தன் இப்படி தான் இருப்பான் என்று யோசித்தது ஆழினியின் மனம்.


“வேந்தனுடைய அப்பா. இவங்க குடும்பம் ராமநாதபுரம் பக்கத்தில சேதுபதி குடும்பத்துக்கு உறவுக்காரங்க. செல்வாக்கான குடும்பம். என்னைக் காதலிச்சதால அவரை குடும்பத்தை விட்டு விலக்கி வைச்சிட்டாங்க. அவருக்கு ஸ்டீல் அத்தாரிட்டியில வேலை கெடச்சதால நாங்க சென்னைக்கு வந்துட்டோம்மா. அவர் இருந்த வரை என்னையும் என் பசங்களையும் தலைகுனிய வைச்சதில்லை”


பர்வதம் கண்ணீரைத் துடைத்துக்கொண்டார். ஆழினிக்கு அவரைப் பார்க்க பாவமாக இருந்தது.


“அங்… மாமா எப்ப தவறுனாங்க அத்த?”


“நாலு…” என ஆரம்பித்த குமுதினியிடம் வேண்டாமென கண்களால் இறைஞ்சிய பர்வதம் “வேலையில அவருக்கு இருந்த எதிரிங்களால நடந்த துன்பம்மா. கேட்டா உன் மனசும் வருத்தப்படும். இன்னிக்கு புதுவாழ்க்கைக்குள்ள நுழைஞ்சிருக்க. இந்த கதையை நான் இன்னொரு நாள் சொல்றேன்” என்றார்.


குமுதினி அன்னையிடம் ஏன் என பார்வையால் கேட்க இப்போது வேண்டாம் என்றார் அவர். ஆழினியும் அவரை சொல்லும்படி வற்புறுத்தவில்லை


பின்னர் மருமகளுக்கு வீட்டைச் சுற்றிக் காண்பித்தவர் “இனி இது எல்லாத்துக்கும் நீ தான் சொந்தக்காரி” என்றார் மனம் நிறைய.


ஆழினிக்கு ஆச்சரியம். இந்த வார்த்தையை அவளது சித்தி கூட உதிர்த்ததில்லை. வைதீஸ்வரனின் ஆஸ்திக்கு அவள் வாரிசு என்பாரே தவிர அனைத்துக்கு உடைமைக்காரி என்றெல்லாம் சொன்னதில்லை.


கள்ளங்கபடமற்ற நாத்தனார், பணக்கார திமிர் துளியுமில்லாத மாமியாரைக் கொடுத்த கடவுளுக்கு அந்நேரம் நன்றி சொன்னாள் ஆழினி.


“தேங்க்ஸ் அத்த” என்றவளை ஆதரவாக அணைத்து உச்சி முகர்ந்தார் பர்வதம். வீட்டுப்பணியாட்களிடம் ஆழினியை அவர்களின் எஜமானி என அறிமுகப்படுத்தி வைத்தார்.


அவர்கள் வணக்கம் கூற ஆழினியும் பதிலுக்கு வணங்கினாள். அவர்கள் வீட்டை விட பங்களா பெரியது. வேலையாட்களும் இங்கே அதிகம் என்று எண்ணியவளை சமையலறைக்கு அழைத்துச் சென்றார் பர்வதம்.


அங்கே பாதாம் கீர் தயாராகியிருந்தது. அதை ஆழினிக்குக் கொடுத்தவர் “சாப்பிடும்மா. மணப்பொண்ணு காலையிலேயே சாப்பிடல. புகழ் கோவத்தால நீ ஏன் பட்டினி கெடக்கனும்?” என்று அன்பாக பேசிய வார்த்தையில் அவளது கண்கள் நிறைந்தது.


வேலையாட்கள் முன்பு அழுவதற்கு கௌரவம் இடம் கொடுக்காததால் பாதாம் கீரை குடித்தவள் யாருமறியாவண்ணம் தூசியைத் துடைப்பது போல கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள்.


கொண்டவன் ராட்சசன் என்றாலும் அவனைப் பெற்றவரும் உடன்பிறந்தவளும் அன்பே உருவானவர்கள். இது ஆழினிக்குப் பெரும் ஆறுதலாக இருந்தது.


பர்வதம் இன்னொரு க்ளாஸ் பாதாம் கீரை அவளிடம் கொடுத்தார்.


“புகழுக்குக் கொடும்மா. அப்படியே கொஞ்சம் ஓய்வெடுத்துக்க. சாப்பாடு தயாரானதும் வேலையாள் உன்னை கூப்புட வருவான்” என்று சொல்லி மருமகளை மகனின் மினி பங்களாவுக்கு அனுப்பி வைத்தார் அந்த பாசக்கார தாயார்.


ஆழினிக்கோ அவரிடம் மறுக்க முடியாத நிலை. க்ளாசை வாங்கிக்கொண்டு வேந்தனின் இடம் நோக்கி நகர்ந்தவளின் கால்கள் பயத்தில் நடுங்கின.


சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கப்போகிறாளே! பயம் வராமல் இருக்குமா? பயத்தின் உச்சத்தில் கையிலிருந்த க்ளாஸ் ஆடி பாதாம் கீர் சிந்திக்கொண்டு இருந்தது.


அது முழுவதுமாக சிந்துவதற்குள் வேந்தனின் சாம்ராஜ்ஜியமான மினி பங்களாவின் வரவேற்பரைக்கு வந்துவிட்டாள். அங்கே அவன் இல்லை என்றதும் தேடிப் பார்த்தவள் தண்ணீரை யாரோ அலையும் சத்தம் கேட்கவே வெளியே வந்தாள்


மரங்கள் சூழ்ந்த இடத்தின் மையமாக இருந்த நீச்சல் குளத்தில் வலுவான புஜங்கள் அங்குமிங்கும் அசைய நீந்திகொண்டிருந்தான் புகழ்வேந்தன்.


பட்டுச்சேலை சரசரக்க வந்த மனைவியைப் பார்த்ததும் நீந்துவதை நிறுத்தியவன் “அதுக்குள்ள பொண்டாட்டி கடமையை செய்ய ஆரம்பிச்சிட்டியா ஹனி?” என்க, ஆழினியோ அவனது முகத்தை பார்க்காமல் அவனிடம் பாதாம் கீர் க்ளாசை நீட்டினாள்.


“அங்க இருந்து கொடுத்தா நான் எப்படி வாங்குவது ஆழினி தேவி? கொஞ்சம் கருணையுள்ளத்தோட இங்க வந்து நீட்டுங்க”


ஆழினி அவனைப் பார்ப்பதை தவிர்த்து குனிந்து அவனருகில் நீட்டிய அடுத்த நொடி அவனது வலிய கரம் பாதாம் கீர் க்ளாசோடு சேர்த்து அவளது  வளைகரத்தையும் பிடித்துக்கொண்டது.


“என்ன செய்றிங்க?” என ஆழினி திகைத்த அடுத்த நொடியில் அவளது கையை வலுவாகப் பிடித்து இழுத்தவன் அவளையும் நீச்சல்குளத்திற்குள் இழுத்துப் போட்டான்.


பாதாம் கீர் க்ளாஸ் எங்கேயோ பறக்க தொபுக்கடீர் என்று தண்ணீருக்குள் விழுந்த ஆழினி தண்ணீரைக் குடித்து தத்தளித்து பின்னர் சுதாரித்து நின்றாள்.


கண்களில் சீற்றம் மின்ன தன்னெதிரில் நின்றவனை எரித்தவள் அவன் உடலில் பாக்சர் தவிர வேறேதையும் அணியவில்லை என்றதும் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.


அவளது முகம் திருப்பலால் சீண்டப்பட்டவன் பின்னே இருந்து இழுத்து அணைத்துக்கொள்ளவும் ஆழினியின் தேகம் நடுங்கியது.


புகழ்வேந்தனின் பரந்த தேகத்துக்குள் ஒடுங்கி நின்றவள் அவனது கரங்கள் இடையில் ஊர்வலம் போகவும் மேனி கூசிப்போனாள்.


அவளுடைய கழுத்தில் உதட்டைப் பதித்தவனோ “வாசமா இருக்கிறடி ஹனி. இந்த வாசனையில பித்து பிடிக்குதே” என்று ஹஸ்கி குரலில் முனங்க ஆழினிக்கோ யாரும் தங்களை இந்தக் கோலத்தில் பார்த்துவிடுவார்களோ என்ற பயம்.


அவளது மனதை படித்தவனைப் போல “இங்க என் அனுமதியில்லாம யாரும் வரமாட்டாங்கடி. பயப்படாதே” என்றான்.


தனக்கு முதுகு காட்டி நின்றவளின் தேகம் நடுக்கம் கொள்வதை ரசித்தவனுக்கு முதுகின் ஒரு ஓரமாய் இருந்த மச்சம் போதையூட்டியது. என்னைத் தீண்டிப் பார் என்று அறைக்கூவல் விடுப்பதை போல உணர்ந்தவன் அந்த மச்சத்தில் முத்தமிட்டான்.


ஆழினி கூச்சத்தில் முதுகைச் சுருக்க, அவளது ஆரி ப்ளவுசின் நாட் கயிறுகள் அவனுக்குத் தொந்தரவாக இருக்க, முடிச்சை அவிழ்த்தவன் முதுகெங்கும் முத்தமிட்டு முயங்கினான்.


திடீரென அவனது காதுக்குள் ஒரு குரல் கேட்டது.


“விடாதீங்க சார் இவனை. என் அம்மாவோட நகையை இவன் தான் திருடியிருப்பான். உண்மையை சொல்ற வரைக்கும் விடாதீங்க”


உடனே சுரீர் என்ற வலி உச்சந்தலையைத் தாக்க இதுவரை மென்மையான கணவனாக இருந்தவன் வெறிகொண்ட ராட்சசனாக மாறி ஆழினியைத் தூர தள்ளினான்.


அவன் தள்ளிய வேகத்தில் தண்ணீரில் விழுந்தவள் மூச்சு வாங்க மீண்டும் எழுந்து நின்றாள்.


ஏன் இப்படி முன்னுக்குப் பின் முரணாக நடந்துகொள்கிறான் என்ற குழப்பம் மங்கையவளுக்கு. அவளது குழப்பத்தை ரசித்தன அவனது கோபம் கப்பிய விழிகள்.


தண்ணீரிலிருந்து வெளியேறி கரையறியவன் “என் ரூமுக்கு வா” என்று கட்டளை போட்டுவிட்டு பாத்ரோபைக் கட்டிக்கொண்டு சென்றுவிட ஆழினியும் கரையேறினாள்.


ஈரச்சேலையை மாற்ற வேண்டும். இல்லை என்றால் கட்டாயம் ஜலதோசம் பிடிக்கும்.


வேந்தனின் அறைக்குள் பிரவேசித்தவள் அங்கே அவன் அவளுக்கு முதுகு காட்டியவாறு டவலுடன் நிற்பதை கண்டு யோசனைக்கு ஆளானாள்.


அதற்கு காரணம் அவனது நடுமுதுகில் இருந்த கழுகு வடிவ டாட்டூ. இதை முன்பே எங்கோ பார்த்திருக்கிறாள்.


அவசரமாக அவன் முன்னே வந்து நின்றவள் “உங்க முதுகுல இருக்கிற டாட்டூவ இதுக்கு முன்னாடி நான் எங்கயோ பார்த்திருக்கிறேன் வேந்தன்” என்க, புகழ்வேந்தனோ “போலீஸ் ஸ்டேசன்ல பார்த்திருப்ப ஆழினிதேவி” என்றான் எள்ளலாக.


ஆழினியின் மூளை பரபரவென யோசித்தது. எங்கே? எப்போது? எப்படி?


முடிவில் விடை கண்டுகொண்ட மூளை புகழ்வேந்தனை காறி உமிழ்ந்தது.


“என் அம்மாவோட பாரம்பரிய நகைகளை நீ தான் திருடினாயா? அன்னிக்கு போலீஸ் ஸ்டேசன்ல அடி வாங்கியவன் நீ தானா?” துவேசமாக கேட்டவளின் கழுத்து அடுத்த நொடி வேந்தனின் கைப்பிடிக்குள் இருந்தது.


“யாரை பார்த்து திருடன்னு சொல்றடி?” என்று கேட்டவாறு குரல்வளையில் அழுத்தம் கொடுத்தவனின் கண்களில் கொலைவெறி மின்னியது. ஆழினியோ கண்கள் பிதுங்க, தொண்டை வலி எடுக்க மூச்சுக்கு போராடியவாறு அவனது கைகளை விலக்க முயன்றாள்.


“வி…வி…க்…க்க்… டு”


அவள் மூச்சுக்கு திணறியதும் “சே” என்று தள்ளி விட்டவன் ஈரச்சிகையை கோபத்தோடு கோதிக்கொண்டான்.


தரையில் விழுந்து கிடந்தவள் லொக் லொக்கென இருமவும் மூர்க்கமாக அவளருகே வந்தவன் குத்துக்காலிட்டு நின்று அவளது சிகைக் கொத்தாகப் பற்றினான்.


ஆழினி வலியில் துடிக்கவும் “இப்படி தான் அன்னிக்கு எனக்கு வலிச்சிதுடி. எனக்கு திருட்டுப்பட்டம் கட்டி போலீஸ் ஸ்டேசன்ல அடி வாங்க வச்சது மறந்து போச்சா? உன் பணக்கார திமிரால நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமாடி? என்ன சொன்ன? நான் திருடனா?” கோபமாய் கேட்டவனின் கண்கள் ரௌத்காரமாய் மின்னியது.


ஆழினியின் முகம் ரத்தப்பசையின்றி வெளுத்தது அவனது கோபத்தில். ஆனால் அவன் அவளுடைய அன்னை மீனாட்சிக்குச் சொந்தமான பாரம்பரிய நகைகள் திருடு போனது உண்மையே. அவளது சித்தி வாயில் வயிற்றில் அடித்து அழுதது கூட ஆழினிக்கு நினைவிருக்கிறது.


“அக்கா நகையெல்லாம் உனக்குப் போட்டு பார்க்கனும்னு ஆசையா இருந்தேன் கண்ணு. இப்படி திருடிட்டுப் போயிட்டானே அந்த வெறும்பயல்”


அன்னையின் நினைவாக இருந்த நகைகள் திருடுபோன வலியை  அவளால் தாங்க முடியவில்லை. அவ்வளவு கோபம் வந்தது. திருடியவனை கொன்று போடுமளவுக்கு கோபம்.


தந்தை போலீசில் புகாரளித்தது தெரிந்து காவல் நிலையத்துக்கே வந்து திருடனை நைய புடைத்து விசாரிக்கும்படி கேட்டுக்கொண்டவள் ஆழினியே. அன்று போலிசாரிடம் அடி வாங்கிக்கொண்டிருந்த திருடனின் முதுகில் இருந்த கழுகு டாட்டூவை அவள் மறக்கவே மாட்டாள்.


அதே டாட்டூ புகழ்வேந்தனின் முதுகில். உணர்ச்சிவசப்பட்டு ஏன் திருடினாய் என்றதும் அவனது ரவுத்திரம் அதிகரித்து அவளைக் கொல்லுமளவுக்குப் போன அதிர்ச்சியை ஆழினியால் சீரணிக்க முடியவில்லை.


அப்படி என்றால் இவன் திருடவில்லையா? ஏன் அப்பாவும் சித்தியும் புகழ்வேந்தன் திருடினான் என்று தன்னிடம் அன்றே சொல்லவில்லை? திருடன் யாரென்றே சொல்லாமல் ஏன் போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்துச் சென்றார்கள்?


குழப்பம் உண்டாக புகழ்வேந்தனை பயத்தோடு ஏறிட்டாள் ஆழினி.


இன்னும் ரௌத்திரம் மின்னியது அவனது முகத்தில்.


“உன்னை காதலிச்சேன்ங்கிற ஒரே குற்றத்துக்காக நான் எவ்வளவு அசிங்கப்பட்டேன், என் குடும்பம் எவ்வளவு துன்பம் அனுபவிச்சுதுனு நல்லா தெரிந்தும் ஏன் உன்னை கல்யாணம் செய்துக்கிட்டேன் தெரியுமா? நாங்க பட்ட கஷ்டத்தை விட ஆயிரம் மடங்கு துன்பத்தை உனக்கு கொடுக்கனும் என்பதற்காக தான்”


அதற்கு மேல் பேச விருப்பமற்று எழுந்தவன் ஆடை மாற்ற துவங்கினான்.


ஆழினியோ இவனது காதலை மறுத்தது தவிர வேறு எதையும் செய்யவில்லையே என்று மருகினாள்.


அவளது முகம் வேதனையில் கலங்குவதைப் பார்த்ததும் அத்துணை நேரமிருந்த ரௌத்காரம் அகன்றது. ஒரு காலத்தில் அவன் அவளைக் காதலித்திருக்கிறானே. அந்த காதல் ஆழினியின் முகம் வேதனையில் கசங்கினால் அவனது இதயத்தைக் கசக்குகிறதே. அந்த காதல் அவனை அவளிடம் கனிவு காட்டு என்று ஆணையிடுகிறதே.


எப்பேர்ப்பட்ட மனிதனும் சில நேரங்களில் இதயத்தின் முடிவை கேட்பான். புகழ்வேந்தனும் கேட்டான்.


“இன்னும் எவ்வளவு நேரம் ஈர ட்ரஸ்சில இருக்கிறதா எண்ணம்?” அக்கறையாய் கேட்க விரும்பியவனுக்கு குரல் ஒத்துழைக்கவில்லை. எனவே அவனது கேள்வி எள்ளலாகவே ஒலித்தது.


ஆழினி இனியும் இவன் குட்ட குட்ட குனியக்கூடாதென்ற தீர்மானத்தோடு தலையை நிமிர்த்தினாள்.


“என் ட்ரஸ் எதையும் எடுத்திட்டு வரலை” என்றாள் ஆழினி.


புகழ்வேந்தன் புதிதாக அந்த அறையில் முளைத்திருந்த கண்ணாடி பதித்த தேக்கு மர பீரோவின் கதவைத் திறந்தான்.


“இந்த புடவை எல்லாம் உனக்காக வாங்கினது. பிடிக்கலைனாலும் இதை நீ கட்டியாகணும். இதுல இருந்து ஒரு புடவையை கட்டிக்க”


கட்டில் மீதமர்ந்து கட்டளையாய் முழங்கினான் புகழ்வேந்தன்.


அவனை வெறுப்பாகப் பார்த்த ஆழினி முடியாது என்பது போல் நிமிர்வாய் நின்றாள். புகழ்வேந்தனின் பார்வை அவளது திமிர் நிறைந்த விழிகளை ரசித்துவிட்டு உடலின் வளைவு நெளிவுகளை வஞ்சனையின்றி ரசித்தது.


“ச்சீய்”


கணவனின் உரிமை பார்வையில் அருவெறுப்பாக முகத்தைத் திருப்பிக்கொண்டாள் ஆழினி.


புகழ்வேந்தனோ எழுந்து சென்று பீரோவைத் திறந்து புடவையை எடுத்து அவள் முகத்தில் விசிறியடித்தான்.


“ஃபெர்ஸ்ட் நைட்டுக்கு நீ இதை கட்டனும். இது என் கட்டளை. வேந்தனோட கட்டளையை மீறுறவங்களுக்குத் தண்டனை கொடுமையானதா இருக்கும். புரிஞ்சு நடந்துக்க ஹனி”


ஆழினி புடவையை எடுத்துக்கொண்டாள்.


“புடவை இருக்கு. அதுக்கு ஜாக்கெட் இல்லை. புடவை வாங்கின புத்திசாலி ஜாக்கெட்டும் தைத்து வைச்சிருக்கலாம்”


எரிச்சலுடன் கொதித்தாள் அவள்.


உடனே புகழ்வேந்தனின் இதழ்கள் ஏளனமாக வளைந்தது. அலட்சியத்தோடு பீரோவின் இன்னொரு பக்கத்து கதவைத் திறந்தான்.


அதில் ரெடிமேட் ஜாக்கெட்கள் தொங்கின.


“எனக்கு உன் அளவு அத்துப்படி ஹனி. சரியான அளவுக்கு வாங்கியிருக்கேன்”


தாபத்துடன் வந்தது வார்த்தைகள் மட்டுமல்ல, புகழ்வேந்தனின் பார்வையுமே.


ஆழினியின் முகம் ரத்த நிறம் கொண்டது. அதை ரசித்தபடி அருகே வந்தவன் முகவாயைத் தொட்டு நிமிர்த்தினான்.


“வெட்கமா ஹனி? இதுக்கு மேல் எதுக்கு வெட்கம்? உன் உடம்போட ஒவ்வொரு அங்குலமும் எனக்கு மனப்பாடம். எந்த இடத்துல மச்சம் இருக்குனு பரீட்சை வைச்சா அதில் டிஸ்டிங்சன் எடுக்குற அளவுக்கு நீயும் உன் உடம்பும் எனக்குப் பரிச்சயம். ஃபெர்ஸ்ட் நைட் எல்லாம் ஊருக்கு. உனக்கும் எனக்கும் இது செகண்ட் நைட். இந்த புடவைய கட்டி நம்ம செகண்ட் நைட்டுக்கு தயாராகு ஹனி”


தாபத்தில் மிளிர்ந்த விழிகள் அணுவணுவாக அவளை ரசிக்க தனது முரட்டு இதழால் ஆழினியின் செவ்விதழ்களை களவாட ஆரம்பித்தான் புகழ்வேந்தன்.


அவனது தேடலை முடித்துக்கொண்டு தி

ருப்தியோடு விலகியவன் “ஈரச்சேலையை மாற்றிக்க. சளி பிடிச்சிருக்கு அது இதுனு சொல்லி செகண்ட் நைட்டை அவாய் செய்திடலாம்னு கனவு காணாதே” என்று அவளிடம் ஆணையிட்டுவிட்டு அங்கிருந்து வெளியே சென்றுவிட்டான்.


Comments

Popular posts from this blog

அத்தியாயம் 4

அத்தியாயம் 8