7 (என் சொந்தமடி)




சஹானாவின் கண்கள் கணினித் திரையை வெறித்துக் கொண்டிருந்தது. ஆனால் மனமோ ஒரு வாரத்துக்கு முந்தைய சம்பவத்தை நினைத்துக் கொண்டிருந்தது. ஏதோ இப்போது நடந்தது போல அச்சம்பவத்தை நினைத்தால் உடல் நடுங்கியது. இது நல்லதற்கல்ல என்று மூளை எச்சரித்தது. கண்டிப்பாக இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டிய கட்டாயம் சஹானாவுக்கு. 

அன்னை தந்தையை இழந்தவளுக்கு நல்ல கல்வியையும் தைரியத்தையும் வழங்கியவரது கௌரவத்துக்கு குந்தகம் ஏற்படாது காப்பது அவளது கடமை. சர்வேஸ்வரால் அவளது நடத்தை பற்றிய தவறான பேச்சு பரவுமாயின் அது மாமாவுக்கு தான் இழுக்கு என்று எண்ணி எண்ணியே மருகினாள் அப்பேதை. 

வீட்டினரிடமும் சொல்ல முடியாத சூழ்நிலை. சொன்னால் மாமா கவலையுறுவார். அத்தை எகத்தாளமாகப் பேசுவார். விசாகா துணிச்சலானவள் என்பதால் திடுதிடுப்பென்று எதையும் செய்து வைத்து அது சர்வேஸ்வரின் கோபத்தைத் தூண்டியதாகி விடக்கூடாது. இவ்வாறு பல்வேறு கோணங்களில் சிந்தித்தவளுக்கு இரவில் உறக்கம் அரிதாகிப் போனது. 

இந்த ஒரு வாரமாக யாரோ கண்காணிக்கும் உணர்வு அதிகரித்ததே தவிர குறையவில்லை. ஆனால் அது தனது மாயை என்று சமாதானப்படுத்திக் கொண்ட சஹானாவுக்கு வேலையில் முழுக்கவனம் செலுத்த முடியவில்லை. இப்போதும் அதே நிலையில் உழன்றவளது தோளைப் பற்றி குலுக்கி சுயநினைவுக்குக் கொண்டு வந்தாள் ஹாசினி. 

என்னவென்று திடுக்கிட்டு விழித்த சஹானாவிடம் "உன்னை எம்.டி பாக்கனும்னு சொன்னார்னு மேனேஜர்ட இருந்து கால் வந்திருக்கு சஹா. போய் என்னனு கேட்டுட்டு வா" என சொல்லிவிட சஹானா பெருமூச்சுடன் தன் இருக்கையை விட்டு எழுந்தாள். 

மேலாண்மை இயக்குனரின் அறை இருக்கும் தளத்துக்கு மின்தூக்கியில் சென்றவள் அவரது அறைக்கதவை நாசூக்காக தட்டிவிட்டு உள்ளே இருந்து பதில் வருவதற்காக காத்திருக்க அவள் எதிர்பார்த்தபடி "எஸ், கமின்" என்ற குரல் வரவும் உள்ளே சென்றாள். அங்கே சுழல்நாற்காலியின் முதுகுப்புறம் தெரிய மேலாண்மை இயக்குனரின் தலை மட்டுமே அவளது பார்வைக்கு கிடைத்தது. 

அவர் திரும்பும் வரை காத்திருக்க முடிவு செய்தவளின் பார்வை அந்த அறையை அலசியது. சில்லென்ற குளிர்க்காற்றை வாரி வழங்கிய ஏஸி, நீளமான கண்ணாடி பதித்த மேஜை, அதில் அழகாய் வீற்றிருந்த கணினி, கலைநயமான பேனா ஸ்டாண்ட், கோப்புகள் அடங்கிய கண்ணாடி பேழைகள் என அறையின் உள் கட்டமைப்பு அருமையாகவும் திட்டமிட்டும் வடிவமைக்கப்பட்டிருக்க அதை ரசித்தபடி நின்றிருந்தவளின் கவனத்தைச் சுழல்நாற்காலி தன் பக்கம் திருப்பிவிட புன்னகையுடன் திரும்பியவளின் முகம் பேயறைந்தாற் போல மாறிவிட்டது. 

அங்கே அமர்ந்திருந்தவன் சர்வரேஸ்வர். அவளை பார்த்ததும் நிதானத்துடன் புன்னகை சிந்திவிட்டு இருக்கையில் இறுமாப்புடன் அமர்ந்து கொண்டான். வழக்கம் போல கம்பீரமும் அலட்சியமும் போட்டி போட அவளை நோக்கிவிட்டு உச்சு கொட்டியவனை வெட்டுவது போல நோக்கினாள் சஹானா. அவளின் கயல்விழிகள் வாள் சுழற்றும் அழகில் சில நொடி மெய் மறந்தாலும் பதிலுக்கு அவனது விழிகளும் கத்தியைச் சுழற்ற தவறவில்லை. 

இருவரின் பார்வை யுத்தம் நீள்வதில் சர்வேஸ்வருக்கு விருப்பம் இல்லை. அதை வார்த்தைப்போராக மாற்ற விரும்பியவனுக்கு சஹானாவின் குரலில் தெறிக்கும் கோபம் இப்போதெல்லாம் மிகவும் பிடித்த ஒன்றாகிவிட்டது. 

"வெல்கம் டு மை ரூம் பேப். டூ யூ லைக் திஸ் இண்டீரியர்? ஏன் கேக்குறேன்னா நீ ரொம்ப ரசிச்சு பாத்தியே, அதனால தான். உனக்கு எதுவும் சேஞ்ச் பண்ணனும்னு தோணுச்சுனா தாராளமா என் கிட்ட சொல்லலாம் பேப்" 

ரொம்பவும் பெருந்தன்மை தான் என்று மனதிற்குள் அவனைத் திட்டித் தீர்த்தவளுக்கு வார்த்தைகள் உதடு தாண்டவில்லை. அவனை பார்த்த அதிர்ச்சியே போதும் போதுமென்று இருக்க போதாக்குறைக்கு அவன் மேலதிகாரி என்பதே பாகற்காய் சாறு குடித்தாற் போன்ற உணர்வை தோற்றுவித்தது. 

அவள் பேசாது மௌனம் காப்பது அவனுக்கு அசுவாரசியமாய் தோண "வாட் இஸ் திஸ் பேப்? நான் உன் கிட்ட நெறய எதிர்பாத்தேன். நீ என்னடானா இவ்வளவு சைலண்டா இருக்க. எனக்கு போர் அடிக்குதே. எதாவது பேசு பேப். ஒருவேளை என்னை பாத்து உனக்கு பயம் வந்துடுச்சா என்ன?" என்று சீண்டிவிட சஹானா அடிபட்ட புலியாய் சீறத் தொடங்கினாள். 

"ஷட்டப். உன் கிட்ட பேச எனக்கு விருப்பமில்ல. அதுக்காக உன்னை பாத்து எனக்கு பயம்னு நினைச்சேனா நீ நம்பர் ஒன் முட்டாள் சர்வா" 

இப்போது சர்வேஸ்வரின் விழிகளில் சுவாரசியம் கூடியது. கூடவே அவளது அழகை கண்களால் பருகும் வாய்ப்பும் கிடைக்கவே அதையும் தவறாது செய்தவனை சினத்துடன் ஏறிட்ட சஹானா 

"என் கிட்ட என்ன பேசனும் உனக்கு? நீ தான் எம்.டினு தெரிஞ்சிருந்தா சத்தியமா உன் ரூமுக்கு வந்திருக்க மாட்டேன். என்ன விசயம்னு சொன்னா நான் போய் என் வேலைய பாப்பேன்" 

அவள் அவ்வாறு சொன்னதும் சர்வேஸ்வர் இருக்கையை விட்டு எழ சஹானாவுக்கு உள்ளுக்குள் இதயம் தாறுமாறாக அடித்துக் கொண்டது. எழுந்தவன் அவளை நோக்கி அடியெடுத்து வைக்க அவளது கால்கள் தன்னிச்சையாக பின்னடைய சர்வேஸ்வரின் இதழில் ஒரு குறுஞ்சிரிப்பு மலர அவன் வேக எட்டுகளில் அவளைத் தன்னுடன் இழுத்து அணைத்திருந்தான். 

அவன் ஏடாகூடமாய் நடந்து கொள்வான் என்று எதிர்பார்த்திருந்தாலும் அலுவலகத்தில் குறைந்தபட்ச நாகரிகத்தை கடைப்பிடிப்பான் என்று தப்புக்கணக்கு போட்டுவிட்டாள் சஹானா. அதன் விளைவு இப்போது அவனது வலிய கரங்களுக்குள் சிக்குண்டு தப்பிக்க வழியின்றி விழித்தாள். 

சங்கடத்துடன் அவனது கரங்களை விலக்க முயன்றபடி "மரியாதையா என்னை விடு. இல்லனா கத்தி கூச்சல் போட்டு உன் ஆபிஸ் ஸ்டாப் முன்னாடி உன் மானத்தை வாங்கிடுவேன் சர்வா" என்றவளின் குரலில் இருந்த கோபம் அவனைச் சீண்ட 

"நீ ட்ரை பண்ணி பாரு பேப். நீ எனக்கு சொந்தமானவனு நான் எல்லார் முன்னாடியும் தைரியமா சொல்லுவேன். நான் சொல்லுறதோட நிக்கிறவன் இல்லனு உனக்கு தெரிஞ்சிருக்கும்" என்று குறிப்பாய் சொன்னபடி அவளது இதழை நோக்கியவனின் பார்வையில் சஹானாவுக்கு இதயம் தடதடத்தது. 

இல்லை. இது சண்டை போடுவதற்கான நேரம் இல்லை. இவனிடமிருந்து விடுபட புத்திசாலித்தனமாக யோசிக்கவேண்டும். ஆனால் இவன் புத்திசாலிக்கு எல்லாம் அதிபுத்திசாலியாக இருக்கிறானே. 

அவனே அவளை விட்டு விலகவும் சஹானா ஒரு முடிவுடன் நிமிர்ந்தாள். அவனை நேராய் நோக்கி 

"நீ தான் இந்த கம்பெனி எம்.டினு எனக்கு இவ்வளவு நாளா தெரியாது. ஆனா தெரிஞ்சதுக்கு அப்புறமும் இங்க நான் ஒர்க் பண்ணுனேனா என்னை மாதிரி முட்டாள் யாரும் இருக்க மாட்டாங்க. இன்னும் ஒரு மணி நேரத்துல என்னோட ரெசிக்னேசன் லெட்டர் வரும்" என்று தீர்மானக்குரலில் உரைக்க சர்வேஸ்வர் அதற்கு அசரவில்லை. 

இன்னும் அவன் கண்களில் அதே கர்வம் மிச்சமிருக்கவே சஹானா திகைத்தாள். தான் ராஜினாமா செய்யப்போவது இவனுக்குப் பிரச்சனை இல்லை போல என்று எண்ணமிடும் பொழுதே சர்வேஸ்வரின் தொண்டைக்கனைப்பு அவளை மீண்டும் நிமிர வைத்தது. 

"நீ இங்க ஜாயின் பண்ணுறதுக்கு முன்னாடி உனக்கு குடுத்த ஆபர் லெட்டரை வாசிச்சி பாத்தியா பேப்? இந்த கம்பெனியோட ரூல்ஸ் அன்ட் ரெகுலேசனுக்கு ஒத்துக்கிறேனு சொல்லி தான் நீ இங்க ஜாயின் பண்ணிருக்க. இங்க இருந்து ரிலீவ் ஆகனும்னா நீ மூனு மாச நோட்டிஸ் குடுத்திருக்கனும் சஹா. அது படி பாத்தா கூட இன்னும் மூனு மாசம் நீ என் கண் முன்னாடி இதே ஆபிஸ்ல தான் இருக்கனும். நீ முட்டாள் இல்லனு நெனைக்கிறேன்" 

சஹானா மானசீகமாகத் தன் தலைவிதியை நொந்து கொண்டாள். எப்படி அவள் இந்த விசயத்தை மறந்தாள்? ஆனால் வெறும் மூன்று மாதங்கள் தானே. மூன்று மாதங்களில் இந்த ராட்சசன் தேவதூதனாக மாறிவிடப் போகிறானா என்ன? இவ்வாறு சிந்தித்தவள் அவன் போகலாம் என்று கையசைக்கவும் அங்கிருந்து வெளியேறினாள். 

மாலை வரை இதே அல்லாட்டமான மனநிலையில் சிக்கித் தவித்தவளுக்கு அன்றைக்கு ஹாசினி சீக்கிரமே கிளம்பிவிட இன்றைய வேலை மிச்சமிருந்ததாலவள் கிளம்பவில்லை. வேலையை முடித்து விட்டு நேரத்தைப் பார்த்தவளுக்கு அதிர்ச்சி தான். இனியும் தாமதித்தால் அத்தையின் தேவையற்ற பேச்சுக்களைக் கேட்க வேண்டியதாய் இருக்கும். 

அந்த யோசனையுடன் வெளியேறியவள் பேருந்து நிறுத்தத்தை அடைந்து அங்கே பேருந்துக்காக காத்திருக்கத் தொடங்கினாள். அப்போது அங்கே வந்து நின்றது மெர்சிடிஸ் பென்ஸ் மேபாக். முதலில் சஹானா அதைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால் அதனுள் இருந்து வெளியே வந்தவனைக் கண்டதும் மனதில் சலிப்பு தோன்றியது. 

முகத்தைச் சுழித்துக்கொண்டு வேறு புறம் பார்த்தவளுக்கு அவன் அருகே வந்ததும் அவனைத் தவிர்க்கும் தைரியம் இல்லை. சிரமத்துடன் அவன் முகத்தை ஏறிட்டவளுக்கு அவனது கண்களில் தெரிந்த திமிரும் அலட்சியமும் எரிச்சலை உண்டாக்கியது. 

பற்களை கடித்தபடியே "எதுக்கு இப்ப காரை நிறுத்திட்டு வந்திருக்க?" என்று தங்களையே கவனித்துக் கொண்டிருக்கும் மக்கள் கூட்டத்தைப் பார்த்தவாறு கேட்டவளிடம் 

"வந்து கார்ல உக்காரு பேப். என்ன விசயம்னு சொல்லுறேன்" என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டு நின்றான் சர்வேஸ்வர். சஹானாவோ வர முடியாது என்ற ரீதியில் அவனைப் பார்க்க அவன் ஒரு கணம் உறுத்து விழிக்க அவளது முதுகுத்தண்டு ஜில்லிட்டது. 

இவன் இவ்வாறு பார்க்கும் போது அவளுக்குள் எப்போதுமே ஒரு வித பயம் பரவுவதை சஹானாவால் தவிர்க்க முடிவதில்லை. எனவே மறுபேச்சின்றி அவனது காரில் அமர்ந்தவளிடம் "சீட்பெல்டை போடு பேப்" என்று கனிவான குரலில் கூறியவனா சில நிமிடங்களுக்கு முன்னர் தன்னை உறுத்து விழித்தான் என்று எண்ணுமளவுக்கு அவன் முகத்தில் கனிவு சொட்டியது. 

சஹானா திகைத்து விழிக்கையிலேயே அவளை நெருங்கி சீட்பெல்டை மாட்டி விட்டவனின் விரல்கள் அவள் கழுத்தில் உரச சஹானா மூச்சுவிட மறந்து சிலையாய் சமைந்தாள். அவளது அருகில் அமர்ந்திருந்தவனோ அவளது அருகாமையில் ஜொலிக்கும் அவளது அழகிய வதனத்தில், துடிக்கும் இதழ்களில் தன்னை தொலைத்தான். 

அவளைத் தீண்ட உயர்ந்த கைகளை அவள் விழி விரித்து நோக்கவும் தாழ்த்திக் கொண்டவன் கரகரப்பான குரலில் "லெட்ஸ் கோ" என்று முணுமுணுத்துவிட்டு காரைச் செலுத்த ஆரம்பித்தான். 

கார் அவளது வீட்டுக்குச் செல்லாமல் வேறு எங்கோ செல்வதையே அவள் தாமதமாகத் தான் உணர்ந்தாள். அது தெரிந்ததும் பதற்றத்தில் அவளுக்கு வியர்க்கத் துவங்க திக்கித் திணறி "இப்ப நம்ம எங்க போறோம் சர்வா? இது எங்க வீட்டுக்கு போற வழியில்ல" என்று சொன்னவளை சாவகாசமாக ஏறிட்டவன் 

"நாம இப்ப உங்க வீட்டுக்கு போகப்போறோம்னு நான் உன் கிட்ட சொன்னேனா? ஐ வாண்ட் டு ஸ்பெண்ட் சம் டைம் வித் யூ பேப். நாம என்னோட வீட்டுக்கு ஐ மீன் உன்னோட பியூச்சர் ஹோமுக்கு போறோம்" என்று சொல்லவும் சஹானாவுக்குப் பயத்தில் தொண்டை உலர்ந்தது. 

அவள் தைரியமான பெண் தான். அவளை யாரேனும் கத்தியால் தாக்க முனைந்தால் பதிலுக்கு அவர்களைத் தாக்குமளவுக்கு அவளுக்கு தைரியம் உள்ளது. ஆனால் இவன் அப்படி இல்லையே. இவனது சீறும் பார்வையும், அவள் அருகில் குழையும் குரலும், அவனது விரல்களின் சீண்டலும், இதழ்களின் வன்மையும் அவளைப் பலவீனமாக்கி கொண்டிருப்பதை அவள் நன்கு அறிவாள். 

இப்போது தனிமையில் அவனுடன் நேரம் செலவளிப்பது அவளுக்குச் சரியாக படவில்லை. பெண்மைக்கு உரித்தான எச்சரிக்கையுணர்வு எழ அவனிடம் மறுப்பதற்கு வாயெடுத்தவளை பார்வையாலே அமைதியாக்கினான் சர்வேஸ்வர். கார் சென்னையின் ஆளரவமற்ற புறநகர்ப்பகுதியில் உயர்மட்டத்தினர் வசிக்கும் பகுதியில் சென்று கொண்டிருந்தது. 

வானுயர்ந்த மரங்கள் இருளில் பூதங்களைப் போல தோற்றமளித்தது. சர்வேஸ்வர் அவள் மனநிலையை உணர்ந்தவனாய் அவளது கரத்தை அழுத்தி அவள் பயத்தைப் போக்க முயல சஹானாவோ "என் பயமே உன்ன நெனைச்சு தானேடா" என்று யோசித்தபடி கையை அவனிடமிருந்து உருவிக்கொண்டாள். 

கார் ஒரு பெரிய மாளிகையில் நுழையவவும் சஹானாவுக்குத் திக்திக்கென்று இருந்தது. சர்வேஸ்வர் காரை அதற்குரிய இடத்தில் நிறுத்திவிட்டு சஹானாவுக்கு கதைவைத் திறந்துவிட அவளது கால்கள் தூண்களாய் கனத்தது. விருப்பமின்றி இறங்கியவள் மருட்சியுடன் அந்த இடத்தைப் பார்க்க சர்வேஸ்வர் அவளை தோளோடு அணைத்துக் கொண்டு வீட்டுக்குள் அழைத்துச் சென்றான். 

மாளிகையின் பிரம்மாண்டம், அதன் உள்கட்டமைப்பில் மனம் ஒரு புறம் மயங்கினாலும் சஹானாவுக்கு முன் பின் தெரியாத ஒருவனுடன் அவனது இருப்பிடத்துக்கு வந்தது பயத்தைத் தான் அளித்திருந்தது. சர்வேஸ்வர் அவளை வீட்டைச் சுற்றி பார்க்குமாறு சொல்லிவிட்டு தனது அறைக்குச் சென்றவன் கசகசப்பு நீங்க குளித்து உடை மாற்றிவிட்டுத் திரும்பினான். 

சஹானா அவன் விட்டுச் சென்ற இடத்தில் விட்டு சென்ற நிலையிலேயே நின்று கொண்டிருந்தாள். மாளிகை விளக்குகளின் வெளிச்சத்தில் க்ரீம் நிற டாப் அவளது சந்தன நிறத்தோடு பொருந்தியிருக்க கூந்தல் அருவியாய் ஓடி அவளது இடையைத் தொட யோசனையுடன் உதட்டைக் கடித்தபடி நின்றிருந்தவளின் அழகில் ஒரு நிமிடம் சொக்கியவன் பெருமூச்சு விட்டபடி அவளை நெருங்கினான். 

சஹானா திடீரென்று தனது இடையில் அவன் விரல்களின் ஸ்பரிசம் பரவவும் திடுக்கிட்டுத் திரும்பியவள் அவன் மீது மோதி நின்றாள். அவளின் மெல்லிய மேனி மோதியதில் அவன் தேக்கு மர தேகம் ஓய்ந்து போனது என்னவோ உண்மை. 

"என் கூட வா சனா" என்று ஹஸ்கி குரலில் உருகியவன் அவளது இடையைப் பற்றியபடியே தோட்டத்துக்கு அழைத்துச் சென்றான். சஹானாவுக்கு அவனது விரல்களின் ஸ்பரிசமும் தனது தோள்களில் உரசும் அவன் புஜங்களின் வலிமையும் குறுகுறுவென்று இருக்க இவனிடமிருந்து தப்புவது எவ்வாறு என்று யோசித்தபடி நடந்தாள். 

தோட்டத்தின் வலதுபக்க மூளையில் அழகான குடில் அமைக்கப்பட்டிருக்க அங்கே மெல்லிய வெளிச்சம் கசிந்தது. ஒரு மேஜை போடப்பட்டு அதில் உணவு பதார்த்தங்கள் அழகாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. சஹானாவுக்கு ஒரு நிமிடம் "ஓ மூன் லைட் டின்னரா?" என்று கேலியாய் மனதில் தோன்றினாலும் தனக்காக வீட்டினர் காத்திருப்பரே என்ற எண்ணம் தோணவும் அவனது அணைப்பிலிருந்து வெளியே வந்தாள். 

சர்வேஸ்வர் சாவகாசமாய் நாற்காலியில் அமர்ந்துவிட்டு அவளுக்கு எதிர்புற நாற்காலியைக் கைகாட்ட சஹானா அமர பிடிக்காதவளாய் முகத்தைச் சுழித்தாள். 

"என்னால உன் கூட உக்காந்து டின்னர் சாப்ட முடியாது சர்வா. என் வீட்டுல எல்லாரும் எனக்காக காத்திருப்பாங்க" என்று வெகு சிரமத்துடன் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கூறியவள் இதற்கு மேல் இங்கே நின்றால் அவனது கோபத்துக்குப் பயந்து அங்கேயே இருந்துவிடுவோம் என்று கிளம்ப எத்தனிக்க அடுத்த நொடி அவள் சர்வேஸ்வரின் மடியில் அவனது அணைப்புக்குள் சிக்கியிருந்தாள். 

அவளது இடையில் அழுத்திய கரங்கள் தோளை வளைத்திருக்க ஒற்றைவிரலால் அவளது இதழ்களை அளந்தபடி "உன் பெர்மிசனோட உன்ன இங்க கூட்டிட்டு வரல. எனக்கு எப்ப தோணுதோ அப்ப தான் நீ இங்க இருந்து போக முடியும் பேப். புரியுதா?" என்றவனின் விரல்கள் அவள் கன்னத்தில் கோலமிட சஹானா திமிறினாள். 

"நீ இப்டி திமிறுனா நான் உன்ன லாக் பண்ண வேண்டியிருக்கும். ஐ மீன் உன்னோட" என்றபடி அவளின் அழகான ஸ்ட்ராபெர்ரி இதழ்களை நோக்க சஹானா பதறி விழித்தாள். அவள் பதறி விழிக்கவும் சத்தமாக நகைத்த சர்வேஸ்வர் 

"என்னமோ நான் முதல் தடவை உன்ன கிஸ் பண்ண போற மாதிரி டென்சன் ஆகுறியே சனா. இந்த ஸ்ட்ராபெர்ரி லிப்சோட டேஸ்ட் இன்னும் என் மனசுல இனிக்குது" என்று ஹஸ்கி குரலில் கூறியவன் அவள் இதழை நோக்கி குனிய சஹானா அவசரமாக 

"சரி நான் இங்க இருந்து போகல. பிளீஸ் என்னை கொஞ்சம் விடு" என்று இறைஞ்சும் குரலில் கூறவும் பெருமூச்சுடன் அவளை விடுவித்தவன் தனது எதிரில் கிடக்கும் நாற்காலியைக் காட்டினான். சஹானாவும் வேறு வழியின்றி அதில் அமர்ந்தாள். 

சர்வேஸ்வர் மனதுக்குள் "நீ எவ்வளவு நம்பிக்கையா திமிரா பேசுனல்ல? இனிமே உன் வாழ்க்கைல நடக்குற ஒவ்வொன்னும் நான் தீர்மானிச்சதா தான் இருக்கும்.. நீ எனக்கு சொந்தமானவ சனா" என்று பிடிவாதத்துடன் சொன்னபடி தன்னெதிரே அமர்ந்து உண்பவளை ரசிக்கத் தொடங்கினான்.

Comments

Post a Comment

Popular posts from this blog

அத்தியாயம் 7

அத்தியாயம் 4

அத்தியாயம் 8