அத்தியாயம் 7
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சம்யுக்தாவுடன் நின்று கொண்டிருந்தாள் மித்ரவிந்தா. சம்யுக்தா தனது சொந்த ஊருக்குச் செல்ல மித்ரவிந்தா அவளை வழியனுப்ப வந்திருந்தாள். "ஸ்டடி ஹாலிடேனு ஊருக்கு கிளம்பினது ஓகே. ஆனா எக்சாமுக்குக் கொஞ்சமாவது படி சம்யூ. ஆண்ட்டி அங்கிளை நான் ரொம்ப விசாரிச்சேனு சொல்லு" "நான் ஊருக்குப் போனதும் செய்ற முதல் வேலையே இந்த புக்கை எல்லாம் தலைய சுத்தி வீசுறது தான்" என்று கிண்டலாக சொல்லி அவளிடம் அடி வாங்கிக் கொண்டாள் சம்யுக்தா. பேருந்து கிளம்பத் தயாராகவும் அவள் அதில் ஏறிக்கொள்ள அவளுக்கு கையசைத்துவிட்டு கிளம்பினாள் மித்ரவிந்தா. அங்கிருந்து அவளது வீடு இருக்கும் பகுதிக்கு வந்து சேருவதற்குள் அவள் ஓய்ந்து போனாள் எனலாம். பெருநகரத்தின் போக்குவரத்து நெரிசலின் உபயம் தான். அவர்களின் தெருமுனைக்கு வந்த போதே யாரோ கண்காணிப்பது போல தோன்ற மனதின் உறுத்தலை ஓரங்கட்டியபடி வீட்டின் கேட்டை மூடியவள் படியேறி கதவைத் திறக்க முயன்ற நேரம் "ஹாய் ஹனி" என்ற காந்தக்குரல் காதில் விழ கதவில் வைத்த கை வைத்தபடி இருக்க நிச்சயம் அவனாக இருக்காது, இது என்னவோ பிரம்மை என்று எண்ணியபடி மீண்...