அத்தியாயம் 9

அத்தியாயம் 9 புகழ்வேந்தனின் திருமண வாழ்க்கையின் முதல் நாள் என்பதால் தடபுடலாக காலையுணவைச் சமைக்க சொல்லியிருந்தார் பர்வதம். இட்லி தோசை பொங்கல் என்று ஒரு பக்கம் கமகமக்க, மறுபக்கம் பூரிக்கிழங்கு, சப்பாத்தி சென்னா மசாலா என மணம் கமழ்ந்தது. டைனிங் டேபிளுக்கு வந்தவனிடம் ஆசையாக மருமகளை பற்றி கேட்டார் பர்வதம். “அவள் லேட்டா வருவாம்மா” என்று அவன் சொல்லும்போதே காலர் வைத்த அனார்கலி சுடிதாரோடு வந்தாள் ஆழினி. நாகரிக உடை அணிந்தாலும் மறக்காமல் நெற்றியில் குங்கும திலகத்துடன் வந்த மருமகளை பார்த்ததும் பர்வதம் ஓடிச்சென்று அழைத்து வந்து மகனின் அருகில் அமர வைத்தார். ஆழினி குனிந்த தலை நிமிராது அமர்ந்திருந்தாள். மாமியார் பரிமாறிய சாப்பாட்டை அமைதியாகச் சாப்பிட்டாள். “இன்னும் கொஞ்சம் சட்டினி வைத்துக்கம்மா. வெறும் பொங்கல் சாப்பிட்டால் தொண்டையில் விக்கிக்கும்” என்று அன்பாக பரிமாறிய மாமியாரின் பாசத்தில் கண்ணிமைகள் நனைந்தது. புகழ்வேந்தனோ அவளுக்கு நடந்த உபசரிப்பை விரும்பவில்லை. அதை குழைக்கும்விதமாக நக்கல் பேச்சை ஆரம்பித்தான். “ஓசி கல்யாணம், ஓசி சாப்பாடு. கலக்கிற ஆழினி” விளையாட்டாக மனைவியிடம் பேசுவது போல அவனது பே...