அத்தியாயம் 4

டர்காயிஸ் நீல நிற ஆப் ஷோல்டர் கோல்ட் டாப்பும் வெண்ணிற ஜெகின்சும் அணிந்து தலையை பன்னாக போட்டபடி தயாரானாள் மித்ரவிந்தா. சம்யுக்தாவும் கருப்பு நிறத்தில் டாப் மற்றும் பளாசோ அணிந்து தயாராகியிருந்தவள் தனது புருவத்தைத் திருத்திக் கொண்டிருந்தாள். "இன்னுமா முடியல சம்யூ?" என்றபடி அவளது அறைக்குள் அடியெடுத்து வைத்த மித்ரவிந்தாவை முறைத்தாள் அவள். "உனக்கு நேச்சுரலாவே திக்கான ஐப்ரோ. எனக்கு அப்படியா?" "சரி சரி. இதை சாக்கா வச்சு இன்னும் லேட் பண்ணாதே சம்யூ" என சலித்துக் கொண்டவளுடன் கிளம்பினாள் சம்யுக்தா. மித்ரவிந்தா கேப் புக் செய்திருந்ததால் இருவரும் ஆட்டோ சவாரியின் அசவுகரியங்கள் எதுவுமின்றி வேளச்சேரியை அடைந்தனர். இருவரும் பீனிக்சை சென்றடைந்த போது கூட்டமே இல்லை. தோழியர் இருவரும் ஆச்சரியம் சூழ உள்ளே அடியெடுத்து வைத்தனர். அப்போது மாலின் அனைத்துப் பகுதிகளும் ஒன்றிரண்டு ஆட்கள் மட்டும் நடமாடினர். சம்யுக்தாவும் மித்ரவிந்தாவும் ஜனக்கடலில் திளைக்கும் அந்த மால் இன்று ஏன் காற்று வாங்குகிறது என புரியாது திருதிருவென விழித்தபடி தங்களுக்கு வேண்டிய சரும பராமரிப்பு பொருட்கள் விற்கும் பகு...